Wheat Snacks in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்கக்கூடிய ஹெல்தியான ஸ்நாக்ஸ் தான் கோதுமை மினி குக்கீஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மாலை நேரம் ஆகி விட்டாலே குழந்தைகளுக்கு ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் பழக்கம் நம் வீடுகளில் உண்டு. தினமும் என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்பதே அம்மாக்களுக்கு பெரிய குழப்பமாக இருக்கும்.
வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் தான் நாம் விரும்புவோம். மேலும் கொடுக்கும் ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு ஸ்னாக்ஸ்தான் ஹெல்தியான கோதுமை குக்கீஸ்.
இது செய்வதற்கு மிகவும் எளிதானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் ஆகும்.கோதுமை மாவு மற்றும் வெல்லம் இந்த இரண்டும் இருந்தாலே போதும் நாம் எளிதாக ஐந்து நிமிடத்தில் இந்த ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மாலைநேரத்தில் டீ அல்லது காபியுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.
Wheat Snacks in Tamil:
- கோதுமை மாவு- 1 கப்
- நாட்டுச்சர்க்கரை – ½ கப்
- நெய்-1 டே.ஸ்பூன்
- எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
Wheat Snacks in Tamil
செய்முறை
1.ஒரு பவுலில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.
2.நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
3.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
4.சிறிதளவு உருண்டையை கையில் எடுத்துக் கொண்டு வட்டமாக தட்டவும்.
5.எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
6.ஆறவிடவும்.
7.இதனை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒருவாரத்திற்கு உபயோகிக்கலாம்.
நாட்டுச்சர்க்கரை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. மேலும் ரத்த சோகை வராமல் தடுக்கும் சக்தி நாட்டுச்சர்க்கரைக்கு உண்டு.எனினும் குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் வரை எவ்வித இனிப்பும் சேர்க்கக்கூடாது என்பதால் ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நாம் இதனை கொடுக்கலாம்.
Wheat Snacks in Tamil
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
கோதுமை மினி குக்கீஸ் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
இதில் கோதுமை மற்றும் நாட்டு சக்கரை இரண்டும் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான்.
எத்தனை நாட்கள் வரை இதை வைத்திருக்கலாம்?
இதை காற்று போகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
கோதுமை மினி குக்கீஸ்
Ingredients
- தேவையானவை
- கோதுமை மாவு- 1 கப்
- நாட்டுச்சர்க்கரை – ½ கப்
- நெய்-1 டே.ஸ்பூன்
- எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
Leave a Reply