Biotin rich foods in Tamil :இதுவரை நாம் பார்த்த ரெசிபிகள் அனைத்தும் குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும் இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபியானது சற்றே வித்யாசமானது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆமாம் இந்த ரெசிபி பிரத்யேகமாக தாய்மார்களுக்கானது. இன்றிருக்கும் பெரும்பால தாய்மார்களின் ஒரே பிரச்சனை முடி கொட்டுவது என்பதுதான். அதிலும் பிரசவ காலத்திற்குப் பின்பு முடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்படும் தாய்மார்கள் ஏராளம்.
அதற்கான ஒரு ஆரோக்கியமான ரெசிபியை தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். அப்படி என்ன இந்த ரெசிபியின் சிறப்பம்சம் என்று கேட்கின்றீர்களா? இந்த ரெசிபி முழுவதும் கூந்தல் வளர்ப்புக்கு காரணமான பயோட்டின் எனப்படும் சத்துக்கள் நிறைந்த ரெசிபி.
பயோட்டின் என்பது வைட்டமின் பி குடும்பத்தில் உள்ள ஒரு வகையான உயிர் சத்து ஆகும்.இது பெரும்பாலும் செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. உடலில் பயோட்டின் சத்தானது குடலில் இருக்கும் பாக்டீரியாக்களால் உருவாகின்றது.
இந்த பயோடின் சத்து குறையும் பொழுது முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகின்றது.எனவே பயோட்டின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது முடி உதிர்வினை நாம் தடுக்கலாம்.
இப்பொழுது நாம் பார்க்க போகின்ற ரெசிபியும் முழுவதும் பயோடின் நிறைந்த பொருட்களால் தயாரிக்கப்படும் ஸ்மூத்தி ஆகும்.
பயோட்டின் எனப்படும் சத்தானது பல உணவுகளில் காணப்பட்டாலும் பொதுவாக முட்டையின் மஞ்சள் கரு, மாமிசம் ,மீன்,நட்ஸ்,அவகோடா மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றது.
Biotin rich foods in Tamil
பயோட்டின் குறித்த சில தகவல்கள் :
- இது உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகின்ற ஒன்று மேலும் இது உடலில் முடி மற்றும் நகத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பயோட்டின் என்னும் சத்தானது உடலில் செல் வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், மெட்டபாலிசம் மற்றும் அமினோ அமிலங்களின் சிதைவு போன்ற பல வேலைகளை செய்கின்றது.
- மேலும் மூளைகளின் செயல்பாட, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் ரத்தக்குழாய்களின் செயல்பாடு ஆகியவற்றிற்கும் பயோடின் சத்து உறுதுணையாக இருக்கின்றது.
- எனவே பயோட்டின் அதிகம் இருக்கும் உணவுப்பொருளை எடுத்துக் கொள்வது முழு உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Biotin rich foods in Tamil
செய்முறை
- எள்- 1 ஸ்பூன்
- ஆளி விதைகள்- 1 ஸ்பூன்
- சூரிய காந்தி விதைகள்- 1 ஸ்பூன்
- பிஸ்தா- 1 ஸ்பூன்
- பாதாம்- 5 முதல் 6
- அத்திப்பழம்- 2
- ஆப்பிள் -1/2
- பீட்ரூட்- ½
Biotin rich foods in Tamil
செய்முறை
1.எள், ஆளி விதைகள் மற்றும் அத்திபழம் ஆகியவற்றினை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் ஊற வைத்த விதைகளை ஒன்றாக சேர்க்கவும்.
3.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதன் மீது பிஸ்தாவை தூவி பரிமாறலாம்.
4.இப்போது ஆரோக்கியமான கூந்தல் வளர்ப்பிற்கு துணை புரியும் பயோட்டின் ஷேக் ரெடி.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பயோடினை எடுத்துக் கொண்டால் முடி அதிகமாக வளருமா?
கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பயோடின் முக்கிய பங்கு வகிக்கின்றது. வைட்டமின் பி எனப்படும் உயிர் சத்துக்களின் வகையை சேர்ந்த இந்த பயோட்டின் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கூந்தல் உதிர்வதையும் தடுக்கின்றது.
இயற்கையாக எந்த உணவு பொருள்களில் பயோட்டின் அதிகமாக இருக்கின்றது?
பயோடின் பொதுவாக முட்டையின் மஞ்சள் கரு,நட்ஸ், மாமிசம், மீன் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் அதிகமாக கிடைக்கின்றது.
பயோட்டின் குறைபாடு உள்ளதை எவ்வாறு அறிவது ?
பயோடின் குறைபாடு உண்டா என்பதை மருத்துவரை அணுகிய பின்பே நாம் உறுதியாக சொல்ல முடியும் என்றாலும் பயோட்டின் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
கூந்தல் வளர்ப்பினை அதிகரிக்கும் பயோட்டின் ஸ்மூத்தி
Ingredients
- · எள்-1 ஸ்பூன்
- · ஆளிவிதைகள்- 1 ஸ்பூன்
- · சூரியகாந்தி விதைகள்- 1ஸ்பூன்
- · பிஸ்தா-1 ஸ்பூன்
- · பாதாம்-5 முதல் 6
- · அத்திப்பழம்- 2
- · ஆப்பிள்-1/2
- · பீட்ரூட்-½
Notes
- எள், ஆளி விதைகள் மற்றும் அத்திபழம் ஆகியவற்றினை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் ஊற வைத்த விதைகளை ஒன்றாக சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதன் மீது பிஸ்தாவை தூவி பரிமாறலாம்.
- இப்போது ஆரோக்கியமான கூந்தல் வளர்ப்பிற்கு துணை புரியும் பயோட்டின் ஷேக் ரெடி.
Leave a Reply