Mushroom Pulav in Tamil: குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொடுப்பதற்கு ஏற்ப ஆரோக்கியமான பல ரெசிபி வகைகளை நாம் பார்த்து வருகின்றோம். பொதுவாக குழந்தைகளுக்கு காய்கறி, பழங்கள் மற்றும் சிறுதானியங்களில் செய்த உணவைதான் நான் பெரும்பாலும் பரிந்துரைத்து அதனை ரெசிபியாக உங்களுக்கு கொடுக்கின்றேன். ஆனால் குழந்தைகள் நாவிற்கு இதனை தொடர்ச்சியாக சாப்பிடும் பொழுது ஒரு குட்டி பிரேக் வேண்டும் என்று ஆசைப்படும் அல்லவா! குழந்தைகள் பொதுவாகவே பிரியாணி, புலாவ் என்றால் மிச்சம் வைக்காமல் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் அதனை ஹோட்டல்களில் வாங்கிக் கொடுக்கும் பொழுது அஜினமோட்டோ மற்றும் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாத மசாலா பொருட்கள் சேர்த்திருப்பார்களோ என்ற ஐயம் நமக்குள் இருக்கும். அதனையே வீட்டில் செய்து கொடுத்தால் நம் குழந்தைகள் சாப்பிடும் பொழுது ஏற்படும் சந்தோஷம் ஒரு தனி சுகம் தானே. அப்படி ஒரு ஹெல்த்தியான மஸ்ரூம் புலாவ் எனப்படும் காளான் புலாவ் ரெசிபியை தான் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
குழந்தைகளுக்கு என்னென்ன மசால் கொடுத்தால் சரியாக இருக்கும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இந்த ரெசிபி செய்திருப்பதால் நீங்கள் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக இந்த ரெசிபியினை செய்து கொடுக்கலாம். வீட்டில் பண்டிகை நாட்கள் வரும் பொழுதும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஸ்பெஷல் ஆக செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த காளான் புலாவினை கொடுக்கலாம்.
Mushroom Pulav in Tamil
Mushroom Pulav in Tamil
ரெசிபியினை பார்ப்பதற்கு முன்னால் காளான் புலாவ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்:
- குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்த சத்தான உணவு என்றால் காளான் என்று சொல்லலாம்.
- குறிப்பாக இதில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை அளித்து மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
- குறிப்பாக சில உணவுப் பொருட்களில் மட்டுமே இயற்கையாகவே வைட்டமின் டி இருக்கும். காளானில் அவ்வாறே வைட்டமின்- டி நிறைந்திருப்பதால் குழந்தைகளின் எலும்புகள் கால்சியத்தினை உறிஞ்சி நன்றாக வளர்ச்சி அடைவதற்கு இந்த வைட்டமின் உதவுகின்றது.
- மேலும் இதில் இருக்கும் செலினியம் எனப்படும் பொருளானது நோய் ஏற்பும் மண்டலத்தை வலுவாக்க வல்லது.பல்வேறு வகையான கிருமிகளை குழந்தைகள் எதிர் கொள்ள விருப்பதால் இந்த செலினியம் ஆனது நோயிலிருந்து பாதுகாக்க துணை புரிகின்றது.
- காளானில் புரோட்டின் அதிகம் என்பதால் குழந்தைகளின் தசைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைவதற்கு உதவுகின்றது.
- காளானில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் செல்கள் சிதைவடையாமல் தடுக்க வல்லது.
- மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றது.
Mushroom Pulav in Tamil:
- பாசுமதி அரிசி- 1 கப் (அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்)
- நறுக்கிய காளான்- 1 கப்
- நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய தக்காளி-1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டீ.ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-1
- சீரகத்தூள்- 1 டீ.ஸ்பூன்
- கரம் மசாலா- 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை டீ.ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் அல்லது நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்-2 கப்
- உப்பு- தேவையான அளவு
- பொடியாக நறுக்கியகொத்தமல்லி இலைகள்.
Mushroom Pulav in Tamil:
செய்முறை
- கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊத்தி சூடாக்கி சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய காளானை சேர்த்து மூன்று முதல் நாலு நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் அளவிற்கு வதக்கவும்.
- கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறவும்.
- பாஸ்மதி அரிசி சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- மிதமான தீயில் 15 முதல் 18 நிமிடங்களுக்கு அரிசியை நன்றாக வேகவிடவும்.
- பின் அடுப்பை அணைத்து ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
- கொத்தமல்லி இலை தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
நீங்கள் குக்கரில் வைக்க வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ருசியாக புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிரியாணி சென்ற இடம் தெரியாது. தட்டில் உள்ள மொத்தத்தையும் காலி செய்து விடுவார்கள்.
Mushroom Pulav in Tamil
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அசைவம் சாப்பிடாதவர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்குமா?
அசைவ உணவில் இருக்கும் புரோட்டின் அனைத்தும் காளானில் இருப்பதால் தாராளமாக அசைவ உணவிற்கு மாற்றாக காலனை எடுத்துக் கொள்ளலாம்.
காளான் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
காளானில் ப்ரோட்டீன் அதிகம் இருப்பதால் சீரான தசை வளர்ச்சிக்கு உதவுமே தவிர கொழுப்பினை உடலில் தங்க விடாது.
எல்லா வகை காளான்களையும் உட்கொள்ளலாமா?
சில காலங்கள் விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் கடையில் விற்கும் காளான் மட்டுமே வாங்கி உட்கொள்வது சிறந்தது.
காளான் எப்படி சமைக்க வேண்டும்?
காளானில் உள்ள தூசி அனைத்தையும் ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு நன்றாக துடைத்து கழுவி ஊற வைத்த பின் சமைக்க வேண்டும். காளான் சமைக்கும் பொழுது நன்கு வெந்துள்ளதா என்பதை சரி பார்த்துக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
Leave a Reply