Brinjal Fry Recipe: கத்தரிக்காய் என்றாலே வெள்ளை கலரில் பச்சை நிற காம்பில் இருப்பதை சிறுவயதில் இருந்தே அடையாளம் கண்டிருப்போம். ஆனால் தற்பொழுது வகை வகையான கத்திரிக்காய் வகைகள் வலம் வருகின்றன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதில் ஒன்றுதான் ஊதா நிறத்தில் இருக்கும் எக் பிளாண்ட் என அழைக்கப்படும் கத்தரிக்காய். பொதுவாக ஆசியா கண்டத்திலேயே இந்த கத்திரிக்காய் வகைகள் அதிகமாக விளைச்சல் ஆகின்றன. இந்த கத்திரிக்காய் வைத்து குழந்தைகளுக்கு எப்படி ஆரோக்கியமான கத்திரிக்காய் ஃப்ரை செய்து தரலாம் என்று பார்க்கலாம்.
கத்திரிக்காய் என்றாலே பொதுவாக விட்டமின்கள் அதிகம் உள்ள காய்கறி என்று மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பரிந்துரைக்கின்றனர்.
Brinjal Fry Recipe
ஆனால் வீட்டில் நம் குழந்தைகள் கத்திரிக்காயினை அவ்வளவாக விரும்பி உண்ண மாட்டார்கள். அதற்காக தான் குழந்தைகளை விரும்பி உண்ண வைப்பதற்காக இந்த கத்திரிக்காய் பிரை ரெசிபியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
கத்தரிக்காயை பொதுவாக நம் சார்பாக போடுவோம் அப்படி இல்லை என்றால் எண்ணெயில் வதக்கி பொறியியலாக செய்வோம், சிலர் எண்ணெய் கத்தரிக்காய் செய்வது உண்டு. ஆனால் அவற்றை சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுவர்.
குழந்தைகளுக்கான 3 வகையான சுரைக்காய் ரெசிபிகள்(Sorakkai Recipes)
Brinjal Fry Recipe:
இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் கத்தரிக்காயில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- கத்தரிக்காயில் ஆன்டி-ஆக்ஸிகள் இருப்பதால் செல்களின் வளர்ச்சி மாற்றங்களை தடுத்து சருமத்தை பளபளப்பாக வைக்கின்றது.
- நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வல்லது.
- இதில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் செரிமானத்திற்கு உதவி குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது.
- உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவை அதிகரிக்க வல்லது.
- கால்சியம் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பலம் அளிக்கின்றது.
- மூளைக்கு பலம் அளித்து குழந்தைகளின் ஞாபகம் சக்தியை அதிகரிக்க வல்லது.
- இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்துகள் குறைவு என்பதால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான சத்தான சிற்றுண்டியாக இது இருக்கும்
- இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இதயத்திற்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றது.
Brinjal Fry Recipe
- கத்திரிக்காய்-1
- கடலை மாவு- அரை கப்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
Brinjal Fry Recipe
செய்முறை
- கத்தரிக்காயினை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- மேலே லேசாக உப்புத்தூவி அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
- ஒரு பவுலில் கடலை மாவு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து செய்யவும்,
- வெட்டி வைத்த கத்தரிக்காயை அதற்குள் போட்டு மசாலாவில் அங்கு பெரட்டி எடுக்கவும்.
- தோசை கல்லை காய வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- கத்தரிக்காயினை அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
காரம் வேண்டும் என்றால் மேலும் சேர்த்துக் கொள்ளலாமா?
குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்றால் மேலே கொடுக்கப்பட்ட காரம் போதுமானது. சிறுவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் கரம்மசாலா, மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த ரெசிபியினை மேலும் சத்தாக எப்படி செய்து கொடுப்பது?
குழந்தைகளுக்கு மேலும் சத்தா கொடுக்க நினைத்தால் கீரையை பொடிப்பொடியாக நறுக்கி மசாலாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
கத்தரிக்காயினை பொறிப்பதற்கு பதிலாக மைக்ரோ ஓவனில் பேக்கிங் செய்யலாமா?
தாராளமாக செய்து கொள்ளலாம். ஓவனை 180 டிகிரி செல்சியஸ் இருக்கு ப்ரீஹீட் செய்து, பேக்கிங் ட்ரேயில் வைத்து 20-25 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வைத்து எடுக்கவும்.
கத்தரிக்காய் ரோஸ்ட்
Ingredients
- கத்திரிக்காய்-1
- கடலை மாவு- அரை கப்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
Notes
- கத்தரிக்காயினை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- மேலே லேசாக உப்புத்தூவி அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
- ஒரு பவுலில் கடலை மாவு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து செய்யவும்,
- வெட்டி வைத்த கத்தரிக்காயை அதற்குள் போட்டு மசாலாவில் அங்கு பெரட்டி எடுக்கவும்.
- தோசை கல்லை காய வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- கத்தரிக்காயினை அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
Leave a Reply