Apple puree: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல தேவையில்லை என்பது புகழ்பெற்ற ஆங்கில பழமொழி. ஏனென்றால் ஆப்பிளானது அத்தனை சத்துக்களை தன்னகத்தே அடக்கியது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் ஆப்பிளில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும் இதில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தருவதற்கான கலோரிகளும் அதிகம்.
குழந்தைகளுக்கு இந்த ஆப்பிளினை டேஸ்டியாக எப்படி செய்து தருவது என்பதை நாம் பார்க்கலாம். மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும் நம் குழந்தைகளுக்கு எளிதாக இந்த ஆப்பிள் பட்டரினை செய்து கொடுக்கலாம்.
Apple puree
குழந்தைகளுக்கான நோ சுகர் ஆப்பிள் பட்டர்
- ஆப்பிள்- 4
- பட்டை தூள் -1 டீ.ஸ்பூன்
- ஜாதிக்காய் தூள்- இம்மியளவு
Apple puree
செய்முறை
1.ஆப்பிளை நன்றாகக் கழுவி தோலை சீவி நடுவில் உள்ள விதை பகுதியை நீக்கவும்.
2.பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.கடாயினை சூடாக்கவும்.
4.நறுக்கிய ஆப்பிள்,பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்க்கவும்.
5.சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
6. மிதமான தீயில் கடாயை மூடி 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
7.மூடியைத் திறந்து மிதமான தீயில் மீண்டும் 20 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
8.வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
9.மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
10.குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆப்பிள் பட்டர் ரெடி.
எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பட்டரினை நாம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இதனை அப்படியே சாப்பிட கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் கோதுமை பிரட்டில் ஜாமிற்கு பதிலாக தடவி கொடுக்கலாம்.மேலும் பான்கேக்,சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை
1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான நோ சுகர் ஆப்பிள் பட்டர்
Ingredients
- 4 ஆப்பிள்
- 1 டீ.ஸ்பூன் பட்டை தூள்
- இம்மியளவு ஜாதிக்காய்
Notes
- ஆப்பிளை நன்றாகக் கழுவி தோலை சீவி நடுவில் உள்ள விதை பகுதியை நீக்கவும்.
- பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- கடாயினை சூடாக்கவும்.
- நறுக்கிய ஆப்பிள்,பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்க்கவும்
- சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்,
- மிதமான தீயில் கடாயை மூடி 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
- மூடியைத் திறந்து மிதமான தீயில் மீண்டும் 20 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
- வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆப்பிள் பட்டர் ரெடி.
Leave a Reply