Pachai Pattani Chapati : குழந்தைகளுக்கு புரோட்டின் நிறைந்த காலை உணவு கொடுப்பது என்பது உண்மையில் சவாலான விஷயம்தான். காலையில் வழக்கமாக நாம் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க பழகிவிட்டு புரோட்டின் நிறைந்த உணவு கொடுக்க வேண்டும் என்றால் எப்படி கொடுப்பது என்ற சந்தேகம் பல அம்மாக்களுக்கும் இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் நாம் கொடுக்கும் உணவிலேயே புரோட்டின் சேர்த்து விட்டால் குழந்தைகளுக்கு உணவுடன் புரோட்டின் போய் சேர்ந்து விடும். அதற்காக யோசித்தது தான் இந்த பச்சை பட்டாணி சப்பாத்தி.
Pachai Pattani Chapati
பெரியவர்கள் என்றால் சப்பாத்தியுடன் பச்சை பட்டாணி குருமா சேர்த்து சாப்பிட்டவுடன் தேவையான புரோட்டின் கிடைத்து விடும். ஆனால் சப்பாத்திக்கு குருமா தொட்டு சாப்பிடாத குழந்தைகள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
அப்படி என்றால் அவர்களுக்கு புரோட்டீன் எப்படி போய் சேரும் என்பதற்காக ரெசிபி தான் இந்த டேஸ்டியான பச்சை பட்டாணி சப்பாத்தி.
பச்சை பட்டாணி மற்றும் பன்னீர் ஆகியவற்றை சப்பாத்தியுடன் கலந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு சுவையான அதே சமயம் ஆரோக்கியமான உணவு கொடுத்ததற்கு நமக்கு ஏற்படும்.
சப்பாத்தி நிறமும் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து விடுவதற்கும் இது ஏற்ற ரெசிபியாக இருக்கும்.
Pachai Pattani Chapati:

இந்த ரெசிபியை பார்ப்பதற்கும் முன்னால் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- பச்சை பட்டாணியில் புரோட்டின் அதிகம் என்பதால் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.
- பச்சை பட்டாணியில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- பச்சை பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின்களான வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகின்றது.
- கோதுமை மற்றும் பச்சை பட்டாணியில் நிறைந்து இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் குழந்தைகளுக்கு நாள் முழுவதற்கும் தேவையான எனர்ஜியை தருகின்றது.

- மேலும் இதில் சேர்த்திருக்கும் பன்னீரிலும் புரோட்டின் சத்து அதிகம் என்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு துணை புரிகின்றது.
- பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் என்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பசியை கட்டுப்படுத்தும் தன்மை பன்னீருக்கு இருப்பதால் பன்னீரை எடுத்துக் கொள்ளும் பொழுது நீண்ட நேரத்திற்கு பசிக்காமல் மெதுவாக ஆற்றலை வெளிவிடும் தன்மை உடையது.
- பன்னீரில் லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் எனப்படும் பண்பு இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காமல் இருக்க உதவுகின்றது.
- பன்னீரில் சிங்க், செலினியம் போன்றவை அதிகமாக இருப்பதால் இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றது.
Pachai Pattani Chapati
- கோதுமை மாவு – 1 கப்
- பச்சை பட்டாணி- 1/2 கப்
- பன்னீர்- 1/2 கப்
- உப்பு- தேவையான அளவு
- நெய் மற்றும் எண்ணெய் -தேவையான அளவு
Pachai Pattani Chapati
செய்முறை
- பச்சை பட்டாணியை குக்கரில் இரண்டு முதல் மூன்று விசில் வரும் அளவிற்கு வேகவைத்து ஆறவிடவும்.
- பச்சை பட்டாணியை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பன்னீர் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
- ஒரு பவுலில் கோதுமை மாவு உப்பு மற்றும் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.
- மாவினை பத்து முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- எப்பொழுதும் நாம் சப்பாத்தி சுடுவது போன்று தோசை சட்டியில் போட்டு சப்பாத்தி சுடவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சப்பாத்தி ரெடி.
சத்தான உணவு பொருட்களை குழந்தைகளுக்கு எப்படி மறைமுகமாக நாம் தருகின்றோம் என்பதற்கு இந்த பச்சை பட்டாணி சப்பாத்தி நல்ல எடுத்துக்காட்டாகும்.
இந்த சப்பாத்தியை வெறும் வாயில் சாப்பிட்டால் கூட குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியது.
இதனை குழந்தைகளுக்கு தயிர் சேர்த்தோ, பருப்பு சேர்த்தோ அல்லது காய்கறி குருமாவுடரோ சேர்த்துக் கொடுக்கலாம்.
வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு புரோட்டின் நிறைந்த உணவினை கொடுத்த திருப்தி நமக்கு ஏற்படும்.
Pachai Pattani Chapati:

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.











Leave a Reply