Athi fruit benefits: ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். பிரட், சப்பாத்தியில் ஆரம்பித்து ஏன் இட்லி,தோசைக்கும் கூட ஜாம் வைத்து சாப்பிடும் குழந்தைகள் நம்மில் ஏராளம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் செயற்கை நிறமூட்டிகள் கலந்துள்ள ஜாமினை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் என்ற நெருடல் நம் மனதின் உள்ளே இருந்தவாறு இருக்கும். இனிமேல் அவ்வாறு கவலைப்பட தேவையில்லை.
குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு சூப்பரான ஜாம் ரெசிபி தான் இந்த அத்தி பழம் ஜாம். அத்திப்பழம் உடல் நலத்திற்கு நன்மை தரும் என்பது நாம் தற்பொழுது அனைவரும் அறிந்து வரும் விஷயம் தான்.
அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தாண்டி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வதில் அத்திப்பழத்தின் பங்கு அளப்பரியது.
ஆனால் குழந்தைகளுக்கு அத்திப்பழத்தை அப்படியே சாப்பிட கொடுக்கும் போது பெரும்பாலான குழந்தைகள் அதை விரும்புவதில்லை. அதற்கு பதிலாக இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்.குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பார்கள்.
இந்த ஜாமினை செய்ய பிரஷர் குக்கர் மட்டும் இருந்தால் போதும். சீனி சேர்க்காமல் வெல்லத்தூள் சேர்த்துள்ளதால் இதிலுள்ள இனிப்பு சுவையும் குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது .எனவே குழந்தைகள் எத்தனை தடவை விரும்பி சாப்பிட்டாலும் நாம் பயப்படத் தேவையில்லை.
அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- அத்திப்பழத்தில் புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
- அத்திப்பழத்தை சாப்பிடும் போது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
- மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அத்திப்பழத்தினை தினமும் சாப்பிட மலச்சிக்கல் அண்டாது.
- அத்தி பழமானது வாய்ப்புண்ணினை குணமாக உள்ளது.
- உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க கூடியது.
- அத்திப்பழம் வெண்குஷ்டம் நோயை குணப்படுத்த உதவுகின்றது.
Athi fruit benefits
Athi fruit benefits
தேவையானவை
- உலர் அத்திப்பழம் -10
- வெல்லத் தூள் -கால் கப்
- தண்ணீர் -அரை கப்
- எலுமிச்சைச்சாறு -கால் டீஸ்பூன்
Athi fruit benefits
செய்முறை
1.உலர் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.அத்திப்பழம் மற்றும் வெல்லத்தூளினை குக்கரில் எடுத்து கொள்ளவும்.
3.அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4.குக்கரில் ஒரு விசில் வருமளவிற்கு வேக வைக்கவும்.
5.சில நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து மிதமான தீயில் வைத்து ஜாம் பதத்திற்கு வருமளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
6.பின்பு அத்திப்பழங்களை நன்றாக மசிக்கவும்.
7.சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இந்த ஜாமினை குழந்தைகளுக்கு கோதுமை பிரட், பேன் கேக் மற்றும் சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்ந்து கொடுக்கலாம். இதனை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான அத்திப்பழம் ஜாம்
Ingredients
- 10 உலர் அத்திப்பழம்
- கால்கப் வெல்லத் தூள்
- தண்ணீர்
- கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு
Notes
- உலர் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அத்திப்பழம் மற்றும் வெல்லத்தூளினை குக்கரில் எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- குக்கரில் ஒரு விசில் வருமளவிற்கு வேக வைக்கவும்.
- சில நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து மிதமான தீயில் வைத்து ஜாம் பதத்திற்கு வருமளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பின்பு அத்திப்பழங்களை நன்றாக மசிக்கவும்.
- சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
Leave a Reply