Sali irumal veetu vaithiyam in Tamil:குளிர்காலம் வந்துவிட்டாலே குளு குளு காற்றுடன் கோடை காலத்தில் இருந்து விடைபெற்ற நிம்மதி கிடைக்கும். ஆனால் கூடவே சளித் தொந்தரவும் நம்மை தொற்றிக்கொள்ளும். முக்கியமாக குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரை அவர்கள் இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுவதை பார்ப்பதற்கே நமக்கு சங்கடமாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஒரு மருத்துவராய் நான் இருந்தாலும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு வீட்டு வைத்தியத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பேன். ஆரம்ப கட்டத்திலேயே நாம் முறையான வீட்டு வைத்தியத்தை கடைபிடித்தால் சளித் தொந்தரவிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே மிகவும் எளிதான மூன்று வீட்டு வைத்தியத்தை இந்த நான் கொடுத்துள்ளேன்.
ஆனால் நீண்ட நாட்களாக குழந்தைகள் சளியால் அவதிப்படும் பட்சத்தில் கண்டிப்பாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே நலம். தொண்டை கரகரப்பு, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் ஆரம்பக்கட்டத்திலேயே இந்த மருந்துகளை கொடுப்பது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Sali irumal veetu vaithiyam in Tamil
1.லெமன் அண்ட் ஹனி சிரப்
தேவையானவை
எலுமிச்சை -1/2
தேன் – ¼ டீ.ஸ்பூன்
செய்முறை
1.எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி ஜூஸினை பிழியவும்.
2.அதில் தேனை சேர்க்கவும்.
3.கலவையை அடுப்பில் வைத்து 10 முதல் 20 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
4.குழந்தைகளுக்கு ஒரு டீ.ஸ்பூன் வீதம் கொடுத்தால் இருமலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2.துளசி தண்ணீர்
- துளசி இலைகள் 5
- சீரகம்- 1 டீஸ்பூன்
- தண்ணீர்- 2 கப்.
செய்முறை
1.ஒரு பானில் துளசி இலைகள்,சீரகம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
2.நன்றாக கொதிக்கவிடவும்.
3.பின்பு மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
4.நன்றாக வடிகட்டவும்.
5.இந்த தண்ணீரை கால் கப் அளவிற்கு மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல் மற்றும் தொண்டை எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
3.ஆரஞ்சு அண்ட் ஹனி ஜூஸ்
- ஆரஞ்சு-1
- தேன் – ¼ டீஸ்பூன்
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான உருளைக்கிழங்கு மசியல்
செய்முறை
1.ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து சுளையில் உள்ள கொட்டையை நீக்கவும்.
2.நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
3.பின்பு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
4.வடிகட்டவும்.
5.தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.குழந்தைகளின் தொண்டை கரகரப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: நிலக்கடலை லட்டு
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply