Vegetable Dosa in Tamil: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் காலைஉணவு என்றால் அது தோசை,இட்லி மற்றும் சப்பாத்தி தான்.அதிலிருந்து சற்றே வித்தியாசமாக என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கும் அம்மாவாக இருந்தால் நீங்கள் இந்த ஜவ்வரிசி தோசையினை முயற்சி செய்யலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஜவ்வரிசியினை நாம் பொதுவாக பண்டிகை காலங்களில் பாயாசம் செய்வதற்கு பயன்படுத்துவது வழக்கம் ஆனால் அதில் தோசை செய்யலாம் என்பது ஆச்சர்யமாக உள்ளதல்லவா?ஆனால் உண்மையில் சொல்லப்போனால் ஜவ்வரிசியானது பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது.
ஜவ்வரிசியில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் புரோட்டின் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது .எனவே குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
மேலும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலுசேர்க்கின்றது. இதில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு பொருளான ரவையானது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.
மேலும் இதில் கேரட் மற்றும் தயிர் சேர்த்துள்ளதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கால்சியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமான அதே நேரம் மிகவும் சுவையான காலை உணவினைத் தயார் செய்ய இந்த ஜவ்வரிசி தோசையானது சரியான தேர்வாக இருக்கும்.
Vegetable Dosa in Tamil:
ஜவ்வரிசியின் நன்மைகள்:
ஜவ்வரிசி என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து கிடைக்கும் ஒருவகை ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது நாம் பலரும் அறியாத விஷயம். மேலும் இது சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
- ஜவ்வரிசியானது உணவுக்குழாய் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை உள்ளது.
- ஜவ்வரிசி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
- உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது.
- கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தரக்கூடியது.
- ரத்த சோகையை குணமாக்க வல்லது.
- வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது.
- ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வல்லது.
- எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு துணைபுரிகின்றது.
- சீரான இதயசெயல்பட்டிற்கு உதவுகின்றது.
Vegetable Dosa Recipe in Tamil:
- ஜவ்வரிசி- 1 கப்
- ரவை- 1/2 கப்
- அரிசி மாவு -1/2 கப்
- தயிர்-3/4 கப்
- உப்பு -தேவையான அளவு
- கேரட்- 1
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 1
- தண்ணீர்
செய்முறை
1.ஜவ்வரிசியை 4 முதல் 5 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.ஒரு பவுலில் ஊற வைத்த ஜவ்வரிசி, அரிசி மாவு, ரவை, தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
3. நன்கு கலக்கவும்.
4.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
5.வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து மாவினை நன்றாக கலக்கவும். தோசை கல்லை சூடாக்கவும்.
6.தோசை கல்லில் மாவினை ஊற்றவும்.
7.சுற்றிலும் சிறிதளவு நெய் விட்டு தோசை பொன்னிறமானதும் திருப்பி எடுக்கவும்.
8.விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு உணவாக கொடுப்பதற்கு ஏற்றது இந்த ஜவ்வரிசி தோசை. இதில் நம் குழந்தைகளுக்கு விருப்பமான மற்ற காய்கறிகளின் சேர்த்து கொள்ளலாம். காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளுக்கு கட்டாயம் இது சத்தான காலை உணவாகும் அமையும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.தோசையில் உளுந்து சேர்க்க தேவை இல்லையா?
ஆம் உளுந்து சேர்க்க தேவையில்லை ஆனால் உளுந்துக்கு பதிலாக ரவை ரெடிமேட் உளுந்து மாவு ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.
2.இதனுடன் வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கு உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகளை துருவி மாவுடன் கலக்கி தோசையாக சுடலாம்.
குழந்தைகளுக்கான வெஜிடபிள் ஜவ்வரிசி தோசை
Ingredients
- ஜவ்வரிசி-1 கப்
- ரவை-1/2 கப்
- அரிசிமாவு -1/2 கப்
- தயிர்-3/4 கப்
- உப்பு-தேவையான அளவு
- கேரட்-1
- வெங்காயம்-1
- பச்சைமிளகாய்- 1
- தண்ணீர்
Instructions
- 1.ஜவ்வரிசியை4 முதல் 5 மணி நேரம் அல்லதுஒரு நாள் இரவு முழுவதும்தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2.ஒரு பவுலில் ஊற வைத்த ஜவ்வரிசி, அரிசி மாவு, ரவை, தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
- 3.நன்குகலக்கவும்.
- 4.தேவைப்பட்டால்சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 5.வெட்டிவைத்த காய்கறிகளை சேர்த்து மாவினை நன்றாக கலக்கவும். தோசை கல்லை சூடாக்கவும்.
- 6.தோசை கல்லில் மாவினை ஊற்றவும்
- 7. சுற்றிலும் சிறிதளவு நெய் விட்டு தோசை பொன்னிறமானதும் திருப்பி எடுக்கவும்
- 8.விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்
Leave a Reply