Murungai Keerai Soup for Babies:கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.அதிலும் உச்சி முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் புத்துணர்வாக்கி உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தருவதில் முதலிடம் வகிக்கின்றது முருங்கைக்கீரை.இது நம் ஊர்களில் எளிதில் கிடைக்கும் என்பது நாம் செய்த தவம் என்றே கூறலாம்.குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே நாம் முருங்கை கீரை தருவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- முருங்கை கீரை -2 கப்
- நறுக்கிய வெங்காயம் – 2 டேஸ்பூன்
- தக்காளி (நறுக்கியது)- 1
- பூண்டு (நறுக்கியது)-3 பல்
- மிளகுத்தூள்- ¼ டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்-இம்மியளவு
- நல்லெண்ணெய்- 1 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள்- ½ டீ.ஸ்பூன்
இதையும் படிங்க: சத்தான பாசிப்பருப்பு உளுந்து தோசை
Murungai Keerai Soup for Babies
செய்முறை
1.முருங்கை கீரையினை நன்றாக கழுவவும்.
2.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
3.அதனுடன் சீரகத்தூள் மிளகுத்தூள் மற்றும் பூண்டு சேர்க்கவும்.
4.நன்றாக வதக்கவும்.
5.பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6.தக்காளி சேர்த்து நன்கு மசியுமளவு வதக்கவும்.
7.மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
8.முருங்கை கீரையினை சேர்த்து வதக்கவும்.
9.தண்ணீர் சேர்த்து மூடியால் மூடவும்.
10) 2-3 விசில் வருமளவிற்கு மிதமான தீயில் வைக்கவும்.
11.நன்றாக மசிக்கவும்.
12.வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
13.சிறுவர்களுக்கு வடிகட்டாமலும் கொடுக்கலாம்.
இதையும் படிங்க: சளி மற்றும் இருமலை நீக்கும் பூண்டு பால்
குழந்தைகளின் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்த அற்புத கீரை முருங்கை கீரை.இதை குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்கலாம்.பெரியவர்களும் இதை பருகினால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை அண்டாது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply