ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நேரம் குறைவாக தேவைப்படும் உணவுகளைச் செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால், அதை எப்படி என்று பலருக்கும் தெரியாது. குறைந்த நேரத்தில் ஹெல்த்தியான, சுவையான, சிம்பிளான குழந்தைகளுக்கான உணவை செய்வது எப்படி என்று இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. சத்துள்ள உணவுகள் குழந்தையின் உடலை வளர்க்கும். உடலுறுப்புகள் வளர உதவும். உடல் இயக்கங்கள் செயல்பட உதவும். ஈஸியாக இருக்கிறது என கஞ்சியை நாம் அடிக்கடி செய்து தருவோம். இதனுடன் கைகளாலேயே மசித்து தரக்கூடிய ஃபிங்கர் ஃபுட்ஸ் எனும் வகைகளை குழந்தைக்கு உணவாக கொடுப்பது நல்லது; அவசியமும்கூட. ஆனால், அவற்றை எப்படி செய்வது எனச் சிலருக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், சிம்பிளான நமக்கு தெரிந்த உணவுப் பொருட்களை வைத்து சில நிமிடங்களிலே செய்துவிட முடியும். அவற்றைப் பற்றி இங்கு காண்போமா…
ஓட்ஸ் லட்டு
வெதுவெதுப்பான தண்ணீரை ஓட்ஸில் ஊற்றி ஐந்து நிமிடங்கள் அப்படியேவிடவும். வாணலில் நெய்விட்டு, கடுகு தாளித்து அரைத்த வெங்காயம், கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி போடவும். வதங்கியதும் ஓட்ஸை போட்டு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து 3 நிமிடங்கள் வேக வைத்த பின் கோலி அளவு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து, ஆறியவுடன் குழந்தைக்கு கொடுக்கலாம். கிள்ளிப் போட்ட ஒரு மிளகாயை எடுத்துவிட்டு ஊட்டுவது நல்லது.
- குழந்தைகளுக்கு சத்துள்ள காலை உணவாக அமையும்.
- ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
- இதயத்துக்கு நல்லது.
சாஃப்ட் கட்லெட்
கட்லெட் என்றதும் எண்ணெயில் பொரித்ததா எனப் பயப்பட வேண்டாம். உருளையும், பட்டாணியும் நன்கு வேகவைத்து கைகளாலே மசித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை சீரக தூள், ஒரு சிட்டிகை மிளகு தூள், தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடித்து அதை கைகளாலேயே வட்டமாக தட்டி குறைவான நெய்விட்டு தோசை தவாவில் இருபுறமும் சுட்டு எடுக்க வேண்டும்.
- மாவுச்சத்து புரதமும் நிறைந்தது என்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி, தசை வளர்ச்சிக்கு நல்லது.
- வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
- ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க உதவும்.
ஆப்பிள் டேட்ஸ்
ஆப்பிளைத் தோல்லி நீக்கி பெரிதாக அரிந்து வேகவைக்கவும். முந்தைய நாள் அரை கப் நீரில் 5 பேரீச்சம் பழம், 30 உலர்ந்த கறுப்பு திராட்சைகளை ஊற வைக்கவும். அவற்றை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு மையாக அரைத்து, வேக வைத்த ஆப்பிளில், ஜாம் போல தடவி குழந்தைக்கு ஊட்டலாம்.
- சுவை மிருந்த உணவு. மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம்.
- இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், விட்டமின், ஃபோலேட் நிறைந்துள்ளன.
- ரத்தசோகை நீங்கும். ரத்த உற்பத்தி சீராக இருக்கும்.
- எலும்புகள் உறுதியாகும்.
- மலச்சிக்கல் தீரும்.
முட்டை டிக்கிஸ்
9 மாத குழந்தைக்கு முட்டைக் கொடுக்கலாம். ஒரு முட்டையை வேகவைத்து அதைப் பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். அந்தப் பாதி முட்டையில் மசாலா (சீரக தூள், மிளகு தூள் – தலா ஒரு சிட்டிகை) தூவி கொள்ளவும். அதை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு தோசை தவாவில் இருபுறமும் லேசாக சுட்டு எடுக்கவும்.
- அமினோஅமிலங்கள் நிறைந்துள்ளன.
- உடல் எடை அதிகரிக்கும்.
- புரதம் இருப்பதால் உடல் உறுப்புகளுக்கு நல்லது.
கிரீன் கிராம் சப்ஜி
பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, அதை வேகவைத்து கொள்ளவும். கரண்டியாலே நன்கு மசிக்கவும். மிக்ஸியில் போட தேவையில்லை. வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மசித்த பச்சைப்பயறைப் போட்டு, லேசாக தண்ணீர் தெளிக்கவும். தேவைப்பட்டால் கால் டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். அதை ஒரு சிறிய கப்பில் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு தரலாம்.
- விட்டமின், தாதுக்கள் நிரம்பியுள்ளன.
- வயிற்றுக்கு நல்லது.
- செரிமானம் எளிதாகும்.
- உடலில் பலம் கூடும்.
கேரட் பைட்
தோல் சீவிய கேரட்டில் கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கி கொள்ளவும். அதை அப்படியே நீரில் வேகவைக்கவும். வெந்த கேரட்டை எடுத்து அதன் மேல் ரைசின் ஜாம் தடவி, லிட்டில் மொப்பெட்டின் உலர்தானிய பொடி தூவி குழந்தைக்கு கொடுக்கலாம்.
- பார்வைத் திறனை மேம்படுத்தும்.
- நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும்.
- சருமத்துக்கு நல்லது.
பான்கேக்
ஒரு கரண்டி அளவு கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம் ஒன்று, தேவையான தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். தோசை தவாவில், சிறிய பான்கேக்குகளாக ஊற்றவும். இருபுறமும் நெய்விட்டு வெந்தவுடன் எடுக்கவும். சூடு ஆறியதும் சிறிது சிறிதாக எடுத்து சிறிய குழந்தைக்கு ஊட்டலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மேலே தேன், நட்ஸ் தூவி கொடுக்கலாம்.
- எனர்ஜி கிடைக்கும்.
- நீண்ட நேரம் பசி தாங்கும்.
- மலச்சிக்கல் வராது.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply