Teething Recipe for babies in Tamil:குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது கொடுப்பதற்கு ஏற்ற ஹெல்தியான ரெசிபி தான் இந்த பனானா தயிர் ஐஸ் ஸ்லைசஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பொதுவாக 5 – 6 மாதம் முதல் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்.இதனை நாம் பால் பற்கள் எனவும் அழைப்பதுண்டு. வெகுவாக சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்தே இரண்டு முதல் மூன்று பற்கள் வரை முளைத்திருக்கும்.
குழந்தைகளுக்கு முதன்முதலாக பற்கள் முளைக்கும் பொழுது பற்களின் ஈறுகளில் அரிப்ப, வீக்கம் போன்றவை ஏற்படும். அதனால் குழந்தைகள் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் எடுத்து வாயில் வைத்து மென்று கொண்டே இருப்பார்கள்.
எனவே குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் குழந்தைகளின் ஈறுகளுக்கு இதமாக இருக்கும். மேலும் வாழைப்பழம் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் பி, சி பொட்டாசியம் போன்றவை அளிக்கவல்லது. மேலும் தயிரில் கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன.
Teething Recipe for babies in Tamil:
- வாழைப்பழம் -3
- தயிர்- 1 கப்
- ட்ரை புரூட்ஸ் பவுடர் (தேவைக்கேற்ப)
Teething Recipe for babies in Tamil:
செய்முறை
1.பட்டர் சீட்டினை விரித்து அதில் பட்டரை தடவவும்.
2.வாழைப்பழத்தின் தோலை உரித்து வட்ட வட்டமாக நறுக்கவும்.
3. 15 நிமிடங்களுக்கு பிரீசரில் வைக்கவும்.
4. ஒரு பவுலில் மீதி உள்ள வாழைப்பழத்தை உரித்து நன்றாக மசிக்கவும்.
5.அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.வெட்டி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை தயிர் கலவையில் முக்கி வைக்கவும்.
7.இரண்டு மணி நேரம் அல்லது ஒரு நாள் முழுவதும் ஃப்ரீசரில் வைக்கவும்.
8.டிரைபுட்ஸ் பவுடரை மேலே தூவிக் கொள்ளலாம்.
9. குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply