ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து அவர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பால் உதவுகின்றது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள வைட்டமின் டி மற்றும் அமினோ அமிலங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான ஒன்றாகும்.
ஆனால் பாலை வெறுமனே கொடுக்கும் பொழுது குழந்தைகள் பொதுவாக தவிர்ப்பதுண்டு. அதனால்தான் அம்மாக்கள் தற்பொழுது மார்க்கெட்டிகளில் வலம் வரும் விதவிதமான ஹெல்த் மிக்ஸுகளை சுவைக்காக பாலில் கலந்து கொடுக்கின்றனர்.
ஆனால் உண்மையில் அவை சர்க்கரையை மட்டுமே அதிகமாக கொண்டுள்ளதால் அதை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். அதற்கு பதிலாக முளைகட்டிய சத்து மாவு பவுடர், இயற்கையாக தானியம் மற்றும் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்ட ஹெல்த் மிக்ஸ் போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட மேலான ஒரு ரெசிபி தான் நான் இப்பொழுது கூறப்போகும் அத்திப்பழம் பால். பொதுவாகவே உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் ஒன்று எடுத்துக் கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எல்லா வகையிலும் நன்மை அளிக்கும்.
ஆனால் அதனை தனியாக சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் இப்படி பாலில் கலந்து சுவையாக கொடுத்துப் பாருங்கள். குழந்தைகளுக்கு பால் கொடுத்த திருப்தியும் இருக்கும் மற்றும் அத்திப்பழம் கொடுத்த திருப்தியும் நமக்கு இருக்கும்.
Athipalam Milkshake in Tamil:
Athipalam Milkshake in Tamil :
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்:
- அத்திப்பழம் மற்றும் பாலாக இரண்டிலும் கால்சியம் சத்து அதிகம் என்பதால் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமாகும்.
- அத்திப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
- அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- அத்திப்பழத்தில் இயற்கையாகவே உள்ள இனிப்புச் சத்தானது குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை தரவல்லது எனவே குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாக இந்த பாலினை ஒரு கிளாஸ் கொடுக்கலாம்.
- அத்திப்பழத்தில் இரும்பு சத்துக்கள் அதிகம் என்பதால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வல்லது.
- அத்திப்பழத்தில் மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் என்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரித்து குழந்தைகள் நினைவாற்றலை அதிகரிக்க வல்லது.
- இயற்கையாகவே அத்திப்பழத்தில் இனிப்பு சுவை அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு இனிப்பு கலந்த மற்ற பானங்களை கொடுப்பதை காட்டிலும் இதில் உள்ள இயற்கையான இனிப்பு குழந்தைகள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது.
Athipalam Milkshake in Tamil :
- அத்தி பழங்கள்-15 (இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்)
- பால் – 3 கப்
- காய்ந்த ரோஜா இலைகள் (மேலே தூவ)
செய்முறை
- அத்தி பழங்களை நன்றாக கழுவி இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பால் பாத்திரத்தில் பாலுடன், அத்திப்பழத்தையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
- 10 முதல் 15 நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து அத்திப்பழத்தின் சாறு பாலில் நன்றாக இறங்கும் வரை காத்திருக்கவும்.
- பாலை வடிகட்டி அத்திப்பழத்தை தனியாக எடுத்து பாலை மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்கவும். அந்த அத்திப்பழத்தை நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
- மேலே காய்ந்த ரோஜா இதழ்களை தூவி குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
அத்திப்பழத்தின் இனிப்பு சுவை கலந்து கெட்டியாக நன்கு சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி இந்த பாலினை குடிப்பார்கள். குழந்தைகள் காலை பள்ளிக்கு புறப்படும் முன்பு அல்லது பள்ளி முடிந்து வந்த உடனே சத்தான பானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த அத்திபழபாலினை கொடுக்கலாம். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் நாமும் குடித்துக் கொண்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இந்த அத்திப்பழபாலினை எவ்வாறு கொடுப்பது?
பால் ஒவ்வொன்ற உங்களுக்கு தேங்காய் பால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸ் பால் போன்றவற்றில் கலந்து கொடுக்கலாம்.
இந்த பாலினை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். அத்திப்பழபாலில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் தினமும் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மலம் தண்ணியாக போக வாய்ப்பு உண்டு.
இதில் சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கலாமா?
அத்திப்பழத்தின் இனிப்பு சுவையை அதிகமாக இருப்பதால் வேறு இனிப்பு வகைகள் சேர்க்க தேவையில்லை.
இந்த பாலில் வேறு ஏதேனும் சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தால் ஏலக்காய் தூள், பட்டை தூள் போன்றவற்றை சிறிதளவு சேர்த்து கொடுக்கலாம்.
Leave a Reply