Coconut Halwa without Sugar : குழந்தைகளுக்கு விடுமுறை காலம் வந்துவிட்டது. நாள் முழுவதும் வீட்டில் விளையாடி களைத்து போயிருக்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுத்தால் அவர்களின் முகம் மலர்ச்சி அடையும் அல்லவா?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்காகவே இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஹெல்த்தியான கோக்கனட் அல்வா. பொதுவாகவே இனிப்பு என்றால் எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் அவர்களுக்கு பிடித்த சுவையில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகள் உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்.
கடைகளில் விற்கும் ஸ்வீட்டுகளில் சீனி சேர்க்கப்படுவதால் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்வீட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கோக்கனட் அல்வாவை கொடுக்கலாம்.
தேங்காயின் நற்குணங்களுடன் நாட்டு சக்கரையும் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகுந்த ஆற்றல் மிகுந்த உணவாக இது இருக்கும்.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இந்த ரெசிபியில் அடங்கியுள்ள நற்குணங்களை பார்க்கலாம்:

- தேங்காயில் இயற்கையாகவே நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கும் குழந்தைகள் ஆற்றலாக இருப்பதற்கும் இது உதவுகின்றது.
- இந்த அல்வா மென்மையாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகும்.
- இதில் இயற்கையாகவே நிறைந்துள்ள பொருட்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகின்றது.
- தேங்காயில் இயற்கையாகவே நிறைந்துள்ள நற்குணங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- குழந்தைகள் துருதுறுப்பாக இருப்பதற்கு அவர்களுக்கு மிகவும் ஆற்றல் தேவைப்படும். இந்த அல்வா குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
- துருவிய தேங்காய்- 1 கப்
- நாட்டு சக்கரை- 2-3 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு- 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய்-1
- நெய்- 2-3 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை
- துருவிய தேங்காய் நாட்டு சக்கரை அரிசி மாவு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- கடாயை காய வைத்து அதில் நெய் ஊற்றவும்.
- மிக்ஸியில் அரைத்த கலவையை கடாயில் போடவும்.
- மிதமான தீயில் கட்டிகள் வராத அளவிற்கு கலக்கிக் கொண்டே இருக்கவும்.
- கடாயில் இருந்து நன்கு பிரிந்து வந்ததும் அடுப்பினை அணைக்கவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குழந்தைகளுக்கு சட்டென்று ஏதாவது ஸ்வீட் செய்ய வேண்டும் அதே நேரம் வீட்டில் உள்ள பொருளை வைத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த தேங்காய் அல்வா நல்ல தீர்வாகும்.
இதில் சீனி சேர்க்கவில்லை என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. தேங்காய் மற்றும் நாட்டுச்சர்க்கரை இரண்டும் கடைகளில் விற்கும் ஸ்வீட் சாப்பிட்ட திருப்தியை தரும்.
பொதுவாக ஸ்வீட் என்றாலே பலவகையான மூலப் பொருட்கள் சேர்த்து நாம் மிகவும் மெனக்கட வேண்டியது இருக்கும். ஆனால் இரண்டே பொருட்களை வைத்து சட்டென்று செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த தேங்காய் அல்வா நல்ல தீர்வாகும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Coconut Halwa without Sugar

Coconut Halwa without Sugar
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.எந்த வயதில் இருந்து அல்வாவை கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த அல்வாவை கொடுக்கலாம்.
2. துருவிய தேங்காய்க்கு பதிலாக டிரை கோகனட் சேர்க்கலாமா? தேங்காயை அவ்வப்பொழுது துருவி சேர்ப்பது தான் சிறந்தது.
3. குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க உதவுமா?
தேங்காய் மற்றும் நெய் ஆகிய இரண்டுமே குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் இந்த ரெசிபியை குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க தாராளமாக கொடுக்கலாம்.
4. இந்த அல்வாவை வைத்து சாப்பிடலாமா?
இதில் தேங்காய் சேர்த்துள்ளதால் உடனடியாக செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.
டேஸ்டியான கோக்கனட் அல்வா
Ingredients
- துருவிய தேங்காய்- 1 கப்
- நாட்டு சக்கரை- 2-3 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு- 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய்-1
- நெய்- 2-3 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் -தேவையான அளவு
Notes
சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
கடாயை காய வைத்து அதில் நெய் ஊற்றவும்.
மிக்ஸியில் அரைத்த கலவையை கடாயில் போடவும்.
மிதமான தீயில் கட்டிகள் வராத அளவிற்கு கலக்கிக் கொண்டே இருக்கவும்.
கடாயில் இருந்து நன்கு பிரிந்து வந்ததும் அடுப்பினை அணைக்கவும்.
குழந்தைகளுக்கு பரிமாறவும்.











Leave a Reply