Javvarisi Idli : குழந்தைகளுக்கு பெரும்பாலும் இட்லி என்றாலே பிடிக்காது. காலையில் இட்லி என்று சொன்னாலே குழந்தைகளின் முகம் சுருங்கி போகும். ஆனால் நீங்கள் இட்லியை தினமும் செய்யும் அதே சுவையில் செய்து கொடுப்பதை காட்டிலும் வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் விட்டுக் கொடுக்காமல் அதே நேரம் சுவையையும் விட்டுக் கொடுக்காமல் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஜவ்வரிசி இட்லியை செய்து கொடுக்கலாம். ஜவ்வரிசியை வைத்து பொதுவாக நம் பாயாசம் செய்வோம் ஆனால் அதை வைத்து இட்லி செய்ய முடியும் என்று சொன்னால் சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா?
இந்த மெதுவான ஜவ்வரிசி இட்லி உடன் தேங்காய் சட்னி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அடுத்த முறை இட்லியை உங்களிடம் தானே கேட்டு வாங்கி உண்பார்கள். பொதுவாக ஜவ்வரிசியை குழந்தைகளுக்கு கொடுத்தால் ஆரோக்கியமானதா என்ற கேள்வி உங்களிடம் இருக்கும்.
Javvarisi Idli :
எனவே, இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஜவ்வரிசியில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேடுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரக்கூடியது.
- ஜவ்வரிசியானது எளிதில் செரிமானம் ஆகக் கூடியது என்பதால் குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. மேலும் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- சில குழந்தைகளுக்கு குளுடென் எனப்படும் பொருளானது அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அலர்ஜியை ஏற்படுத்தும் குளுடென் இந்த ஜவ்வரிசியில் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கலாம்.
- மேலும் ஜவ்வரிசியில் புரோட்டீன்கள், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
- குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு ஜவ்வரிசி உதவுகின்றது.
- ஜவ்வரிசியில் நிறைந்துள்ள மூலப்பொருட்கள் குழந்தைகளின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்கின்றது.
- உடலை இயற்கையாகவே குளிர்விக்ககூடிய பண்புகள் ஜவ்வரிசிக்கு உண்டு. எனவே ஜவ்வரிசியில் உள்ள நீர்ச்சத்து குழந்தைகளை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது.
Javvarisi Idli :
- ஜவ்வரிசி- ¾ கப்
- இட்லி ரவை- ஒரு கப்
- தயிர் -1.5 கப்
- தண்ணீர்- 1.5 கப்
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 1 டீஸ்பூன்.
Javvarisi Idli :
செய்முறை
- ஜவ்வரிசியை நன்றாக கழுவி ரவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- இதனுடன் தயிர் சேர்ந்து நன்றாக கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- இதனை ஒரு நாள் இரவு அல்லது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 8 மணி நேரங்களுக்கு பிறகு ஊற வைத்த எல்லாவற்றையும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
- இட்லி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கெட்டியாக கலக்கிக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கடுகு முந்திரி பருப்பு போட்டு தாளிக்கவும்.
- இதனை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி எப்பொழுதும் போல இட்லி சுட ஆரம்பிக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
இட்லி ரவைக்கு பதிலாக நாம் அரிசி சேர்க்கலாமா?
இட்லி ரவைக்கு பதிலாக அரிசி சேர்க்கும் பொழுது இட்லியின் சுவையானது வேறுபடும். இட்லி ரவை சேர்க்கும்போது நன்கு மெதுவாக கிடைக்கும்.
இந்த இட்லி மாவினை கண்டிப்பாக இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டுமா?
எட்டு மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்தால் தான் இட்லி மாவிற்குரிய பதம் கிடைக்கும்.
இந்த இட்லி குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
இதில் சேர்த்து இருக்கும் ரவை மற்றும் ஜவ்வரிசி இரண்டுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான்.
ஜவ்வரிசி இட்லி
Ingredients
- ஜவ்வரிசி- ¾ கப்
- இட்லி ரவை- ஒரு கப்
- தயிர் -1.5 கப்
- தண்ணீர்- 1.5 கப்
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 1 டீஸ்பூன்
Notes
இதனுடன் தயிர் சேர்ந்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை ஒரு நாள் இரவு அல்லது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
8 மணி நேரங்களுக்கு பிறகு ஊற வைத்த எல்லாவற்றையும் நன்றாக கலக்கி கொள்ளவும். இட்லி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கெட்டியாக கலக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கடுகு முந்திரி பருப்பு போட்டு தாளிக்கவும். இதனை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி எப்பொழுதும் போல இட்லி சுட ஆரம்பிக்கலாம்.
Leave a Reply