Broccoli Fried Rice: ப்ரோக்கோலி ஆரோக்கியமான காய்கறி என்று தற்பொழுது அம்மாக்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதன் சுவையின் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் ப்ரோக்கோலியை விரும்ப மாட்டார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் நாம் அப்படியே விட்டுவிட முடியாது தானே? ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளை குழந்தைகள் சாப்பிடவில்லை என்றால் அவர்களுக்கு ஏற்றார் போல் அதை எப்படி செய்து கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும் என்று யோசிப்பதே புத்திசாலித்தனம்.
Broccoli Fried Rice
அதற்கான ரெசிபி தான் இந்த ப்ரோக்கோலி சாதம். நாம் ப்ரோக்கோலி பொறியலாக செய்து கொடுப்பதை விட இப்படி சாதத்துடன் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் சா0ப்பிட்டது போன்ற உணர்வுடன் ப்ரோக்கோலியை சாப்பிட்டு விடுவார்கள்.
இதில் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் ஆகியவை அடங்கியுள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த சாதம் மிகவும் இன்றியமையாதது. இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் பிரக்கோலியில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்.

- வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- ப்ரோக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.
- மேலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் செல்கள் சிதைவடையாமல் தடுத்து குழந்தைகளின் ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- கால்சியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு பலத்தை அளிக்கின்றது.
- உணவுகளில் உள்ள இரும்புச்சத்தினை கிரகித்துக் கொள்ளும் தன்மை அதிகரிக்கின்றது.
Broccoli Fried Rice:
- வேக வைத்த சாதம்- 1 கப்
- ப்ரோக்கோலி இதழ்கள்(பொடியாக நறுக்கியது)- 1/2 கப்
- நறுக்கிய வெங்காயம்- 2 டே.ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு-1
- மஞ்சள் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய்- 1 டீ.ஸ்பூன்
Broccoli Fried Rice:
செய்முறை
- ப்ரோக்கோலியின் இதழ்களை காலிஃப்ளவரை பிரிப்பது போன்று தனித்தனியாக பிரித்து சுடு தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு போட்டு வைக்கவும். பின்பு பொடிப்பொடியாக நறுக்கவும்.
- கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கி வைத்த ப்ரோக்கோலியை அதில் போட்டு மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்திருக்கவும்.
- ஏற்கனவே வேக வைத்த சாதத்தை அதில் போட்டு நன்றாக கிளறவும்.
- அடுப்பினை அணைத்தபின் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.
குழந்தைகளின் உணவில் வாரம் ஒரு முறையாவது ப்ரோக்கோலி சேர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகவும் உதவும். இதில் உள்ள வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு தேவையான சத்துக்களை தருகின்றது மேலும் இதில் நார் சத்துக்கள் உள்ளதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்கின்றது.
எனவே கீரை எவ்வளவு உடலில் நன்மை சேர்க்குமோ அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஒரு நல்ல காய்கறி ஆகும்.
சாப்பிடுவதற்கு ப்ரைட் ரைஸ் போன்ற சுவையில் உள்ளதால் குழந்தைகள் இதனை ஒதுக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Broccoli Fried Rice:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ப்ரோக்கோலி சாதத்தை எத்தனை வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஒரு வயது முடிவடைந்த உடன் இந்த ப்ரோக்கோலி சாதத்தை கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால் ப்ரோக்கோலி நன்கு மசித்து குழந்தைகளுக்கு ஊட்டி விட வேண்டும்.
எத்தனை முறை குழந்தைகளுக்கு ப்ரோக்கோலி கொடுக்கலாம்?
வாரத்திற்கு 1-2 முறை ப்ரோக்கோலி கொடுப்பது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
இதனை குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாமா?
குழந்தைகளுக்கு விதவிதமான லன்ச் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இதில் லஞ்ச் பாக்ஸுக்கு தாராளமாக கொடுத்து அனுப்பலாம்.
வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான கேரட் பீன்ஸ் மற்றும் பச்சைப்பட்டாணி போன்றவற்றையும் இந்த சாதத்துடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆரோக்கியமான ப்ரோக்கோலி சாதம்
Ingredients
- வேக வைத்த சாதம்- 1 கப்
- ப்ரோக்கோலி இதழ்கள் பொடியாக நறுக்கியது- 1/2 கப்
- நறுக்கிய வெங்காயம்- 2 டே.ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு-1
- மஞ்சள் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய்- 1 டீ.ஸ்பூன்











Leave a Reply