Healthy Breakfast Recipe for Kids: குழந்தைகளுக்கு ஹெல்தியான வித்யாசமான பிரேக் பாஸ்ட் செய்ய வேண்டுமா இந்த பான்கேக் ரெசிபியினை சட்டுனு ட்ரை பண்ணுங்க.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பிடித்தவாறு காலை உணவு என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் நமக்கு தலையே சுற்றி விடும்.ஏனென்றால் காலை உணவினை குழந்தைகள் தவிர்க்காமல் சாப்பிடுவது அவசியம்.ஏனென்றால் குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியினை அளிப்பது காலை உணவுதான்.
ஆனால் நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் டிபன் வகைகளை வீட்டில் செய்யும்பொழுது அதில் குழந்தைகள் பாதி எடுத்து கொண்டாலே பெரும் விஷயம்தான்.
ஆனால் இந்த கடலை மாவு கீரை பான்கேக் அப்படியல்ல.குழந்தைகளின் காலை உணவில் சுவையினை கூட்டுவதுடன் ஆரோக்கியத்தினையும் அளிக்க வல்லது,மேலும் பார்ப்பதற்கும் குழந்தைகளை கவரும் விதத்தில் இருப்பதால் தட்டில் வைத்தால் காலியாவது நிச்சயம்.
Healthy Breakfast Recipe for Kids
- தக்காளி பொடியாக நறுக்கியது -1
- பசலை கீரை இலைகள்- 4-5
- கடலை மாவு- ¼ கப்
- நெய் -1 டே.ஸ்பூன்
- மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன்
Healthy Breakfast Recipe for Kids
செய்முறை
1.கடலை மாவை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் நறுக்கிய கீரை, தக்காளி மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
2.நன்றாக கலக்கவும்.
3.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
4.மிகவும் நீர்த்துப் போகாமல் பான் கேக் செய்யும் பதத்திற்கு மாவினை கலக்கவும்.
5.பானை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
6.அதில் நெய் தடவவும். மாவினை பானில் ஊற்றவும்.
7.தோசை போன்று நன்றாக தடவாமல் பான்கேக் அளவிற்கு சிறிதாக பரவ விடவும்.
8.சுற்றிலும் நெய் தடவவும்.
9.மூடியால் மூடி வைக்கவும்.
10. 1-2 நிமிடங்கள் காத்திருக்கவும்.
11.அதன் பிறகு திருப்பி போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு பொன்னிறமாக வருமளவிற்கு சூடாக்கவும்.
12.ஹெல்தி கீரை பான் கேக் ரெடி.
13.விருப்பப்பட்டால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு தேவையான ஷேப்பில் கட் பண்ணி கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply