Christmas Special Cookies Recipe: கிறிஸ்மஸ் காலத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஏந்திய நட்சத்திரங்களுடன் நம் வீடே கலைகட்டி இருக்கும். விளக்குகளின் ஒளியில் நம் வீட்டு செல்லங்கள் ஆடி பாடி குதூகலமடையும் நேரமிது.உங்கள் வீடு செல்லங்களை மேலும் குதூகலப்படுத்தும் ரெசிபிதான் லிட்டில் மொப்பெட்டின் பாதாம் குக்கீஸ் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கோதுமை மாவு மற்றும் பாதாம் பவுடர் ஆகியவை குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது. இந்த குக்கீஸ் ரெசிபியை நீங்களும் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
Christmas Special Cookies Recipe
Christmas Special Cookies Recipe
- கோதுமை மாவு -1 1/4 கப்
- பாதாம் பவுடர்- 2 கப்
- துருவிய தேங்காய் -2 டே. ஸ்பூன்
- பால்– 2 டே.ஸ்பூன்
- கோக்கனட் சுகர்– 1/2 கப்
- முட்டை -1
- வெண்ணிலா எஸன்ஸ்- அரை டீ.ஸ்பூன்
- பட்டர்- அரை கப்
மை லிட்டில் மொப்பெட் கோக்கனட் சுகரினை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம். நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பாதாம் குக்கீஸ்
செய்முறை
1.ஓவனை 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு 15 நிமிடங்களுக்கு பிரீ ஹீட் செய்யவும்.
2.ஒரு பவுலில் பட்டரை போட்டு கலக்கியினால் நன்றாக கலக்கவும்.
3.அதனுடன் சர்க்கரை சேர்த்து க்ரீம் பதத்திற்கு வருமளவிற்கு நன்றாக கலக்கவும்.
4.முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
5.கோதுமை மாவு, பாதாம் பவுடர், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கிக் கொண்டே இருக்கவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
7.மாவினை பட்டர் சீட்டில் சுற்றி ஒரு மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
8.அதன்பிறகு மாவினை 2 பட்டர் சீட்டுகளுக்கு இடையில் வைத்து சப்பாத்தி கட்டையால் உருட்டவும்.
9.நமக்கு தேவையான வடிவத்திற்கு கட்டரை கொண்டு கட் செய்யவும்.
10.பேக்கிங் பானில் பட்டரினால் தடவி தயார் செய்த குக்கீஸினை அதில் வைக்கவும்.
11. 125-180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
12.குக்கீஸினை ஜாம் கொண்டு அலங்கரிக்கலாம்.
13.கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பாதாம் குக்கீஸ் ரெடி.
14.இதனை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply