Honey Benefits in Tamil: பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையிலும்,வைத்தியத்திலும் இணைந்து பயணித்து வந்த உணவு பொருள் தேன்.ஏன் இன்றளவும் சித்த வைத்தியத்திலும்,ஆயுர்வேத வைத்தியத்திலும் தேனை வைத்தே பெரும்பாலான மருந்துகள் செய்யப்படுகின்றன.தேனின் குணமானது பெரும்பாலான நோய்களை குணமாக்க வல்லது. அவற்றில் மலைத்தேன் மேலும் சிறப்பு வாய்ந்தது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மலைத்தேனின் சிறப்பம்சங்களை காணலாம்:
- இவ்வகை தேனானது சாதாரண காடுகளில் கிடைக்காது.மலை பிரதேசங்களில் கிடைக்கக்கூடியது ஆகும்.
- மலை பிரதேசங்களில் உள்ள பொந்துகளில் தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனே மலைத்தேன் ஆகும்.
- மலை பூக்களில் உள்ள மகரந்தத்தின் காரணமாக தேன் சிறிது கசப்புத்தன்மையுடன் இருக்கும்.
- பருவத்தன்மைக்கு ஏற்றவாறு பூக்கள் பூப்பதால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேனின் சுவையானது மாறக்கூடியது.
- இத்தேன் கொம்பு தேனைக்காட்டிலும் மேலும் சிறப்பு வாய்ந்தது.ஏனென்றால் சாதாரணமாக இத்தேன் நமக்கு கிடைக்காது.மலை பிரதேசத்தில் வாழும் மக்களே இத்தேனை சேகரிப்பர்.
இவை எல்லாம் சுத்தமான தேனின் தனி தன்மைகள்.ஆனால் இன்று நமக்கு சுத்தமான தேன் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது.ஏனென்றால் வெல்வேறு பிராண்டுகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேனினை நாம் வாங்குகிறோம்.
ஆனால் அவையெல்லாம் சுத்தமான தேனா என்று யோசித்தால் நமக்கு விடை தெரியாது.
உண்மையில் சுத்தமான தேன் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடை காண்போம்.
- தேன் கூடுகளில் இருந்து நேரடியாக பிழிந்து எடுக்கப்படும் தேன் சுத்தமான தேன் ஆகும்.
- இந்த தேனானது எந்தவித கலப்படமும் சேர்க்கபடாதது
- இந்த தேன் முதலில் வடிகட்டபடுகின்றது. ஏனென்றால் தேனை சேகரித்த இறந்த தேனீக்கள் தேன் கூட்டில் இருக்கக்கூடும் என்பதால் அவை வடிகட்டப்படுகிறது.
தேனில் இயற்கையாகவே 80 சதவீதம் சர்க்கரையும் 20 சதவீதம் தண்ணீர் உள்ளது.ஆனால் கடைகளில் விற்கப்படும் தேனில் செயற்கை சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன.
Honey Benefits in Tamil:
சுத்தமான தேனை கண்டறிவது எப்படி என காணலாம்?
சுத்தமான தேனை சில எளிய சோதனை மூலம் கண்டறிய முடியும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடும்போது நீரின் வண்ணம் மாறாமல் நீரின் அடியில் அப்படியே படிந்தால் அது சுத்தமான தேன்.
- தேனை சாப்பிடும் பொழுது நாக்கில் எந்த வண்ணமும் ஒட்டாமல் இருந்தால் அது தூய தேன்.
- ஒரு காகிதத்தில் ஒரு சொட்டு தேனை விடும்போது காகிதத்தில் உறிஞ்சப்படாமல் அப்படியே இருந்தால் அது தூய தேனாம்.
- தூய தேன் அரை வெப்பத்தில் வைக்கப்படும் பொழுது கெட்டியாக மாறும் தன்மையுடையது.
தேனின் மருத்துவ குணங்கள் :
- தேனை வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பு கட்டுக்குள் வரும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை பின்பற்றலாம்.
- தினமும் இரவில் பாலுடன் தேன் கலந்து குடித்து வர மெலிந்த உடல் பருமனாகும்.
- தேனை தினமும் அருந்தும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் சிறுநீர் வழியே வெளியேற்றப்படும்.
- கொள்ளும் போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு உடல் மெலிகின்றது.
- ரோஜா மலரின் இதழுடன் தேனை ஊற வைத்து சாப்பிடும் போது உடலுக்கு பலமும், குளிர்ச்சியும் அளிக்கக்கூடியது.
- இரண்டு கரண்டி தேனுடன், இஞ்சி சாறு சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட பித்தம், வாந்தி, தலைவலி போன்றவை குணமாகும்.
- அடிக்கடி சளி தொல்லை இருந்தால் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
- வயிற்று உப்புசம் வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தேன் உட்கொண்டால் சரியாகும்.
தேனில் அடங்கியுள்ள சத்துக்கள்:
- தேனில் மெக்னீசியம், சோடியம், குளோரின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
- மேலும் தேனின் மகரந்த தன்மைக்கு ஏற்ப வைட்டமின்கள் பி1 பி2 பி3 பி5 பி௬, வைட்டமின் சி, தாமிரம், அயோடின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
- கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
- சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
- காயங்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
- தோல் நோய்களை குணமாக்க வல்லது.
- முகப்பருவை நீக்கவல்லது.
- உதடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வல்லது.
- இரத்தசோகையை குணமாக்க வல்லது.
- சுவாச சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
- ஆஸ்துமாவை குணமாக்குகிறது.
- உடலின் நச்சுக்களை வெளியேற்றும்.
தேனை உட்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- தேனை சூடுபடுத்தக்கூடாது.
- தேனுடன் கடுகு,நெய், காரமான பொருட்கள் மற்றும் மழைநீர் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
- அதிகமான வெப்ப நிலையில் வேலை பார்ப்பவர்கள் தேனை எடுத்துக் கொள்ளக்கூடாது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply