Pumpkin Idiyappam Recipe: குழந்தைகளுக்கு காலை உணவு தருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் அவர்களுக்கு பிடித்தமான வகையில் செய்து தர வேண்டும் என்பது அம்மாக்களுக்கு உண்மையில் ஒரு பெரிய சவால்தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால் வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் இட்லி, தோசை போன்றவற்றை தரும் பொழுது முகம் சுளிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தவாறு என்ன செய்து தருவது என்பதே நமக்கு பெரும் குழப்பமாக இருக்கும்.
சிறுதானிய வகைகளை கொடுப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தாலும் கூட அதையும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு செய்து தர வேண்டும் என்பதை பற்றி தான் நம் யோசனை இருக்கும்.
Pumpkin Idiyappam Recipe:
அதனால் தான் சிறு தானியங்கள் வைத்து செய்து தரக்கூடிய சுவையான ரெசிபிகளை நாம் அடிக்கடி பதிவிட்டு வருகின்றோம். இவற்றைத் தவிர இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றையும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக எப்படி தருவது என்பதை பற்றி பல வகையான ரெசிபிகளை நாம் பார்த்து விட்டோம்.
அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி வித்தியாசமான பூசணிக்காய் இடியாப்பம். பூசணிக்காயில் குழந்தைகளுக்கு தேவையான அளவற்ற சத்துக்கள் இருந்தாலும் அந்த காயை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.
பெரியவர்களுக்கும் கூட பூசணிக்காய் அவ்வளவாக பிடிக்காது. அப்படி என்றால் பூசணிக்காயின் சுவை தெரியாதவாறு குழந்தைகளுக்கு அதை மறைத்து வேறு விதமாக எப்படி கொடுக்கலாம் என்று யோசித்தபோது கிடைத்த ரெசிபி தான் இந்த பூசணிக்காய் இடியாப்பம்.
இடியாப்பம் பொதுவாக நூடுல்ஸ் போன்று இருப்பதால் எல்லா குழந்தைகளும் அதனை விரும்பி உண்பார்கள். அதனுடன் பூசணிக்காயை இவ்வாறு கலந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு பூசணிக்காயை கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.
Pumpkin Idiyappam Recipe:

இந்த பூசணிக்காய் இடியாப்பம் ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் பூசணிக்காயில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- பூசணிக்காயில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் பார்வை திறனுக்கு இது உதவுகின்றது.
- பூசணிக்காயில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளதால் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகின்றது.
- பூசணிக்காயில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- பூசணிக்காயில் இயற்கையாகவே இனிப்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு சீனி போன்றவை தேவைப்படாமல் இயற்கையான இனிப்பு சுவையுடன் இந்த இடியாப்பம் இருக்கும்.
- அத்துடன் மட்டுமல்லாமல் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவையும் இந்த பூசணிக்காயில் நிறைந்துள்ளன.
Pumpkin Idiyappam Recipe
தேவையானவை
- அரிசி மாவு- 1 கப்
- பூசணிக்காய் (வேகவைத்து மசித்தது)- அரை கப்
- தண்ணீர்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு (ஒரு வயதிற்கு மேல்)
- நெய்- அரை கப்
செய்முறை
- பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாக வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுலில் அரிசி மாவு, மசித்த பூசணிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.
- அதனுடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- இடியாப்பத்தை இட்லி தட்டில் பிழிந்து கொண்டு 8- 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேங்காய் பூ தூவியோ அல்லது தேங்காய் பால் பிழிந்து இடியாப்பத்தில் ஊற்றியோ கொடுக்கலாம்.
சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது தேங்காய் பால் சேர்த்து சிறிது ஊற வைத்து ஊட்டலாம்.நேரடியாக பூசணிக்காயை கூட்டாக வைத்து கொடுக்கும் பொழுது பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.
அதற்கு பதிலாக இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் உள்ள பெரியோர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவருக்கும் நல்ல சத்தான காலை உணவு சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Pumpkin Idiyappam Recipe









Leave a Reply