Bottle Gourd Cup Cake: இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ் வகைகள் என்றால் அது பேக்கரி வகைகள் தான் என்று கூறலாம். குழந்தைகளின் கண்களை கவரும் வகையில் விதவிதமான ரகங்கள் மற்றும் வண்ணங்களுடன் கண்ணாடி அலமாரிகள் எங்கும் நிறைந்து இருப்பது தான் அதற்கு காரணம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
முன்பெல்லாம் எண்ணெயில் பொரித்தவை இல்லை தானே அப்படியானால் உடலுக்கு நல்லது தான் என்று விரும்பி வாங்கி கொடுத்த நாம் தற்பொழுது அதில் கலந்து இருக்கும் மைதா மற்றும் சர்க்கரையின் காரணமாக அதையும் வாங்கி கொடுக்க பயமாக தான் இருக்கின்றது.
Bottle Gourd Cup Cake:

அதற்காக தான் நாங்கள் குழந்தைகளின் உடல் நலனுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதில் முக்கியமாக சிறுதானியங்களை குழந்தைகளுக்கு எவ்வாறு எல்லாம் கொடுக்கலாம் என்பதை பற்றி உங்களுக்கு கூறிக் கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதுமே சிறுதானியங்கள் தானா? என்று நீங்கள் சலித்து விடக்கூடாது என்பதற்காக நாம் இப்பொழுது பார்க்க போகின்றது வித்யாசமான சுரைக்காய் கப் கேக். சுரைக்காயை வைத்து கூட்டு தானே செய்யலாம் கேக் எப்படி செய்யலாம் என்றுதானே யோசிக்கிறீர்கள்?
கவலை வேண்டாம் காய்கறி சாப்பிடாத உங்கள் குழந்தைகளையும் எளிதாக சாப்பிட வைக்கும் இந்த சுரைக்காய் கப் கேக். காய்கறி வகைகள் என்றாலே உடலுக்கு நன்மை சேர்ப்பது தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் பச்சையான மற்றும் தண்ணீர் சேர்த்து அதிகம் உள்ள காய்கறிகள் தான் உடல் நலனுக்கு சிறந்தது என்று தற்பொழுது மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் நம் குழந்தைகள் தண்ணீர் சத்துள்ள சுரைக்காய், பீர்க்கங்காய் மற்றும் பூசணிக்காய் போன்ற வகைகளை சாப்பிடுவதே கிடையாது. அப்படி என்றால் அவர்களை எவ்வாறு சாப்பிட வைக்கலாம் என்று நாம் தான் யோசித்து வேறு விதமாக கொடுக்க வேண்டும்.
அதாவது வழக்கமாக வீட்டில் பெரியவர்களுக்கு செய்து கொடுக்கும் பொரியல் கூட்டு போன்று செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் என்றால் அவர்கள் கேட்டார் போல் இப்படி கேக் கொண்டு செய்து கொடுக்கலாம். இதை செய்வதற்கு முன்பு இவற்றில் அடங்கி இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
Bottle Gourd Cup Cake:
- சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் இது எளிதில் செரிமானமாக கூடிய ஒரு காய் வகையாகும்.
- இதில் தண்ணீர் சேர்த்து அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும் முக்கியமாக கோடை காலத்தில் குழந்தைகளுக்கு இந்த காய்கறியை கொடுக்க உடலுக்கு மிகவும் நல்லது.
- சுரைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலுக்கு ஏற்ற தீர்வாக இருக்கும்.
- இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு பலம் அளிக்கின்றது.
- இதில் கொழுப்பு சத்துக்கள் குறைவு என்பதால் இதய நலத்திற்கு சிறந்தது.
- இதில் நிறைந்திருக்கும் நீர்ச்சத்தின் காரணமாக உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சியை தரக்கூடியது.
Bottle Gourd Cup Cake:
- துருவிய சுரைக்காய்- ஒன்றரைக் கப்
- பால்- கால் கப்
- ஆளி விதை பொடி- 1 டேபிள் ஸ்பூன் மற்றும் தண்ணீர் 3 டேபிள் ஸ்பூன் கலந்த கலவை. (முட்டைக்கு பதிலாக)
- வெல்லத்தூள்- 2/3 கப்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீ ஸ்பூன்
- ஓட்ஸ் மாவு- 1 1/4 கப்
- கோகோ பவுடர்- அரை காப்பு
- பாதாம் பட்டர்- 1/3 கப்
- சாக்லேட் துருவல்கள்- மேலே தூவ
Bottle Gourd Cup Cake:
செய்முறை
1. சுரைக்காயை நன்றாக துருவி அதை தண்ணீர் வெளியேறும் அளவிற்கு நன்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
2. ஆலிவ் விதைபோடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி சில நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
3. ஒரு பவுலில் துருவிய சுரைக்காய், பால், ஆளி விதை கலவை, வெல்லத்தூள், வெண்ணிலா எசன்ஸ், ஓட்ஸ் மாவு, கோக்கோ பவுடர் மற்றும் பாதாம் பட்டர் சேர்க்கவும்.
4. எல்லாம் ஒன்றாக சேரும் அளவிற்கு நன்றாக கலக்கவும்.
5. இந்த கலவினை கப் கேக் மோல்டில் ஊற்றி அதன் மேல் சாக்லேட் துருவல்களை துருவவும்.
6. இதனை ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு 30 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
7. குச்சியை வைத்து கேக் நன்றாக வெந்துள்ளதா என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
நன்கு ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக மற்றும் குழந்தைகள் விரும்பும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த சுரைக்காய் கப் கேக்கலை நீங்கள் தாராளமாக செய்து கொடுக்கலாம்.
மைதா சேர்க்காமல் ஓட்ஸ் மாவு சேர்த்து செய்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேக் கொடுத்தோம் என்கிற திருப்தி நமக்கு இருக்கும்.
குழந்தைகள் விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காகவும், கடைகளில் விற்கும் கேக் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காகவே வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சாக்லேட் துருவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டாம் என்று நினைத்தால் இவை சேர்க்காமல் செய்து பார்க்கலாம்.
Bottle Gourd Cup Cake:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Bottle Gourd Cup Cake:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. ஓட்ஸ்மாவிற்கு பதிலாக மைதா மாவு சேர்க்கலாமா?
மைதா மாவு உடலுக்கு கெடுதி என்பதால் நான் ஓட்ஸ் மாவு சேர்த்துள்ளேன். உங்களுக்கு வேண்டுமென்றால் மைதா மாவு சேர்த்து பார்க்கலாம். ஆனால் ஓட்ஸ் மாவில் செய்யும்போது கேக் மிகவும் மென்மையாக இருக்கும்.
2. பாதாம் பட்டருக்கு பதிலாக சாதாரண பட்டர் உபயோகிக்கலாமா?
நீங்கள் தாராளமாக கடைகளில் விற்கும் பாலில் செய்யப்படும் பட்டர் வாங்கி உபயோகிக்கலாம்.
3. எவ்வளவு நாள் வரை இந்த கப் கேக்கினை வைத்து இருக்கலாம்?
காற்று போகாத டப்பாவில் அடைத்து மூன்று நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply