French Toast Recipe : குழந்தைகளுக்கு நாம் வீட்டில் வழக்கமாக செய்து கொடுக்கும் இட்லி, தோசைக்கு பதிலாக வேற என்ன ஆரோக்கியமாக சிற்றுண்டி செய்து கொடுக்கலாம் என்பதற்கு மாற்றாக தான் பல்வேறு ரெசிபிகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆரோக்கியமாக சிறுதானிய உணவுகளையும், காய்கறிகளையும் கலந்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக அதே நேரம் சுவையாக எப்படி செய்து தரலாம் என்ன நோக்கத்துடன் பிரேக் பாஸ்ட் மற்றும் விதவிதமான மதிய உணவுகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம். ஆனால், இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி வழக்கமான உணவு முறையில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான பிரெஞ்சு டோஸ்ட் ரெசிபி.
பிரட்டை வைத்து செய்யக்கூடிய ரெசிபி தான் என்றாலும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வித்தியாசமாக எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக இனிப்பு சுவைக்காக சீனிக்கு பதில் சர்க்கரையை சேர்த்து செய்துள்ளதால் குழந்தைகளுக்கு நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.
மேலும் இதில் முட்டை மற்றும் பால் சேர்த்துள்ளதால் குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தேன், டேட்ஸ் சிரப் போன்ற ஆரோக்கியமான சுவையூட்டிகளை கலந்து தரலாம்.
French Toast Recipe :
French Toast Recipe:
குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரையை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:
- நாட்டு சக்கரையில் இயற்கையாகவே இரும்புச்சத்து, மெக்னீசியம் ,பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன.
- நாட்டு சக்கரையில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் மினரல்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து குழந்தைகளுக்கு எந்தவிதமான நோய் தொற்றுகளும் வராமல் தடுக்கின்றது.
- நாட்டு சர்க்கரையில் உள்ள நொதிகள் உணவினை நன்கு செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.
- நாட்டு சக்கரை ஆனது இயற்கையான கழிவு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றி உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகின்றது.
- சர்க்கரையில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்க வல்லது.
- சுவாச குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆன ஆஸ்துமா, நுரையீரல் தொற்று போன்றவை வராமல் தடுக்கின்றது.
- சக்கரையில் நிறைந்துள்ள இரும்பு சத்துக்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகப்படுத்தி ரத்தசோகை வராமல் தடுக்கின்றது.
- இதில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுவாக்க வல்லது.
- இத்தனை சத்துக்கள் நிறைந்த சர்க்கரையை குழந்தைகளுக்குப் பிடித்த பிரட் சேர்த்து சுவையாக கொடுத்தால் கட்டாயம் விரும்பி உண்பார்கள்.
French Toast Recipe:
- பிரட் துண்டுகள்-4
- முட்டை-2
- துருவிய வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்
- பால்-1/2 கப்
- நெய் அல்லது பட்டர்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்.
French Toast Recipe:
செய்முறை
- ஒரு பவுலில் முட்டையை ஊற்றி நன்றாக நுரை வரும் அளவிற்கு பாலை ஊற்றி அடிக்கவும்.
- இதனுடன் வெல்லம் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
- கரண்டியால் நன்றாக நுரை வரும் அளவிற்கு கலக்கவும்.
- தோசை கல்லை சூடாக்கி, பிரட்டினை முட்டை கலவையில் முக்கி கல்லில் போடவும்.
- இருபுறமும் பொன்னிறமாக அளவிற்கு எடுக்கவும்.
- பொதுவாக பிரெஞ்சு டோஸ்ட் செய்யும்பொழுது சீனி பயன்படுத்துவதே வழக்கம். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி பனைவெல்லம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
French Toast Recipe :அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த ரெசிபிக்கு எந்த வகையான பிரட் உபயோகிக்க வேண்டும்?
எந்த பிரெட் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி கோதுமை பிரட் உபயோகிப்பது சிறந்தது.
இந்த ரெசிபியில் வெல்லம் சேர்த்துள்ளது ஆரோக்கியமானதா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது எந்த வகையான இனிப்பு பொருளும் சேர்க்காமல் கொடுப்பதே சிறந்தது.
பால் சேர்க்காமல் செய்யலாமா?
இதில் மாட்டு பாலுக்கு பதிலாக பாதாம் பால், சோயா பால் மற்றும் ஓட்ஸ் மில்க் போன்ற பால் வகைகளை சேர்க்கலாம்.
சுவையான பிரெஞ்சு டோஸ்ட்
Ingredients
- பிரட் துண்டுகள்-4
- முட்டை-2
- துருவிய வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்
- பால்-1/2 கப்
- நெய் அல்லது பட்டர்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்.
Notes
2.இதனுடன் வெல்லம் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
3.கரண்டியால் நன்றாக நுரை வரும் அளவிற்கு கலக்கவும்.
4.தோசை கல்லை சூடாக்கி, பிரட்டினை முட்டை கலவையில் முக்கி கல்லில் போடவும்.
5.இருபுறமும் பொன்னிறமாக அளவிற்கு எடுக்கவும்.
பொதுவாக பிரெஞ்சு டோஸ்ட் செய்யும்பொழுது சீனி பயன்படுத்துவதே வழக்கம். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி பனைவெல்லம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும்.
Leave a Reply