Apple Dates Oats drink for babies: குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் நம் வீட்டில் பெரிய போராட்டமே நடந்து முடிந்துவிடும்.வழக்கமாக நாம் வீட்டில் சாப்பிடும் இட்லி தோசை போன்ற உணவுகள் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு போர் அடித்து விடும். அதே சமயம் காலை உணவினை நாம் தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் அன்று நாள் முழுவதும் குழந்தைகள் விளையாடுவதற்கான சக்தியை தருவது காலை உணவுதான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் அப்படி என்னதான் உணவு சமைத்துக் கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்கள் குழந்தைகளுக்கான ஹெல்தியான டேஸ்டியான ஆப்பிள் ஓட்ஸ் டேட்ஸ் ஸ்மூத்தி. இந்த சுவையான ஸ்மூத்தி கொடுத்துப் பாருங்கள் உங்கள் குழந்தைகள் காலை உணவினை கேட்டு வாங்கி உண்பார்கள்.
Apple Dates Oats Drink for Babies
- ஆப்பிள் -1
- ஓட்ஸ் -3 டே.ஸ்பூன்
- பால் (காய்ச்சி குளிரவைத்த பால்)- 2 கப்
- டேட்ஸ் பவுடர் – 2 டே.ஸ்பூன்
- லவங்கப்பட்டை தூள் -இம்மியளவு
Apple Dates Oats Drink for Babies
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முருங்கை கீரை சூப்
செய்முறை
1.ஆப்பிளை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.ஆப்பிள்,டேட்ஸ் பவுடர்,ஓட்ஸ் மற்றும் பால் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போடவும்.
3.ஸ்மூத்தி பதத்திற்கு வருமாறு நன்கு அரைக்கவும்.
4.லவங்கப்பட்டை தூளை லேசாக தூவவும்.
5.குளிராக அல்லது இதமாக பரிமாறவும்.
6.ஹெல்தியான ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூத்தி ரெடி.
இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்தது ஓட்ஸ்.இதில் மாமிசம் மற்றும் முட்டைக்கு நிகரான புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது. பேரீச்சையில் குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன.இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. ஆப்பிள் ஓட்ஸ் டேட்ஸ் ஸ்மூத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நீங்கள் ஸ்மூத்திக்கு மேலும் சுவையை கூட்ட நினைத்தால் நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply