Colic Pain Remedies in Tamil : பத்து மாதம் சுமந்த குழந்தையினை கையில் ஏந்துவது என்பது பெற்ற தாய்க்கு மட்டுமல்ல குடும்பத்திற்கு குதூகலம் அளிக்கும் ஒரு விஷயம் தான்.வீட்டிற்கு வரும் குட்டி வரவினை வரவேற்பதில் எந்த அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்து இருக்கின்றதோ அதே அளவுக்கு சவால் நிறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தை பிறந்ததும் ஒரு வருடத்திற்குள் குறிப்பாக சொல்ல போனால் முதல் ஆறு மாதத்திற்குள் குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு கலை போன்றது. ஏனென்றால் குழந்தை எப்பொழுது சிரிக்கும், எப்பொழுது அழத் தொடங்கும் என்று யாருக்கும் தெரியாது.
இன்னும் சொல்லப்போனால் குழந்தை எதற்காக அழுகின்றது கூட சில சமயம் கண்டுபிடிப்பது கடினமான விஷயம். எனினும் எல்லா குழந்தைகளும் பொதுவாக அழுவது கோலிக் பெயின் எனப்படும் வயிற்று வலிக்கு தான்.
Colic Pain Remedies in Tamil:
கோலிக் பெயின் என்றால் என்ன? இது எதனால் ஏற்படும்?
பொதுவாக குழந்தைக்கு பெருங்குடலில் ஏற்படும் வலி தான் கோலிக் பெயின் என்று அழைக்கப்படுகிறது.குழந்தைகள் உணவினை சரியாக செரிமானம் செய்ய இயலாத பொழுது கோலிக் பெயின் ஏற்படும். பொதுவாக குழந்தைகள் பிறந்து மூன்றாவது வாரத்தில் தொடங்கும் இந்த வலியானது நாலு முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே இருக்கும்.
அதன் பின்பு இந்த தொந்தரவு இருக்காது. வாயு மற்றும் அஜீரணம் போன்றவை இந்த வலியை ஏற்படுத்துகின்றது என்றாலும் இதற்கு சரியான காரணம் இதுதான் என்று சொல்ல முடியாது.
பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் உள்ள பொருள் சகிப்புத்தன்மையின்மை காரணமாகவும் இது ஏற்பட வாய்ப்பு உண்டு.குழந்தைகளுக்கு ஏற்படும் பெருங்குடல் வலியை போக்குவதற்கான 10 எளிமையான வீட்டு வைத்தியங்களை நாம் இப்போது காணலாம்.
Colic Pain Remedies in Tamil:
1.உடலில் துணியினை சுற்றுவது
குழந்தைகளின் உடலினை மென்மையான பருத்தி துணி கொண்டு நன்கு சுற்றி வைக்க வேண்டும் புதிதாக வரும் குழந்தைக்கு சுற்றுப்புறச் சூழலானது உடனே பழகாது.இப்படி பருத்தி துணியினால் சுற்றி வைக்கும் போது குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மூடி இருப்பதால் கதகதப்பாக உணர்வார்கள் மேலும் வலியில் இருந்து விடுபட இது உபயோகமாக இருக்கும்.
2.மசாஜ்
குழந்தைகளின் வயிற்றுப் பகுதியில் மெதுவாக மசாஜ் செய்வது அவர்களை வலியில் இருந்து விடுபடச் செய்யும். விரல் நுனிகளை கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.மசாஜ் செய்யும் பொழுது தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை லேசாக சுட வைத்து வெதுவெதுப்பாக தடவி மசாஜ் செய்யலாம்.
3.சைக்கிள் பயிற்சி
குழந்தைகளின் வயிற்றில் வாயு ஏதேனும் இருப்பின் அதனை வெளியேற்ற இந்த பயிற்சி உபயோகமாக இருக்கும். குழந்தைகளின் இரு கால்களையும் பிடித்து சைக்கிள் ஓட்டுவது போன்று முன்னும், பின்னும் நாம் அசைக்கும் பொழுது குழந்தைகளின் உடலில் உள்ள வாயு வெளியேறுவது மட்டுமல்லாமல், மலச்சிக்கலுக்கு தீர்வாகவும் இருக்கும்.
4.பசி ஃபயர்
குழந்தைகள் வாயில் வைத்து சுவைக்கும் போது குழந்தைகள் வலியில் இருந்து விடுபட அது உதவியாக இருக்கும்.மேலும் எச்சில் ஊறுவதால் குழந்தைகளின் செரிமானத்தை தூண்டவும் இது உபயோகமாக இருக்கும்.
Colic Pain Remedies in Tamil:
5.ஏப்பம் விடுதல்
குழந்தைகளை பால் கொடுத்தவுடன் ஏப்பம் விட வைப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் ஒவ்வொரு முறை பால் குடித்த பின்பும் ஏப்பம் விடுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஏப்பம் விடவில்லை என்றால் குழந்தையினை தோளில் போட்டு முதுபுறம் மெதுவாக தட்டிக் கொடுக்க வேண்டும்.குழந்தைகள் ஏப்பம் விடும் வரை இதனை செய்ய வேண்டும்.
6.வெதுவெதுப்பு ஒத்தடம்
துணியினை வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து பிழிந்து குழந்தைகளின் வயிற்றில் மசாஜ் செய்யலாம் அல்லது குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கும் பொழுது வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
7.ஒயிட் நாய்ஸ் மெஷின்
குழந்தைகளை சுற்றிலும் அமைதியான சுற்றுப்புற சூழலை உருவாக்க இந்த மெஷின் ஆனது துணை புரியும். எனவே குழந்தைகளுக்கு நன்றாக தூங்குவதற்கான சூழ்நிலை கிடைக்கும். குழந்தைகள் நன்றாக ஓய்வு எடுத்தாலே வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
8.கெமோமில் டீ
கெமோமில் தேநீர் என்பது குழந்தைகளின் பெருங்குடல் வலியைப் போக்க உதவும் ஒரு இயற்கை தீர்வாகும். ஒரு கப் கெமோமில் தேநீரை காய்ச்சி, அதை ஆறவைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு கொடுக்கவும். கெமோமில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது குழந்தையின் செரிமான அமைப்பை ஆற்றவும், பெருங்குடல் வலியைக் குறைக்கவும் உதவும்.
9.பெருஞ்சீரகம் விதைகள்
பெருஞ்சீரகம் விதைகள் பல நூற்றாண்டுகளாக குழந்தைகளுக்கு ஏற்படும் பெருங்குடல் வலிக்கான இயற்கையான வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் அளவிற்கு கொடுக்கவும்.பெருஞ்சீரகம் விதைகள் குழந்தையின் செரிமான அமைப்பை ஆற்றவும், பெருங்குடல் வலியைப் போக்கவும் உதவும்.
10.புரோபயாடிக்குகள்
புரோபயாடிக்குகள் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ஆகும், அவை குழந்தையின் செரிமான அமைப்பை மேம்படுத்தவும், பெருங்குடல் வலியைக் குறைக்கவும் உதவும். தாய் புரோபயாடிக்குகளை எடுத்துக் கொண்டால், சப்ளிமெண்ட்ஸ் வடிவில் அல்லது தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு புரோபயாடிக்குகளை கொடுக்கலாம்.
Colic Pain Remedies in Tamil:
Leave a Reply