பட்டர் ஃப்ரூட் கூழ் (குழந்தையின் 5-வது மாதத்தில்இருந்து தரலாம்) இயற்கைப் படைத்த அற்புத உணவு, பட்டர் ஃப்ரூட். அதுவும் இது குழந்தைகளுக்கான சிறந்த உணவு என்று சொல்லலாம். கிரீம் போல, லேசான இனிப்பு சுவையுடன் வெண்ணெய் போன்ற பதத்தில் இருக்கும் இந்தப் பழம் பல் முளைக்காத குழந்தைகளுக்கான பெஸ்ட் உணவு. முதல் முறையாகத் திடஉணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது, பட்டர் ஃப்ரூட்டையும் தரலாம். பட்டர் ஃப்ரூட் கூழ் செய்வது எப்படி? தேவையானவை: பட்டர்ப்ரூட்(அல்லது) வெண்ணெய்ப் பழம் – பாதி…Read More
உருளைக்கிழங்கு கூழ்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு கூழ் (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: உருளைக்கிழங்கு – ஒன்று தண்ணீர் – ஒரு கப் ஓமம் அல்லது சீரகப் பொடி – சிறிது செய்முறை: உருளைக்கிழங்கு நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய உருளைக்கிழங்கை சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 முதல் 3 விசில்கள் வரும் வரை…Read More
ஆப்பிள் கூழ்
வேகவைத்து மசித்த ஆப்பிள் அல்லது ஆப்பிள் கூழ் வயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை : ஆப்பிள் – பாதி அளவு செய்முறை: ஆப்பிளை நன்றாக கழுவி தோல் சீவி துண்டுகளாக்கி விதைகளை நீக்கி கொள்ளவும். ஆப்பிளை விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் பல்வேறு முறைகளில் செய்யலாம்… ஆப்பிளை நீங்கள் ஸ்டீமர் கொண்டு ஆவியில் வேகவைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் இதில் உள்ள சத்துகள் வெளியேறாமல் இருக்கும். நறுக்கிய ஆப்பிள்துண்டுகளை பாத்திரத்தில் வைத்து…Read More
பீட்ரூட் உருளைக்கிழங்கு கூழ்
வேகவைத்து மசித்த பீட்ரூட் உருளைக்கிழங்கு அல்லது பீட்ரூட் உருளைக்கிழங்கு கூழ் (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் – தலா ஒன்று செய்முறை: உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்டை பாதியாக வெட்டிக் கொள்ளவும் . பின் இதன் தோலை உரித்து தண்ணீரில் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். ஒரு சிறிய பாத்திரத்தில் இதனை வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பி அதனுள் பாத்திரத்தை வைத்து வேக விடவும்….Read More
வேகவைத்து மசித்த கேரட், பாலக்கீரை
Carrot Palak (குழந்தையின் 8 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : கேரட் – ஒன்று பாலக் கீரை – சிறிது சீரகத்தூள் – சிறிது பெருங்காயம் – சிறிது செய்முறை: கேரட்டை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். 2. கீரையையும் நன்றாக கழுவிக் கொள்ளவும். 3.கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கவும், கீரையை பொடிப் பொடியாகவும் நறுக்கவும். 4.இதனை பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு இதனை…Read More
சர்க்கரை வள்ளி கிழங்கு கூழ்
வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளி கிழங்கு (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : சர்க்கரை வள்ளிக் கிழங்கு – ஒன்று பட்டை தூள் அல்லது ஏலக்காய் தூள் – தேவையெனில் வெல்லக்கரைசல் அல்லது பனங்கல்கண்டு – தேவையெனில் செய்முறை: சர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்து நான்கு துண்டுகளாக்கி கொள்ளவும். கிழங்கில் அதிகளவில் நார்கள் இருப்பதால் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது கடினம். எனவே இதனை தண்ணீரில் வேக வைக்கவும் அல்லது ஆவியில்…Read More
வேகவைத்து மசித்த பீன்ஸ் அல்லது பீன்ஸ் கூழ்
வேகவைத்து மசித்த பீன்ஸ் அல்லது பீன்ஸ் கூழ் (குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : ப்ரெஞ்ச் பீன்ஸ் – 10 உருளைக்கிழங்கு – பாதி வெண்ணெய் – அரை ஸ்பூன் (8 மாதங்களுக்கு பிறகு தரலாம்) சீரகத்தூள் – சிறிது செய்முறை: பீன்ஸை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதேபோல் உருளைக்கிழங்கையும் தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக்கி கொள்ளவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய…Read More
கேரட் கூழ்
வயது-குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: கேரட் – ஒன்று(நடுத்தர அளவிலானது) செய்முறை: கேரட்டை முதலில் நன்கு கழுவி அதனை தோல் சீவிக் கொள்ளவும். பின் இதனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். நறுக்கிய கேரட் துண்டுகளை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரை விடவும். அடுப்பை அணைத்து நன்றாக ஆறிய பிறகு கைகளால் மசிக்கவும் அல்லது அரைத்துக் கொள்ளவும். சுவைக்காக…Read More