Banana Chia Pudding for Babies in Tamil:குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் காலை உணவு மிகவும் சத்தானதாக இருக்க வேண்டும்.அன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் ஓடி,ஆடி விளையாடுவதற்கான சக்தியை அளிப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கின்றது.எனவேதான் காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டுமென்றும் அதை தவறாமல் உண்ண வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றினை தவிர சத்தான காலை உணவு என்ன தரலாம் என்று நீங்கள் யோசித்தால் இந்த பனானா சியா புட்டிங் நல்ல தேர்வாக இருக்கும்.வாழைப்பழம் நாம் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து வழக்கமாக கொடுக்கும் பழங்களுள் ஒன்று.அதனுடன் சியா விதைகள் மற்றும் தயிர் சேரும் பொழுது அதன் முழுமையான காலை உணவாக அமையும்.இதை 8 மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.சரி வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
பனானா சியா புட்டிங்
- வாழைப்பழம் – 2
- தயிர் – 2 கப்
- சியா விதைகள் – 6 டே.ஸ்பூன்
Banana Chia Pudding for Babies in Tamil:
செய்முறை
1.சியா விதைகளை தயிரில் அரை மணிநேரம் உப்பி வரும்வரை ஊற வைக்கவும்.
2.வாழைப்பழத்தினை நன்கு மசிக்கவும்.
3.ஒரு பவுலில் வாழைப்பழம் மற்றும் ஊற வைத்த சியா விதைகளை ஒன்றாக கலக்கவும்.
4.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
நவீன காலத்தின் சூப்பர் புட் என்று அழைக்கப்படும் சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்,தாதுக்கள்,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின்களை உள்ளடக்கியது.மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமடையும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply