Barley Vegetable Khichdi in Tamil: குழந்தைகளுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் ஒரு தானியம் தான் பார்லி.ஆனால் இதை நாம் பெரியவர்கள் சாப்பிடும் தானியம் என்றே நினைத்திருப்போம்.குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை.குழந்தைகளுக்கு என்னென்ன ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன என்று தெரிந்து கொண்டால் வாரம் ஒரு முறை நீங்கள் கொடுக்க தவறமாட்டீர்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பார்லியுடன் கேரட்,உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பு போன்றவை சேர்த்து ஆரோக்கியமான பார்லி கிச்சடி குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என நாம் காணலாம்.
Barley Vegetable Khichdi in Tamil:
தேவையானவை
- ஆர்கானிக் பார்லி பவுடர் – ¼ கப்
- பாசிப்பருப்பு (ஊறவைத்தது)- 2 டே .ஸ்பூன்
- நறுக்கிய கேரட்-1 டே.ஸ்பூன்
- நறுக்கிய உருளைக்கிழங்கு – 1 டே .ஸ்பூன்
- பச்சை பட்டாணி – 1 டே.ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 டீ.ஸ்பூன்
- பெருங்காயம் – இம்மியளவு
- நெய்- 1 டீ.ஸ்பூன்
இதையும் படிங்க: கோதுமை ஆப்பிள் அல்வா
பார்லி வெஜிடபிள் கிச்சடி
செய்முறை
1.குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
2.சீரகத்தூள் சேர்க்கவும்.
3.நறுக்கி வைத்த கேரட்,உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
4.பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
5.பார்லி சேர்த்து கிளறவும்.
6.மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
7.1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
8.3-4 விசில் வரும்வரை காத்திருக்கவும்.
9.நன்றாக மசிக்கவும்.
10.சுவையான கிச்சடி ரெடி.
நாம் குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் உணவுடன் வாரம் ஒருமுறை இந்த வெஜிடபிள் கிச்சடியினை கொடுக்கலாம்.இதை குழந்தைகளுக்கு கொடுப்பதினால் உள்ள நன்மைகளை காணலாம்:
நார்சத்து அதிகமுள்ளதால் எளிதில் செரிமான ஆகக்கூடியது.
- பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன.
- பார்லி தானியத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன.
- இதில் நிறைந்துள்ள பீட்டா குளுக்கான் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் பெருகச் செய்து, நோய்கள் சுலபத்தில் பாதிக்காமல் தடுக்கிறது.
- பார்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கின்றது.
என்ன தோழிகளே நீங்களும் பார்லி கஞ்சியினை இனி குழந்தைகளின் உணவினில் தவறாமல் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.உண்மைதானே!
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான சத்துமாவு பர்பி
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply