வேகவைத்து மசித்த ஆப்பிள் அல்லது ஆப்பிள் கூழ்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்
- ஆப்பிள் – பாதி அளவு
செய்முறை:
- ஆப்பிளை நன்றாக கழுவி தோல் சீவி துண்டுகளாக்கி விதைகளை நீக்கி கொள்ளவும். ஆப்பிளை விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் பல்வேறு முறைகளில் செய்யலாம்… - ஆப்பிளை நீங்கள் ஸ்டீமர் கொண்டு ஆவியில் வேகவைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் இதில் உள்ள சத்துகள் வெளியேறாமல் இருக்கும்.
- நறுக்கிய ஆப்பிள்துண்டுகளை பாத்திரத்தில் வைத்து அதனை தண்ணீர் நிரப்பிய குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில்கள் வரை விடவும்(இது ஆப்பிள் வகையை பொறுத்து மாறுபடும்).
- ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் துண்டுகளை வைத்து அதை தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் வைத்து நேரடியாக வேக விடவும்.
இவ்வாறு நீங்கள் வேகவைத்த ஆப்பிளை மசித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ கொடுக்கலாம். - குழந்தைகள் எளிதாக சாப்பிடும் வகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரவும்.
- நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் இதனை வைத்து குழந்தைக்கு தரவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- ஆப்பிளை வேகவைத்தும், மசித்தும் அல்லது அப்படியே அரைத்தும் தரலாம்.
மசித்த ஆப்பிள் அல்லது ஆப்பிள் கூழ் மலச்சிக்கலை ஏற்படுத்தும். - ஆனால் ஆப்பிள் ஜூஸ் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்.
இத்துடன் பட்டைத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்.“ஆப்பிளில் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் உள்ளது”
முதன்முதலில் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது ஜீரண சக்தி என்பது குறைவாகவே இருக்கும்.அப்போது கொடுக்க ஏற்ற உணவு இது.குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது என்பதை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply