Broccoli Butter Masiyal for babies: ப்ரோக்கோலி என்பது நம்மில் பலரும் கேள்விப்படாத காய்கறி வகை.பார்ப்பதற்கு காளிஃபிளவரின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஆனால் பசுமை நிறத்துடன் இருக்கும்.ப்ரோக்கோலி எனப்படும் இந்த காய் எண்ணிலடங்கா சத்துக்களை பெற்றிருப்பதால் குழந்தைகளுக்கு இதை அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது.இதில் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே,ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளது.இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது .இதை பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் ப்ரோக்கோலி பட்டர் மசியல் சுவையாக இருப்பதால் 8 மாத குழந்தையிலிருந்து நீங்கள் கொடுத்து பழக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதையும் படிங்க: டயபர் அரிப்பிற்கான எளிமையான 10 வீட்டு வைத்தியம்
Broccoli Butter Masiyal for babies:
- ப்ரோக்கோலி – 10 இதழ்கள்
- பட்டர்- 1 டே.ஸ்பூன்
- மிளகுத்தூள் – இம்மியளவு
Broccoli Butter Masiyal:
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
2.ப்ரோக்கோலியை ஒரு பவுலில் எடுத்து தண்ணீரில் வைக்கவும்.
3.பதினைந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
4.பானை அடுப்பில் வைக்கவும்.பான் சூடானதும் பட்டரை போடவும்.
5.வேகவைத்த ப்ரோக்கோலியை சேர்க்கவும்.
6.மிளகுத்தூள் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
இதையும் படிங்க: பேபி கார்ன் பஜ்ஜி
7.ஆறியதும் மிக்சி ஜாரில் போடவும்.
8.தேவையானளவு தண்ணீர் சேர்த்து நன்கு கூழாக அரைக்கவும்.
9.ப்ரோக்கோலி மசியல் ரெடி.
குழந்தைகளுக்கு அடிப்படை உணவுகள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியவுடன் ப்ரோக்கோலி மசியலை அறிமுகப்படுத்தலாம்.ப்ரோக்கோலி சில குழந்தைகளுக்கு வாயு தொல்லையை எப்படித்தும் என்பதால் குழந்தைகளின் உடல் நிலையை கண்காணிக்கவும்.எந்த தொந்தரவும் இல்லையென்றால் இந்த ஆரோக்கியமான ப்ரோக்கோலி மசியலை வாரம் ஒருமுறை கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply