வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு கூழ்
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- உருளைக்கிழங்கு – ஒன்று
- தண்ணீர் – ஒரு கப்
- ஓமம் அல்லது சீரகப் பொடி – சிறிது
செய்முறை:
- உருளைக்கிழங்கு நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.
- இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வெட்டிய உருளைக்கிழங்கை சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 முதல் 3 விசில்கள் வரும் வரை வேகவிடவும்.
- நன்றாக வெந்த உருளைக்கிழங்கானது மிருதுவாக இருக்கும். இதனை கைகளால் மசிக்கலாம். அல்லது மிக்ஸியில் கூட அரைத்துக் கொள்ளலாம்.
- இத்துடன் ஓமம் அல்லது சீரகப்பொடியை சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
- இந்த கலவையுடன் தாய்ப்பாலை சேர்த்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.
- 8 மாதங்களுக்கு பிறகு இத்துடன் வெண்ணெய் சேர்த்தால் சுவை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்துப் போகும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
- உருளைக்கிழங்கை வாங்கும்போது எந்த வித கீறலோ, கறைகளோ இல்லாமல் வாங்குங்கள். முளைத்து வரும் கிழங்குகளையும் வாங்க வேண்டாம்.
- உருளைக்கிழங்கில் அதிகமான கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்றது. நடுத்தர சைஸில் உள்ள உருளைக்கிழங்கில் 26 கிராம் கார்போஹைட்ரேட் சத்து உள்ளது.
- உருளைக்கிழங்கு சில குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். எனவே இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.“உருளைக்கிழங்கு சில குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். எனவே குழந்தைக்கு இதனை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்”
கூடுதலாக ரெசிபிகள் தேவையா? கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
ரெசிபிகளை காண இங்கே சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply