வேகவைத்து மசித்த பீட்ரூட் உருளைக்கிழங்கு அல்லது பீட்ரூட் உருளைக்கிழங்கு கூழ்
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் – தலா ஒன்று
செய்முறை:
உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்டை பாதியாக வெட்டிக் கொள்ளவும் .
பின் இதன் தோலை உரித்து தண்ணீரில் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.
ஒரு சிறிய பாத்திரத்தில் இதனை வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பி அதனுள் பாத்திரத்தை வைத்து வேக விடவும்.
சில வகை பீட்ரூட் நன்றாக வேகாது என்பதால் அதனை மிக்ஸியில் அடித்துக் கொள்ளலாம்.
பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் எளிதாக சாப்பிட வேண்டுமானால் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்க்கலாம்.
குழந்தையின் 8 வது மாதத்தில் இத்துடன் வெண்ணெய் சேர்த்துக் கொடுத்தால் ருசியாக இருக்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- கடைகளில் பீட்ரூட் வாங்கும்போது ப்ரெஷ்ஷாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டின் மேல்பகுதி அழுக்காக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது கெட்டியாக இருக்க வேண்டும்.
- இதை சாப்பிட்ட குழந்தைகள் சிவப்பு நிறத்திலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
செரிமானம் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பீட்ரூட் நல்ல தீர்வாக இருக்கும். - குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகளை போக்கும் எதிர்ப்பு சக்தியை பீட்ரூட் கொடுக்கிறது.
- பீட்ரூட்டில் கால்சியம்,பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன.
“செரிமானம் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பீட்ரூட் நல்ல தீர்வாக இருக்கும்”
“குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகளை போக்கும் எதிர்ப்பு சக்தியை பீட்ரூட் கொடுக்கிறது”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply