vegetable finger food recipes:குழந்தைகள் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை என்பது பெரும்பலான அம்மாக்களின் கவலை.குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே காய்கறிகளை உண்ண பழகுவதே அதற்கான சரியான தீர்வு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆம் ! காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் கைகளில் பிடிப்பதற்க்கு ஏதுவாக நீளவாக்கில் வெட்டி ஆவியில் வேகவைத்து கொடுக்கலாம்.குழந்தைகள் தங்கள் கைகளாலேயே உணவினை ருசித்து அவர்களுக்கு பிடித்த உணவினை தேர்வு செய்யும் தருணமிது.
அதனால் நீங்கள் வகைவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம். குழந்தைகளுக்கு ஆரம்பகட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவான 4 ஆரோக்கியமான பிங்கர் புட்ஸ் ரெசிபியினை இப்பொழுது நாம் காணலாம்.
vegetable finger food recipes
- கேரட் – ½
- பீன்ஸ் – ½
- பூசணிக்காய் – ½
- உருளைக்கிழங்கு– ½
- மிளகுத்தூள்
- நெய்
இதையும் படிங்க: உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
vegetable finger food recipes
செய்முறை
1)பானை சூடாக்கி 1 டீ .ஸ்பூன் நெய் ஊற்றவும்.
2)நறுக்கிய பீன்ஸ் சேர்க்கவும்.
3)4-5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும்.
4)கேரட் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
5)உருளைக்கிழங்கு மற்றும் பூசணிக்காய் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
6)மிளகுத்தூள் சேர்க்கவும்.
7)காய்கறிகள் நன்றாக வேகும் வரை வதக்கவும்.
8)1 டே .ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
9)மூடியை மூடி நன்றாக வேகவிடவும்.
9)4-5 நிமிடங்கள் கழித்து காய்கள் நன்றாக வெந்துள்ளதா என பார்க்கவும்.
10)ஆரோக்கியமான வெஜிடபிள் பிங்கர் புட்ஸ் ரெடி.
குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃப்ரூட்ஸ் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
1.குழந்தைகளுக்கு உப்பு மற்றும் சர்க்கரை போன்றவை சேர்க்காத உணவினை டுக்க வேண்டும்.
2.குழந்தைகள் பிடித்து சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் நீள வாக்கில் வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுப்பதே சிறந்தது.
3.குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு மிருதுவாக நன்கு வேகவைத்த உணவினை கொடுக்க வேண்டும்.குழந்தைகள் கையாளவிற்கு ஏற்றவாறு உடையாத பாத்திரத்தினை கொடுக்க வேண்டும்.
4.குழந்தைகள் முதல் முதலாக சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவினை வீணாக்குவார்கள் மற்றும் பாத்திரங்கள் மற்றும் ஸ்பூன் போன்றவற்றை தூக்கி வீசுவார்கள் எனவே நாம் சிறிது பொறுமையாக இருக்க வேண்டும்.
5.உணவின் மீது நாட்டம் ஏற்பட்ட பின்பு அதன் சுவை பழகிய பின்பு அவர்களாகவே புரிந்து கொண்டு உணவினை உண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
6.குழந்தைகளுக்கு பிரட்டுகள் பிஸ்கட்டுகள் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
7.குழந்தைகளுக்கு பழங்கள் காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவற்றினை கொடுக்கலாம்.
vegetable finger food recipes
இதையும் படிங்க: வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
எல்லா காய்கறிகளும் கலந்து பல விதமான வண்ணங்களுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.இதனுடன் பீட்ரூட் போன்றவற்றையும் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே காய்கறிகளை அறிமுகப்படுத்துவது பிற்காலத்தில் எல்லா காய்கறிகளையும் உண்பதற்கு அவர்களை தயார்படுத்தும்.
இதே போன்று பழங்களையும் நீளவாக்கில் வெட்டி பிங்கர் புட்ஸாக கொடுக்கலாம். மேலே கூறிய காய்கறிகளை ஒன்றாக கொடுக்காமல் தனி தனியாக வதக்கியும் கொடுக்கலாம்.
vegetable finger food recipes
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply