Chutney for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் ஆரம்பித்தவுடன் காய்கறிக்கூழ்,பழக்கூழ் போன்றவற்றை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய பின்பு நமது அடுத்த தேர்வானது இட்லியாகத்தான் இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய, ஆரோக்கியமான உணவென்றால் அது இட்லிதான்.ஆனால் இட்லியை அப்படியே கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும்.
குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆரோக்கியமான சட்னியுடன், இட்லியை நீங்கள் கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பதுடன் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது.
குழந்தைகளுக்கு 8 மாத காலம் முதல் கொடுக்க வேண்டிய மூன்று வகையான சட்னி ரெசிபிகளை இங்கு கொடுத்துள்ளோம். அவற்றினை ஒவ்வொன்றாக நாம் காணலாம்.
Chutney for Babies in Tamil:
Chutney for Babies in Tamil:
சட்னி பவுடர்
- பொட்டுக்கடலை -1 கப்
- மிளகு- ½ டீ.ஸ்பூன்
- சீரகம்- ½ டீ.ஸ்பூன்
குறிப்பு ; ஒரு வயதுக்கு மேல் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
1.தேவையான பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் கடாயில் வறுத்து எடுக்கவும்.
2.ஆற விடவும்.
3.நன்றாக அரைக்கவும்.
4.சட்னி பவுடர் ரெடி.
5.காற்று புகாத டப்பாவில் அடைத்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
6.குழந்தைகளுக்கு நெய் சேர்த்து பரிமாறலாம்.
கேரட் சட்னி
- நறுக்கிய கேரட் -1 கப்
- உளுந்தம் பருப்பு -1
- கடலை பருப்பு- 1 டே.ஸ்பூன்
- மிளகு -1/4 டீ.ஸ்பூன்
- சீரகம் -1/4 டீ.ஸ்பூன்
- நெய்- ½ டீ.ஸ்பூன்
செய்முறை
1.பானை சூடாக்கி நெய் சேர்க்கவும்.
2. உளுந்தம் பருப்பு ,கடலைப் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
3.மிளகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
4. பொன்னிறமாக வறுக்கவும்.
5.கேரட் சேர்த்து வதக்கவும்.
6.தண்ணீர் சேர்த்து மூடியால் மூடவும்.
7.சரியாக வந்துள்ளதா என சரி பார்க்கவும்.
8.மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
9.கேரட் சட்னி ரெடி.
10.தேவைப்பட்டால் தாளித்துக் கொள்ளலாம்.
தக்காளி சட்னி
- எண்ணெய் -1 டே.ஸ்பூன்
- நறுக்கிய தக்காளி -2
- பூண்டு- 1 பல்
- கடலைப்பருப்பு- 1 டீ.ஸ்பூன்
- சீரகம் -1/2 டீ.ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் -1
- உப்பு
செய்முறை
1.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
2.கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
3.பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.தக்காளி சேர்க்கவும்.
5.தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
6.ஆறவிடவும்.
7.பின்பு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
8.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
9.தக்காளி சட்னி ரெடி.
10.நீங்கள் விருப்பப்பட்டால் கருவேப்பிலை மற்றும் கடுகு கொண்டு தாளித்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply