குழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20
வீட்டு வைத்தியங்கள்…
இந்தியாவின் தட்பவெப்ப நிலை மாறி தற்போது மழைக்காலம் வந்துள்ள நிலையில் பெரும்பாலான வீடுகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இருமலும் ஜலதோஷமும் என பெரும்பாலானோர் இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் எளிதில் இந்த காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சளி மற்றும் இருமலை போக்க நிறைய வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கு ஏற்றது என்ன என்பதை சோதனை செய்து இங்கு தந்துள்ளேன்…
கவனிக்க : ஒரே நேரத்தில் எல்லா மருந்துகளையும் பின்பற்ற வேண்டாம். இதில் குறிப்பிட்டுள்ள எல்லாம் உங்கள் தகவலுக்கு தான். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தன்மையுடன் இருக்கும் என்பதால் அவர்களின் உடலுக்கு ஏற்றது எது? அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது எது என்பதை தெரிந்து கொண்டு எச்சரிக்கையோடு பயன்படுத்துங்கள்.
பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு இந்த மருத்துவ முறைகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு இதனை பின்பற்றுங்கள்..
ஒருவேளை புதிதாக எதையும் செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை உரிய முறையில் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இந்த முறைகளை பின்பற்றலாம்…
1. லேசான ஜலதோஷம் (மூக்கில் இருந்து நீர் வடிதல்)
2. லேசான இருமல்
3. தொண்டை வலி
4. மூக்கடைப்பு
குழந்தைகளின் சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் :
1. கற்பூரம் / சூடம்
தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.
2. யூகலிப்டஸ் ஆயில்
குழந்தையை யூகலிப்டஸ் ஆயிலை சுவாசிக்க வையுங்கள். மேலும் குழந்தை படுக்கும் இடத்தை சுற்றி யூகலிப்டஸ் ஆயிலை சிறிது தெளிக்கலாம்…
3. மஞ்சள்
விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்…
1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடிக்கும் பாலுடன் இம்மியளவு டர்மெரிக் மில்க் மசாலாவை கலந்து கொடுக்கலாம்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் சளியை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சளி தொல்லையில் இருந்து விரைவில் குணமடைய வழி செய்கிறது
4. சாய்வான முறையில் தூங்க வைத்தல்
சளி தொந்தரவால் உங்கள் குழந்தை தூங்க சிரமப்படுகிறதா? தலையணையை குழந்தையின் முதுகுப்புறம் வைத்து சற்று சாய்வான முறையில் குழந்தையை தூங்க வையுங்கள். இதனால் மூக்கில் இருந்து சளி தொந்தரவு வராமல் குழந்தை நிம்மதியாக தூங்கும்.
5. பூண்டு
2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
6. இஞ்சி
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
7. சிக்கன் சூப்
சளித் தொந்தரவை போக்க சிக்கன் சூப்பை 8 மாதங்களிலிருந்து குழந்தைக்கு தரலாம்.
8. துளசி இலைகள்
துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம். தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இதனை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர வேண்டும்.
9. தேன்
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை டீஸ்பூன் தேனை எடுத்து அதை பாலில் கலந்து நாளொன்றுக்கு இரு முறை தரலாம்…
10. ஓமம்
ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கருகே கொண்டு சென்று சுவாசிக்க வையுங்கள். அல்லது குழந்தையின் மூக்கருகே இதனை வைத்து விடலாம்…
11.சலைன் டிராப்ஸ்
குழந்தையின் மூக்கடைப்பை போக்கும் தன்மை சலைன் டிராப்ஸ்க்கு உண்டு. 2 முதல் 3 சொட்டுகளை மூக்கின் துவாரங்களில் விட்டு குழந்தையை சாய்ந்து இருக்கும் படி செய்யுங்கள். இது விரைவான நிவாரணம் அளிக்கும் ஒரு மருந்து.
