Chicken Pizza Recipe: இதுவரை நாம் பார்த்த ரெசிபிகள் அனைத்துமே குழந்தைகளின் நலனை முக்கியத்துவம் கொண்டு பெரும்பாலும் சிறுதானியங்களை கொண்டு செய்த ரெசிபியாக தான் இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் இதே ஃபிளேவரில் செய்து கொடுக்கும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு சற்று போர் அடித்து விடுகிறது எனவே வித்தியாசமாக ஏதேனும் சொல்லுங்கள் என்று கேட்கும் அம்மாக்களுக்காக இன்று நாம் வித்தியாசமான சிக்கன் பீட்சா ரெசிபியை பார்க்க போகின்றோம்.
பொதுவாக பீட்சா என்றாலே நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவது தான் வழக்கம். கடைகளில் விற்கப்படும் பீட்சா என்ன மாவினை கொண்டு செய்யப்படுகிறது? என்ற விவரம் நமக்கு தெரியாது. மேலும் அதில் என்னென்ன உட்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பனவும் பெரிய புதிராக இருக்கும்.
Chicken Pizza Recipe
ஏனென்றால் இன்று வகை வகையாக அத்தனை பிளேவர்களில் பீட்சாக்கள் கிடைக்கின்றன. எனவே குழந்தைகளுக்கு நாமே வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு உணவினை வீட்டிலேயே செய்து கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும் அல்லவா?
சிக்கன் குழந்தைகளுக்கு அதிக அளவு புரோட்டினை தரும் என்பதால் சற்று வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு பீட்சா எப்படி செய்யலாம் என்பதை இந்த ரெசிபியில் பார்க்கலாம்.
அதற்கு முன்பாக குழந்தைகளுக்கு சிக்கன் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்:
Chicken Pizza Recipe

- சிக்கனில் அதிக அளவு புரோட்டின் உள்ளதால் குழந்தைகளின் தசைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான நல்ல புரோட்டினை சிக்கன் குழந்தைகளுக்கு தருகின்றது.
- கோழிக்கறி நிறைந்திருக்கும் பாஸ்பரஸ் மற்றும் புரோட்டின் எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகின்றன.
- சிக்கனில் ஜிங்க் மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- மேலும் வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்ற வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் மூளை வளர்ச்சியை துரிதப்படுத்தி குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது.
- மேலும் சிக்கனில் நிறைந்திருக்கும் புரோட்டின் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்க வல்லது.
- சிக்கனில் கிரகித்துக் கொள்ளக்கூடிய இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு சிக்கன் கொடுத்தால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- மற்ற அசைவ உணவுகளை போடலாமல் சிக்கன் மிருதுவாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடுவதற்கும் மற்றும் செரிமானத்திற்கும் ஏற்றதாக இது இருக்கும்.
- சிக்கன் உடன் மற்ற உணவுகளான காய்கறிகள் முழு தானியங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு நல்ல சரிவிகிதஉணவாக இது இருக்கும்.
Chicken Pizza Recipe
- எலும்பு நீக்கிய சிக்கன்- 400 கிராம்
- மிளகாய்த்தூள்- 2 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இடித்த வத்தல்- 1 டீ.ஸ்பூன்
- மைதா மாவு- 2 டீ.ஸ்பூன்
- வீட்டிலேயே செய்த ஷெஸ்வான் சாஸ்- 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாஸ்- 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம்
- நறுக்கிய குடைமிளகாய்
- துருவிய சீஸ்
- தேவையான அளவு- எண்ணெய்
Chicken Pizza Recipe
செய்முறை
- சிக்கனை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அதில் மிளகாய்த்தூள், உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், முழு கோதுமை மாவு மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி, இந்த கலவையை பீட்சா அடிப்பகுதி (Pizza Base) போல பரப்பவும்.
- மிதமான தீயில் ஒவ்வொரு பக்கமும் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- பிறகு அதன் மேல் வீட்டிலேயே செய்த ஷெஸ்வான் சாஸ் மற்றும் தக்காளி கெட்சப் தடவவும்.
- வெங்காயம், குடைமிளகாய், துருவிய சீஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும்.
- மூடி வைத்து 3–4 நிமிடங்கள் மிதமான தீயில் சீஸ் உருகும் வரை சமைக்கவும்.
- துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இந்த ஆரோக்கியமான சிக்கன் பீசாவை வீட்டிலேயே செய்யும் பொழுது குழந்தைகளுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசையை நாம் ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றி விட்டோம் என்ற திருப்தி நமக்கு ஏற்படும் .
இதை குழந்தைகள் மட்டும் அல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் சேர்த்து மாலை நேரம் டீ குடிக்கும் பொழுது ஸ்நாக்ஸாக ஜாலியாக சாப்பிடலாம். இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான கலர் கலரான காய்கறிகள் சேர்த்தும் செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Chicken Pizza Recipe

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. இந்த சிக்கன்பீட்சா குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
ஆம். இது கடைகளில் விற்கப்படும் பீட்சாவை விட அதிக புரதச்சத்து கொண்ட ஆரோக்கியமான மாற்றாகும். காய்கறிகள் மற்றும் அளவான சீஸ் சேர்த்து நாம் தயாரித்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல சமச்சீர் உணவாக இது இருக்கும்.
2. இதில் பனீரை டாப்பிங்காக சேர்க்கலாமா?
ஆம். பனீர், கிரில் செய்யப்பட்ட சிக்கன் அல்லது உங்கள் குழந்தைக்கு பிடித்த காய்கறிகளை டாப்பிங்காக சேர்த்து விருப்பத்திற்கேற்ப தயாரிக்கலாம்.
3. இதில் எந்தெந்த காய்கறிகளை சேர்க்கலாம்?
வெங்காயம், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், காளான், தக்காளி, ஆலிவ் மற்றும் பசலைக்கீரை போன்ற காய்கறிகள் சிறந்த தேர்வாகும்.
4. தவாவில் சமைப்பதற்குப் பதிலாக ஓவனில் பேக் செய்யலாமா?
ஆம். சிக்கன் கிரஸ்ட்டை 200°C (400°F) வெப்பநிலையில் 20–25 நிமிடங்கள் பேக் செய்யவும். தேவையெனில் நடுவில் ஒருமுறை திருப்பி, பின்னர் டாப்பிங்ஸ் மற்றும் சீஸ் சேர்த்து, சீஸ் நன்றாக உருகும் வரை மீண்டும் பேக் செய்யவும்.
டேஸ்டியான சிக்கன் பீட்சா ரெசிபி
Ingredients
- எலும்பு நீக்கிய சிக்கன்- 400 கிராம்
- மிளகாய்த்தூள்- 2 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இடித்த வத்தல்- 1 டீ.ஸ்பூன்
- மைதா மாவு- 2 டீ.ஸ்பூன்
- வீட்டிலேயே செய்த ஷெஸ்வான் சாஸ்- 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாஸ்- 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம்
- நறுக்கிய குடைமிளகாய்
- துருவிய சீஸ்
- தேவையான அளவு- எண்ணெய்
Notes
பிறகு அதன் மேல் வீட்டிலேயே செய்த ஷெஸ்வான் சாஸ் மற்றும் தக்காளி கெட்சப் தடவவும். வெங்காயம், குடைமிளகாய், துருவிய சீஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும். மூடி வைத்து 3–4 நிமிடங்கள் மிதமான தீயில் சீஸ் உருகும் வரை சமைக்கவும். துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு பரிமாறலாம்.











Leave a Reply