carrot rice for 7 month old -குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் மதிய உணவாக கொடுப்பதற்கு ஏற்ற பல வகையான சாத வகைகளை இதற்கு முன் நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் கேரட் பாசிப்பருப்பு சாதமானது குழந்தைகளுக்கு சுவையினை கொடுக்கக்கூடிய ஆரோக்கியமாக சாத வகையாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நீங்கள் வழக்கமாக கொடுக்கும் பருப்பு சாதம், பால் சாதம், இட்லி போன்றவை சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தைகளுக்கு இந்த கேரட் பாசிப்பருப்பு சாதம் கட்டாயம் பிடிக்கும். மேலும் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்களும் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
Carrot Rice for 7 Month Old
குழந்தைகள் கேரட் பாசிப்பருப்பு சாதம் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
- இந்த சாதத்தில் நாம் சேர்க்கும் பாசிப்பருப்பானது இயற்கையிலேயே புரோட்டின் சத்து நிறைந்தது. புரோட்டின் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று என்பதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
- கேரட்டானது இயற்கையிலேயே நார் சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே, குழந்தைகளின் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.மேலும் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தவுடன் வயிறு நிரம்பிய திருப்தியனையும் கொடுக்கும்.
- கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லதாகும். மேலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சருமத்தினை அழிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- பாசிப்பருப்பில் மேலும் குழந்தைகளுக்கான மினரல்ஸ்,வைட்டமின் பி 6 பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
- பருப்பு வகைகளில் பாசிப்பருப்பானது எளிதில் செரிமானமாக கூடிய பருப்பாகும். எனவே, இது குழந்தைகளுக்கு எவ்விதமான வயிற்று உபாதைகளையும் ஏற்படுத்தாது.
- மேலும், குழந்தைகளுக்கு எந்த வித அலர்ஜியினையும் ஏற்படுத்தாது என்பதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகும்.
- இந்த சாதத்தில் குழந்தைகள் உண்ணும் பதத்திற்கு ஏற்றவாறு நீங்கள் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான மற்ற ஆரோக்கியமான காய்கறிகளையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
- மொத்தத்தில் கேரட் பாசிப்பருப்பு சாதமானது குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கியத்தினை அள்ளித் தரும் சுவையான ரெசிப்பியாகும்.
Carrot Rice for 7 Month Old
- அரிசி- 1/4 கப்
- பாசிப்பருப்பு -கால் கப்
- கேரட் தோல் சீவி நறுக்கியது -1
- தண்ணீர்- 2 கப்
கேரட் பாசிப்பருப்பு சாதம்
செய்முறை
1.அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் நன்கு கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2.குக்கரில் ஊற வைத்த அரிசி, பாசிப்பருப்பு,நறுக்கிய கேரட் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
3.ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் விசில் இல்லாமல் அடுப்பில் வைக்கவும்.
4.அடுப்பில் இருந்து இறக்கியதும் நன்றாக மசிக்கவும்.
5.குழந்தைகளுக்கு தேவையான கேரட் பாசி பருப்பு சாதம் ரெடி.
carrot rice for 7 month old
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாசிப்பருப்பு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றதா?
ஆம். பாசிப்பருப்பில் இயற்கையாகவே புரோட்டின் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகும். மேலும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் குழந்தைகளுக்கு அரசியினை தரலாமா?
அரிசியானது குழந்தைகளின் செரிமான மண்டலத்துக்கு ஏற்ற இலகுவான உணவாகும்.
அரிசியினை எப்படி குழந்தைகளுக்கு தரலாம்?
அரிசியினை குழந்தைகளுக்கு தரும்போது நன்குகுழைவாக வேக வைத்து அதனை மசித்து கொடுக்க வேண்டும். மேலும் காய்கறிகளுடன் சேர்த்து குழந்தைகளுக்கு சத்தான சாதமாக செய்து கொடுக்கலாம்.
கேரட் பாசிப்பருப்பு சாதம்
Ingredients
- அரிசி- 1/4கப்
- பாசிப்பருப்பு-கால் கப்
- கேரட் தோல்சீவி நறுக்கியது -1
- தண்ணீர்- 2 கப்
Leave a Reply