Kudalpulu Veetu Vaithiyam in Tamil:குடற்புழு பிரச்சனை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று.உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22 கோடி குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது.பல்வேறு வழிகளில் நம் உடலுக்குள் நுழையும் புழுக்கள் நம்மை அறியாமலேயே பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.இதை கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் உண்டு என்றாலும் குழந்தைகள் விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனென்றால் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பதை அவர்களால் சொல்ல முடியாது.எனவே குடற்புழு வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதையும் படிங்க: குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
குடற்புழு எதனால் ஏற்படுகிறது?
நம்மில் பொதுவாக அறியப்படும் காரணம் இனிப்பு சாப்பிடுவதனால் குடற்புழு உருவாகும் என்பதே.அதுவும் ஒரு காரணம் என்றாலும் அதை போன்றே பல்வேறு காரணங்கள் உள்ளன. அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம்.பொதுவாக புழுக்களில் உருண்டைப் புழு,கொக்கிப் புழு, நூல் புழு ,சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இவற்றில் பெண் புழுக்கள் இடும் முட்டை மனித உடலில் மலம் மூலமாக வந்து நிலத்தில் கலந்து மண்ணில் கலக்கும்.
குழந்தைகள் மண்ணில் விளையாடும் பொழுது அந்த கிருமிகள் கைகளிலும்,நக இடுக்குகளிலும் ஊடுருவுகின்றன.பின்னர் குழந்தைகள் அவர்களை அறியாமல் கைகளை வாயில் வைக்கும் பொழுது புழுக்கள் எளிதாக குடலுக்குள் செல்கின்றன.குழந்தைகள் செருப்பில்லாமல் மண் தரைகளில் நடக்கும் பொழுது பாதங்கள் வழியாக கொக்கி புழுக்கள் உடலுக்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
அசுத்தமான தண்ணீர் அருந்துவதாலும் கிருமிகள் எளிதாக உடலுக்குள் உடுருவுகின்றன.இது தவிர செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்டுகள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும் இப்புழுக்கள் எளிதாக உருவாகின்றன.
Kudalpulu Veetu Vaithiyam in Tamil:
குடற்புழுவிறகான அறிகுறிகள்
- குழந்தைகள் காரணம் இல்லாமல் அழுதல்.சில குழந்தைகள் ஆசன வாயை குறிப்பிட்டு காண்பிப்பார்கள்.
- வயிற்று போக்கு
- பசியின்மை
- செரிமானம் இல்லாமை
- குமட்டல்
- இரவில் தூக்கமின்மை
- தலைவலி
- அனிமியா
குடற்புழு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
குடற்புழு பிரச்சனை இருந்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சிறந்தது.மலப்பரிசோதனை செய்து எந்தப் புழு உடலில் உள்ளது எனத் தெரிந்துகொண்டு, அந்த புழுவை ஒழிக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.எத்தனை நாட்கள் இடைவெளியில் மருந்துகள் சாப்பிட வேண்டும் என்பதை கவனமாக கேட்டறிதல் வேண்டும்.பொதுவாக குழந்தைகளுக்கு திரவ வடிவிலான மருந்துகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கப்படும்.
“வரும்முன் காப்போம்”
மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் வரும் முன் காப்போம் என்பதே.குடல் புழு தொந்தரவு ஏற்பட்டபின் என்ன செய்வது என்று யோசிப்பதை விட வராமல் தடுக்க அதற்கான முன்னெச்சிரிக்கையை மேற்கொள்வதே சிறந்தது. குடற்புழு பாதிப்பினை தடுக்க கீழ்கண்டவற்றை கடைபிடிக்க வேண்டியது அவசியம்:
- குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
- நகங்களை பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.
- குழந்தைகள் விரல் சூப்பக்கூடாது
- குழந்தைகளுக்கு ஈரமான உள்ளாடைகளை அணிவிக்க கூடாது.
- ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது
- சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.
- கால்களில் காலணி அணியாமல் வெளியே செல்லக்கூடாது.
- வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
சுகாதாரத்தோடு நம் முன்னோர்கள் கடைபிடித்த பல்வேறு பாட்டி வைத்தியங்கள் உள்ளன.அவற்றில் எதாவது ஒன்றை கடைபிடித்தாலே போதும்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தைகளுக்கான பாரம்பரிய நலங்கு மாவு.வீட்டிலேயே செய்வது எப்படி?
Kudalpulu Veetu Vaithiyam in Tamil:
பாட்டி வைத்தியம்
தேங்காய்
குடற்புழு வராமல் தடுக்கும் மருத்துவ குணம் தேங்காய்க்கு உண்டு.குழந்தைகளுக்கு சிறிதளவு தேங்காய் பால் வாரம் ஒருமுறை பருகச்செய்வது குடற்புழு வராமல் தடுக்கும்.
கேரட்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாப்பிடுவது நூல் புழுக்களை வெளியேற்ற சிறந்த மருந்தாகும்.கேரட்டை மென்று சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு துருவியோ அல்லது சாறாகவோ கொடுக்கலாம்.
பப்பாளி
பப்பாளி ஜூஸை வெது வெதுப்பான நீரில் கலந்து இரண்டு நாட்கள் தொடர்ந்து பருக நல்லநிவாரணம் கிடைக்கும்.பப்பாளியில் அதிக அளவு ப்லேவனைடு உள்ளதால், கிருமிகளை எதிர்த்து போராட ஊக்குவிக்கிறது.இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் குடற்புழு வருவதை தடுக்கலாம்.
பூசணி விதைகள்
நாடாப்புழுக்களை வெளியேற்ற பூசணி விதைகள் சிறந்த மருந்தாகும். உலர்ந்த விதைகளை பொடி செய்து கொதிக்க வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர புழுக்கள் அண்டாது.
பூண்டு
பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது குடற்புழு உருவாவதை தடுக்கும்.குழந்தைக்ளுக்கு பருப்பு சாதம் முதலியை கொடுக்கும் பொழுது பூண்டை சேர்த்து தயாரிக்கலாம்.
வேப்பம் பூ
வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும்.
துளசி
தினமும் இரண்டு துளசி இலைகளை உண்டு வந்தால் பூச்சி தொல்லை இருக்காது.துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வர பூச்சிகள் நீங்கும்.
வேப்பிலை
வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிட செய்தால் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.
மோர்
மோருடன் மஞ்சள் கலந்து வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் பூச்சிதொல்லை இருக்காது. பெரியவர்களும் இதனை செய்யலாம்.
கிராம்பு
ஒரு கப் சூடான தண்ணீரில் ஒரு டீ.ஸ்பூன் கிராம்பு சேர்த்து 10-15 நிமிடங்கள் ஊறவைத்து ஒரு நாளைக்கு 1 டம்ளர் வீதம் ஒரு வாரம் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Thank you for sharing very useful information.
Thanks for your valuable comment dear.
Thanks for your valuable words dear.
.y son is twelve months old he is having worms what I can do
குடற்புழுவிற்கான வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றில் எதையாவது ஒன்றை பின்பற்றிப்பாருங்கள் டியர்.
https://tamil.mylittlemoppet.com/kudalpulu-veetu-vaithiyam-in-tamil/
குடற்புழுவிற்கான வீட்டு வைத்தியத்திற்கு கீழ்கண்ட லிங்கை கிளிக் பண்ணுங்க டியர்.கீழ்க்கண்டவற்றில் ஏதாவதொரு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
https://tamil.mylittlemoppet.com/kudalpulu-veetu-vaithiyam-in-tamil/
My daughter is seven years old, she is very Sicky baby, frequently admitted in hospital,for fever & cold,we are vegetarian,lm working too, how I boost my daughter immunity give me diet charts
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றையெல்லாம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளுங்கள் டியர்.
https://tamil.mylittlemoppet.com/noi-edirppu-sakthi-in-tamil/
மூன்று மாதம் முடிந்த குழந்தைக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் இருக்கும் அதை எப்படி தீர்க்கலாம்
மலத்தில் புழு வெளியேறினால் அதை வைத்து கண்டறியலாம் டியர்.தாய்ப்பால் கொடுப்பதால் நீங்கள் பாகற்காயினை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.