12. வெண்டைக்காய்
வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இது குழந்தையின் உடலில் உள்ள சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து குழந்தைக்கு குடிக்க தரலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தர வேண்டும்…
13. செவ்வந்திப்பூ / கெமோமில்
செவ்வந்திப்பூ சிறிது கலந்த டீயை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தரலாம். தொண்டை பிரச்சினைக்கு தீர்வளிக்கும் தன்மை இதில் உள்ளது.
14. எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு லெமன் ஜூஸ் உடன் தேன் மற்றும் தண்ணீர் கலந்து தரலாம்…
15.பட்டை
பட்டையில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் இருப்பதால் இது உடலில் ஏற்படும் தொற்று நோய் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு தீர்வளிக்கும். ஆனால் இதனை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே தர வேண்டும். பட்டை தூள் கால் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தரவும். குழந்தைக்கு சளி இருமல் தொந்தரவு இருப்பதாக தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே இதனை தருவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
16. கடுகு எண்ணெய்
5 முதல் 10 டீஸ்பூன் கடுகு எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் ஓமத்தை தாளிக்கவும். ஆறிய பிறகு இந்த கலவையை எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இதனை எடுத்து குழந்தையின் மார்பு பகுதி, நெற்றி மற்றும் தொண்டையில் தடவுங்கள்.
17.குழந்தைகளுக்கான விக்ஸ்
குழந்தைகளுக்கான விக்ஸ் வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். சளி தொந்தரவு ஏற்படும் போது குழந்தையின் பாதங்களில் இதனை தடவி சாக்ஸ் போட்டு விடுங்கள். மேலும் இதனை குழந்தையின் மார்பு மற்றும் தொண்டை பகுதியில் தடவலாம். குழந்தைக்கு சிறந்த தீர்வளிக்கும் முறை இது.
18. ஈரப்பதமூட்டி
பொதுவாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை ஏற்படும் போது காற்றை உள்ளிழுப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது மிதமான ஈரப்பதமூட்டியை அறையில் வைத்து அதை குழந்தையை சுவாசிக்க செய்யலாம்.
19. ஆவி பிடித்தல்
ஆவி பிடிக்கும் போது குழந்தைகளை தனியாக விடாதீர்கள். பக்கெட் அல்லது பாத் டப்பில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுக்க வைக்கவும். சூடான காற்று உள்ளே செல்லும் போது குழந்தையின் உடலில் இருக்கும் கபம் வெளியேறி விடும்.
20. நெய்
2 டேபிள் ஸ்பூன் நெய்யை எடுத்து அதை சூடாக்கி அதில் 2 முதல் 3 மிளகை போட்டு பின் அதனை அரைத்து வறட்டு இருமலால் அவதிப்பட்டு வரும் குழந்தைக்கு கொடுங்கள். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தரலாம்…
இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்…
கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.
1. மூக்கில் இருந்து நீர் வடியும் போது அது மஞ்சள் அல்லது அடர் பச்சை நிறத்தில் இருந்தால்
2. அதிகளவிலான சளி வெறியேறும் போது (மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறினால்)
3. அளவு கடந்த காய்ச்சல்
4. அலர்ஜியின் காரணமாக உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால்
5. மூச்சை இழுப்பதில் சிரமம்
6. சுவாசிக்கும் நேரம் அதிகரித்தால்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
My 7 month child having running nose and light guru guru sound please give the remedies
In the article itself(https://tamil.mylittlemoppet.com/sali-irumalai-pokkum-20-veettu-vaithiyangal/), we mentioned it.
இஞ்சி
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
என்னுடைய 3மாத குழந்தைக்கு சளி மற்றும் மூக்கடைப்பு உள்ளது இதனை போக்க ஏதாவது வழிமுறைகள் இருந்தால் கூறவும்
வெது வெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால், சளி அதிகமாக இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
Heya i’m for the primary time here. I came across this board
and I find It really useful & it helped me out much. I’m hoping to present something again and
aid others like you helped me.
