Amaranth Seeds Payasam: சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது நாம் மக்களிடம் அதிகமாய் கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். இதற்கு முன்பாக நமது முன்னோர்கள் சிறுதானியத்தை பற்றி நம்மிடம் எடுத்துரைத்திருந்தாலும் சமூக வலைதளங்களின் தாக்கம் தான் இப்பொழுது இளைஞர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவே, அம்மாக்களும் குழந்தைகளுக்கு முடிந்தவரை சிறுதானியத்தை கொடுப்பதை சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுதானியத்தின் சுவையை அறியாத குழந்தைகளுக்கு திடீரென்று கம்மங்கூழ் கேப்பை கூழ் என்ன காய்ச்சி குடித்தால் அவர்கள் குடிப்பது கடினம் தான்.
எனவேதான், சிறுதானியத்தை எப்படி எல்லாம் புதுமையாக குழந்தைகளுக்கு இட்லி, தோசை மற்றும் சத்து மாவு என கொடுக்கலாம் என்பதை நாம் அடிக்கடி பதிவாக பார்த்து வருகின்றோம். சிறுதானியங்களை போலவே மற்றொரு சத்துள்ள உணவை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.
குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை தரும் ஒரு அற்புதமான உணவு தான் ராஜகீரா என்று அழைக்கப்படும் தண்டுக் கீரை விதைகள். இதற்கு மற்றொரு பெயர் அமரந்த். ஆகவே ப்ரோட்டீன், நார் சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன.
Amaranth Seeds Payasam:
Amaranth Seeds Payasam:
இந்த சத்தான விதைகளை எப்படி குழந்தைகளுக்கு பாயாசமாக செய்து கொடுக்கலாம் என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இந்த விதைகளில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- இந்த விதைகளில் வைட்டமின் ஏ, மற்றும் பி காம்ப்ளக்ஸ் எனப்படும் சத்துக்கள் அதிகம். மேலும் புரோட்டின், இரும்பு சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம்.
- மாமிசங்களில் அடங்கியுள்ள புரோட்டின் சத்து போன்று தாவர புரோட்டின் இந்த விதைகளில் அதிகம். எனவே குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு இது உதவுகின்றது.
- குளூட்டீன் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த விதைகளை எடுத்துக் கொள்ளால், கோதுமைக்கு பதிலான சிறந்த மாற்று உணவாக அமையும்.
- இதில் நிறைந்துள்ள நார் சத்துக்கள் உணவினை செரிமானமாக செய்து மலச்சிக்கலை தடுக்கின்றது.
- இதில் ஆன்ட்டி அசிஸ்டன்ட்டுகள் அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது. குழந்தைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் தொற்றுகள் தாக்குவது குறையும்.
- கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை எலும்புகளின் வளமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதைகளை நிறைந்திருப்பதால் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றது.
- மேலும் மூளையை சிறப்பாக செயல்பட வைக்க கூடிய அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- கலோரிகள் குறைவான சத்தான உணவு என்பதால் இதனை சாப்பிடும் பொழுது குழந்தைகளின் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேருவதை தடுக்கும்.
Amaranth Seeds Payasam:
- தண்டுக்கீரை விதைகள்- ஒரு கப்
- பாதாம்-6
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
- பால்- ஒன்றரை கப்
- நெய்- 1-2
- நாட்டு சக்கரை- 3 டேபிள் ஸ்பூன்.
Amaranth Seeds Payasam:
செய்முறை
- விதைகளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். ரெடிமேட் ஆக வறுத்த விதைகளும் கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கினால் குக்கரில் வேக வைக்க தேவையில்லை.
- நாட்டு சக்கரை அளவு வெள்ள உபயோகித்தால் தண்ணீரில் காட்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
- பால் கொதித்ததும் விதைகளை அதனுள் போட்டு மிதமான கிளறிக் கொண்டே இருக்கவும். ஐந்து நிமிடங்களில் விதை கெட்டியாக வெந்துவிடும்.
- ஏலக்காய் தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- நெயில் வறுத்த பாதாம் பருப்பை சீவி இதனுடன் சேர்க்கவும். ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்.
- குழந்தைகளுக்கான சத்தான பாயாசம் ரெடி.
Amaranth Seeds Payasam:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Amaranth Seeds Payasam:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
பாயாசத்தின் ருசியை அதிகரிக்க வேறு பொருள்கள் சேர்க்கலாமா?
பாயாசத்தின் ருசியை மேலும் அதிகரிக்க நினைத்தால் நறுக்கிய வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை சேர்க்கலாம். மேலும் சுவையாக வேண்டுமென்று நினைத்தால் நீங்கள் உலர் திராட்சை, குங்குமப்பூ போன்றவற்றை சேர்க்கலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?
காற்று போகாத டப்பாவில் அடைத்து இரண்டு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
தாவரங்களிலிருந்து கிடைக்கும் பாலிற்கு மாற்றாக இருக்குமா?
தவறுகளில் இருந்து கிடைக்கக்கூடிய பாதாம் பால், தேங்காய் பால், ஓட்ஸ் பால் போன்றவற்றுக்கு மாற்றாக தண்டுக்கீரை பாயாசத்தை நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆரோக்கியமான அமர்ந்து பாயாசம்
Ingredients
- தண்டுக்கீரை விதைகள்- ஒரு கப்
- பாதாம்-6
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
- பால்- ஒன்றரை கப்
- நெய்- 1-2
- நாட்டு சக்கரை- 3 டேபிள் ஸ்பூன்
Leave a Reply