Spinach Pancake: கீரை உடலிற்கு ஆரோக்கியமானது என்று நாம் பாட்டி காலத்தில் இருந்து நாம் கேள்விப்படும் உண்மைகளில் ஒன்று. தற்பொழுது வரை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கீரைதான் அனைத்து காய்கறிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும் முதன்மையான உணவுப் பொருட்களுள் ஒன்று என்பதை பரிந்துரைக்கின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால், இதை நம் குழந்தைகளுக்கு புரிய வைத்து சாப்பிட வைப்பதற்குள் அனைவரும் தோற்றுத்தான் போகின்றோம். ஏனென்றால் கீரை என்றாலே குழந்தைகள் முகம் சுளித்து சாப்பிட மறுக்கின்றனர் என்பதே உண்மை.
எனவேதான் கீரைகளை குழந்தைகளுக்கு மறைமுகமாக அவர்களுக்கு பிடித்த வண்ணம் எப்படி செய்து கொடுப்பது என்பதை யோசித்து தற்பொழுது நான் இப்படி பான் கேக் எனப்படும் குட்டி ஊத்தாப்பம் ஒன்று செய்து கொடுக்கின்றேன்.
கேக் என்ற உடன் ஏதோ இனிப்புச் சுவை நிறைந்த உணவு பொருள் என எண்ண வேண்டாம். தோசையினை குழந்தைகள் சாப்பிடும் வண்ணம் சிறிது சிறிதாக ஊத்தாப்பம் போன்று ஊற்றி கொடுப்பதே பான்கேக் என்கிறோம்.
அதே நேரம் தினமும் இட்லி, தோசை சப்பாத்தி என்று ஒரே மாதிரியாக சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த பான் கேக் வித்தியாசமான ரெசிபியாக இருக்கும். கீரை பான்கேக் என்கின்ற பெயரை கேள்விப்பட்டதும் ஏதோ வித்தியாசமான ஒன்று என்று நினைக்க வேண்டாம்.
சாதாரணமாக வீட்டில் டிபன் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் அந்த நேரம் தான் ஆகும் என்பதால் நீங்கள் பெரிதாக மெனக்கிட தேவையில்லை. பசலைக் கீரையை இதில் உபயோகிக்கும் பொழுது நிறம் மாறாமல் நல்ல சுவை கிடைக்கும். நீங்கள் வேண்டுமென்றால் அரைக்கீரையும் உபயோகித்துக் கொள்ளலாம்.
Spinach Pancake:
Spinach Pancake:
இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் இதன் நன்மைகளை பார்க்கலாம்.
- பசலைக்கீரையில் இரும்பு சத்துக்கள் அதிகம் என்பதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரித்து ரத்தசோகை வராமல் தடுக்க கூடியது.
- இதில் கால்சியம் மற்றும் விட்டமின் கே அதிகம் என்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு பலம் அளிக்கக்கூடியது.
- கீரையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை சளி மற்றும் தொற்று போன்றவை ஏற்படாமல் தடுக்க கூடியது.
- கீரையில் ஆன்டி ஆக்சிடென்ட், மற்றும் பல்வேறு சிறப்பான வேதிப்பொருட்கள் காணப்படுவதால் கண்களுக்கு கூர்மையான பார்வையை அளிக்கின்றது.
- இதில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் உணவை எளிதில் செருமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- கீரையில் காணப்படும் போலேட் எனப்படும் வேதிப்பொருள் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை மூளை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
எனவே இத்தனை சத்துக்கள் நிறைந்த கீரைகளை குழந்தைகளுக்கு உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொடுப்பது அவர்களின் உடல் நலத்திற்கு சிறந்ததாகும்.
Spinach Pancake
- பாசிப்பருப்பு-அரை கப் (கழுவி ஊற வைத்தது)
- கீரை- 1 கைப்பிடி
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- பூண்டு- 1 பல்
- எண்ணெய்-சமைப்பதற்கு தேவையான அளவு
- உப்பு
Spinach Pancake:
செய்முறை
- பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊற வைக்கவும்
2.பாசிப்பருப்புடன் கீரை, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
3.தோசை கல்லில் எண்ணெய் விட்டு சிறு சிறு வட்டங்களாக ஊற்றவும்.
4.பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பி போடவும்.
5.குழந்தைகளுக்கான சத்தான கீரை தோசை ரெடி.
Spinach Pancake:
குழந்தைகளுக்கு காலை நேரத்தில் கலர்ஃபுல்லாக இப்படி சிற்றுண்டி செய்து கொடுத்தால் நன்றாக விரும்பி உண்பார்கள். எட்டு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கும்பொழுதும் இதேபோன்று கீரை தோசை சுட்டுக் கொடுப்பது அவர்களுக்கு ஆரோக்கியம் உள்ள உணவாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Spinach Pancake:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த தோசையில் காய்கறிகள் சேர்க்கலாமா?
கேரட் போன்றவற்றை துருவியோ, குடைமிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கியோ இந்த மாவில் கலக்கி தோசையாக சுடலாம்.
இந்த மாவினை புளிக்க வைக்க தேவையா?
பருப்பு மற்றும் கீரை மட்டுமே சேர்த்துள்ளதால் மாவினை புளிக்க வைக்க தேவையில்லை அறைத்தவுடன் சில நிமிடங்கள் கழித்து அப்படியே தோசையாக சுடலாம்.
இதில் வேறு பருப்பு சேர்க்கலாமா?
நான் இதில் பாசிப்பருப்பு சேர்த்துள்ளேன் உங்களுக்கு விருப்பம் என்றால் சிறிதளவு துவரம் பருப்பும் சேர்த்து அரைத்து சுட்டுக் கொடுக்கலாம்.
Leave a Reply