Sure dear and thanks for your words.
My four months old baby having a blocked nose …he didn’t taking a feed
நான்கு மாத குழந்தை என்பதால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சிறந்தது டியர்.
It is very useful to me mam..
Thank you dear.
My 3 year daughter is still at 9kgs. Can you tell me ways to increase her weight. Ian worried she is not putting on weight
How to make her eat healthy foods and what are they
பொதுவாக குழந்தை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் எடையை பற்றி கவலைப்பட தேவையில்லை.ஆனால் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க கீழ்கண்ட உணவுப்பொருட்களை தவறாமல் அடிக்கடி கொடுங்கள்.
பொதுவாக குழந்தை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் எடையை பற்றி கவலைப்பட தேவையில்லை.ஆனால் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க கீழ்கண்ட உணவுப்பொருட்களை தவறாமல் அடிக்கடி கொடுங்கள்.
https://tamil.mylittlemoppet.com/kulandaigalin-udal-edaiyai-adhigarikkum-20-unavugal/
Hi, My 6 month Male kid suffering Cough & Cold; @ night times he is not able to Breath frequently due to Cold. Sometimes due to Cough he is vomiting. Last three days his eyes are getting filled with more tears; hope this tears must be the reason for his illness. Anyway there i can quick remedy.
இந்த மாதிரி சூழ்நிலையில் குழந்தைகளை நேரில் பார்க்காமல் என்னால் எதுவும் கூறமுடியாது டியர்.மன்னிக்கவும்.நீங்கள் முதலில் எளிமையான வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து சரியாகவில்லையென்றால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
என் இரண்டரை மாத குழந்தைக்கு சளி இருமல் வாந்தி இருக்கிறது மேலும் கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிகிறது இதற்கு மருத்துவம் செல்லுங்கள்…
பச்சிளங்குழந்தை என்பதால் என்னால் நேரில் பார்க்காமல் எதுவும் கூறமுடியாது டியர்.குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
10 months en baby ku, cold iruku, cough vandha continuous ah irumbara, doctor ah consult panni asthalin syrup koduthitu iruken but throat romba pain ah irukum pola athukuku enna pandrathu mam?
துளசி கலந்த தண்ணீர் கொடுக்கலாம் டியர்.
எனது மகன் 3 வயது கடந்த 7 மாதங்கள் தீராத சளி மற்றும் அவ்வப்போது இருமல் உள்ளன. தயவு செய்து சரியான தீர்வு செல்லவும் என்னுடைய இமெயில் முகவரி.. [email protected]
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் வீட்டுவைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள் டியர்.
https://tamil.mylittlemoppet.com/sali-irumalai-pokkum-20-veettu-vaithiyangal/
My son is having severe cold and cough. As per doctor’s advice I gave medicine bt not yet sure till now. Cold stored at his lungs
Pls provide some home made medicine for him. His age at 4. 2
https://tamil.mylittlemoppet.com/sali-irumalai-pokkum-20-veettu-vaithiyangal/
வீட்டு வைத்தியத்திற்கு மேலே உள்ள லிங்கினை கிளிக் பண்ணுங்க டியர்.
En babykku 12 month agukuthu cold athigama irukku .sol pls mom
https://tamil.mylittlemoppet.com/sali-irumalai-pokkum-20-veettu-vaithiyangal/
click the above link dear.
என்னுடைய குழந்தை one year 3month ஆகுது கொஞ்சம் நெஞ்சு சளி இருமல் இரவு மட்டும் அது சரி ஆக மருந்து சொல்லுங்க
வெற்றிலையினை நெய் விளக்கில் வாட்டி வெது வெதுப்பாக நெஞ்சினில் ஒத்தடம் கொடுங்கள் டியர்.ஓமத்தை வறுத்து துணியில் கட்டி வெது வெதுப்பாக ஒத்தடம் கொடுக்கலாம்.