Baby Corn Bajji in Tamil: குழந்தைகள் பள்ளி முடிந்து எப்பொழுது வீட்டிற்கு வருவார்கள்? அவர்களுக்கு சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம்? என்று தினமும் யோசிப்பது நமக்கு வழக்கமான ஒன்று.ஏனென்றால் இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ் என்ன அம்மா? என்று ஆவலாக வீட்டிற்குள் நுழையும் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து செய்து தருவதே நமக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் டேஸ்டாக இல்லையென்றால் குழந்தைகள் அதை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள்.அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்.குழந்தைகள் விரும்பும் ஹெல்த்தியான வித்தியாசமான ஸ்னாக்ஸ்தான் பேபிகார்ன் பஜ்ஜி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

Baby Corn Bajji in Tamil
- பேபி கார்ன் – 10
- கடலை மாவு – ¼ கப்
- அரிசி மாவு – 2 டே.ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 டீ.ஸ்பூன்
- சாட் மசாலா – ½ டீ.ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீ.ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு

இதையும் படிங்க: ஹோம்மேட் செர்லாக் /ஹெல்த் மிக்ஸ் பவுடர்/குழந்தைகளுக்கான சத்துமாவு பவுடர்.
Baby Corn Bajji in Tamil
செய்முறை
1.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் பேபி கார்னை போட்டு நன்றாக வேக வைக்கவும்.


2.ஒரு பவுலில் கடலை மாவு,அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகுத்தூள் ,உப்பு மற்றும் சாட் மசாலா ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

3.கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.கலவை நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்ளவும்.

4. வேகவைத்த பேபி கார்னை மாவில் நன்றாக முக்கி எடுக்கவும்.

5.பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
6.கலவையில் முக்கிய பேபி கார்னை எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

7.பொரித்து எடுத்த பேபி கார்னை எண்ணெய் உறிஞ்சுமாறு டிஸ்யூ பேப்பரில் போட்டு எடுக்கவும்.


8.சூடாக பரிமாறவும்.

இதையும் படிங்க: சுகப்பிரசவத்தை எளிதாக்கும் வழிகள்.

- பேபி கார்னில் வைட்டமின் பி அதிகம் உள்ளது.உடலின் சீரான செரிமானத்திற்கு வைட்டமின் -பி மிகவும் அவசியம்.
- இதில் உள்ள ஃபோலேட் மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குகின்றது.
- பேபி கார்னில் மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அபரிமிதமாக உள்ளன.இவை எலும்புகளுக்கு பலமளிக்கின்றது.
- பேபி கார்னில் உள்ள கரோட்டினாயிட்ஸ், வைட்டமின் சி மற்றும் பயோ ஃப்ளேவனாயிட்ஸ் போன்றவை ரத்த ஓட்டத்தை சீராக வைக்கின்றது.
இன்றே கடைக்கு போய் பேபி கார்ன் வாங்கி நாளை பஜ்ஜி செய்யவேண்டுமென யோசிக்கின்றீர்கள் அப்படித்தானே?

Leave a Reply