Healthy Beans Dosai in Tamil:குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி என்றால் அது இட்லி மற்றும் தோசை தான். என் குழந்தைகளுக்கு நான் தோசை கொடுக்கும்பொழுது அம்மா இன்னைக்கும் தோசை தானா ஒரே போர் என்று சாப்பிட அடம் பிடிப்பார்கள். எனவே அவர்களுக்கு நான் வித்தியாசமான தோசை வகைகளை செய்து கொடுப்பது வழக்கம் அதில் ஒன்றுதான் இந்த ஹெல்தியான பீன்ஸ் தோசை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கிட்னி பீன்ஸில் பொட்டாசியம்,மெக்னீசியம், ஃபைபர் மற்றும் புரோட்டீன் கலந்து இருப்பதால் குழந்தைகளின் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இதில் இஞ்சி,சீரகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. இந்த இட்லி தோசையை சட்னியுடன் நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கண்டிப்பாக அவர்கள் காலை உணவை சாப்பிட மறுக்கமாட்டார்கள்.
Healthy Beans Dosai in Tamil:
- கிட்னி பீன்ஸ் – ½ கப்
- பிரவுன் ரைஸ் -½ கப்
- பச்சை மிளகாய் (தேவைப்பட்டால்) -1
- இஞ்சி – ½ இன்ச்
- சீரகம் – ½ டீ.ஸ்பூன்
- உப்பு-தேவையானளவு
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலைப் போக்கும் 3 வைத்தியங்கள்
Healthy Beans Dosai in Tamil:
செய்முறை
1.அரிசி மற்றும் கிட்னி பீன்ஸை நன்றாக கழுவி 6-8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2`.தண்ணீரை வடிகட்டி அரிசி ,கிட்னி பீன்ஸ் ,சீரகம் ,இஞ்சி ,உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
3.தோசை வார்க்க தேவையானளவு தண்ணீர் சேர்க்கவும்.
4.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
5.தேவையானளவு மாவை தோசையாக ஊற்றவும்.
6.தோசையை சுற்றி ஒரு சில துளிகள் எண்ணெய் ஊற்றி 1-2 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
7.மறுபுறம் திருப்பி போடவும்.
8.ருசியான பீன்ஸ் தோசை ரெடி.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முருங்கை கீரை சூப்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply