Apple-Cheese Puree for babies in Tamil : குழந்தைகளுக்கு நாம் திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் வழக்கமாக கொடுப்பது பழங்கள் மற்றும் காய்கறி மசியல்.இவை இரண்டும் இல்லாவிட்டால் பருப்பு சாதம் மற்றும் சத்துமாவு கொடுப்போம்.ஆனால் உங்கள் செல்லங்களுக்கு இவை எல்லாம் சாப்பிட்டு சிறிது நாட்களில் போரடித்து விடும் அல்லவா?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதோ அவர்களுக்கான டேஸ்டியான ஆப்பிள் பாலாடைக்கட்டி (சீஸ்) மசியல். குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து இந்த மசியலை கொடுக்க ஆரம்பிக்கலாம்.குழந்தைகளுக்கு சீஸ் வாங்கும் பொழுது ஹோம் மேட் சீஸ் வாங்குவது சிறந்தது.
ஆப்பிள் பாலாடைக்கட்டி மசியல்
- ஆப்பிள் – 1
- பாலாடைக்கட்டி -1/4 கப்
- சீரகத்தூள்- ¼ டீஸ்பூன்.
இதையும் படிங்க :குழந்தைகளுக்கான பூசணி அல்வா
Apple-Cheese Puree for babies in Tamil :
செய்முறை
1.ஆப்பிளை நன்கு கழுவி தோலை சீவவும்.
2.ஆப்பிளின் நடுவில் உள்ள விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3.ஆப்பிளை ஆவியில் அல்லது குக்கரில் வேக வைக்கவும்.
4.வேகவைத்த ஆப்பிளை மிக்சி ஜாரில் போடவும்.
5.உதிர்த்த பாலாடைக்கட்டியை உடன் சேர்க்கவும்.
6.சீரகத்தூளை சேர்க்கவும்.
7.மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
8.தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து கூழ் போன்று அரைக்கவும்.
9.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு சிறந்த இரவு உணவாக இந்த ஆப்பிள் பாலாடைக்கட்டி மசியல் அமைவதோடு குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.பாலடைக்கட்டியில் புரோட்டீன்கள்,வைட்டமின்- எ,வைட்டமின்-பி,கால்சியம்,இரும்புச்சத்துக்கள்,மெக்னீசியம்,பொட்டாசியம்,ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும்.
இதையும் படிங்க : ரவா டேட்ஸ் பால்ஸ்
பாலடைக்கட்டியுடன் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிளும் இணையும் பொழுது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ரெசிபியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply