French Fries for babies in Tamil:குழந்தைகளுக்கான ஹெல்தியான டேஸ்டியான உருளைக்கிழங்கு பிரெஞ்சு ப்ரைஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாகவே குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் கொள்ளை பிரியம் தான். காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் கேட்டு வாங்கி சாப்பிடும் ஒரு காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான்.இந்த உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகளுக்கு எளிமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வெளியே மொறுமொறுப்பாகவும்,உள்ளே மென்மையாகவும் இருப்பதால் சுவையோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மென்று சாப்பிட எளிதாகவும் இருக்கும்.மேலும் உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
இதில் வைட்டமின்கள்,ஆன்டி-ஆக்சிடன்ட்கள்,மினரல்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளது.இந்த பிரெஞ்சு ப்ரைசினை ௧ வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கையில் வைத்து சாப்பிடும் பிங்கர் புட்டாகவும் கொடுக்கலாம்.குழந்தைகள் தானாகவே கையில் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும் போது குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
French Fries for babies in Tamil:
- உருளைக்கிழங்கு -2
- மிளகுத்தூள்- 1 டீ.ஸ்பூன்.
French Fries for babies in Tamil:
செய்முறை
1.உருளைக்கிழங்கினை நன்றாக கழுவவும்.
2.தோல் சீவி நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
3.தண்ணீரில் 1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.
4.பானை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
5.பொன்னிறமாக வரும் அளவிற்கு பொரித்து எடுக்கவும்.
6.மிளகுத்தூள் தூவவும்.
7.குழந்தைகளுக்கான பிங்கர் புட் ரெடி.
குழந்தைகளுக்கு முதன் முதலாக புது உணவினை கொடுக்கும்போது மதிய உணவிற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். மேலும் முதன்முதலாக கொடுக்கும் போது சிறிய அளவிற்கு கொடுத்து பின்பு படிப்படியாக உணவின் அளவை அதிகரிக்கலாம்.
எட்டு மாத காலம் முதல் பிங்கர் புட் கொடுக்கலாம் என்றாலும் இது ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆறு மாத கால முதல் மசாலா பொருட்களை சேர்க்கலாம் என்பதால் இதில் மிளகுத்தூள் சேர்த்துள்ளேன்.நீங்கள் ஒரு முறை இந்த ஸ்னாக்சினை செய்து கொடுத்தால் குழந்தைகள் திரும்ப திரும்ப கேட்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
Ingredients
- 2 உருளைக்கிழங்கு
- 1 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
Instructions
- உருளைக்கிழங்குநீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- தண்ணீரில்1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பானைசூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- பொன்னிறமாக வரும் அளவிற்கு பொரித்து எடுக்கவும்.
- மிளகுத்தூள்தூவவும்.
- குழந்தைகளுக்கானபிங்கர் புட் ரெடி.
Leave a Reply