Dates and nuts cooker cake
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
டிசம்பர் மாதம் என்றாலே அனைவர்க்கும் மனதில் வருவது வகை வகையான கேக்குகள் தான், அதிலும் ட்ரை புரூட்ஸ் அண்ட் நட்ஸ் கேக்குகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம்தான்.பாரம்பரியமாக இந்த கேக் வகையானது ஆல்கஹால் அல்லது வேறு வகையான திரவத்தில் 4௦ நாட்கள் ஊற வைத்த பின்னரே தயாரிக்கப்படுகிறது.ஆமாம்!இதை தயாரிக்க பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இதன் கெட்டியான பதத்தால் பேக் செய்வதற்கும் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்.
நீங்களும் இதே மாதிரியான கேக் ரெசிபியை செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?ஆனால் இதற்கான செய்முறை கடினம் என்று யோசிக்கிறீர்கள் அதானே !கவலைப்படாதீர்கள் உங்களுக்கான சுலபமான ரெசிபியை நாங்கள் தருகிறோம். இதற்கு ஓவன் கூட தேவை இல்லை! நீங்கள் தினசரி உபயோகிக்கும் பிரஷர் குக்கர் போதுமானது. இது முற்றிலும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படுகிறது , வெண்ணெய், சீனி மற்றும் முட்டை சேர்க்கப்படாதது, இயற்கை இனிப்பூட்டியாக பேரீச்சம் பழம் பயன்படுத்த படுகிறது. ஆல்கஹாலிற்கு பதிலாக ஆப்பிள் ஜூஸ் பயன்படுத்த படுவதால் குழந்தைகளுக்கு ஏற்றது. இனிமேலும் காத்திருக்க முடியாது தானே? வாருங்கள் நமது ரெசிபியின் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1½ கப் கோதுமை மாவு
- 1 கப் கொட்டை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம்
- 1 கப் நறுக்கிய நட்ஸ் மற்றும் ட்ரை புரூட்ஸ் (பாதாம்,வால் நட்ஸ், அத்திப்பழம், செர்ரி, டூட்டி புரூட்டி, கிரேன் பெர்ரி, உலர்ந்த கருப்பு திராட்சை)
- ஆப்பிள் ஜூஸ் 1/2 கப் பிரெஷ்
- 1/2 எண்ணெய் (ஆலிவ் ஆயில் அல்லது நறுமணம் இல்லாத சமையல் எண்ணெய்)
- இஞ்சி பவுடர்-1/2 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை பவுடர்-1/2 டீஸ்பூன்
- 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை
- இளஞ்சூட்டான பாலில் கொட்டை நீக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை 1½ மணி நேரம் ஊறவைத்து பின்னர் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும். அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கிய பின்பு தனியாக வைக்கவும்.
- நறுக்கிய நட்ஸ் மற்றும் ட்ரை புரூட்ஸ்-ஐ ஆப்பிள் ஜுஸில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். கேக்கின் மேலே தூவுவதற்கு கொஞ்சம் தனியாக எடுத்து வைக்கவும்.
- அகன்ற 5 லிட்டர் பிரஷர் குக்கரை எடுத்து கொள்ளவும். 2 கப் உப்பை குக்கரில் கொட்டவும். ஸ்டாண்டை அதன் மேல் வைக்கவும். குக்கரில் உள்ள விசில் மற்றும் காஸ்கெட்டை நீக்கவும். குக்கரை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் சூடு பண்ணவும்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர்,இஞ்சி பவுடர், இலவங்கப்பட்டை பவுடர், உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
- ஏற்கனவே ஆப்பிள் ஜுஸில் ஊற வைத்த நட்ஸ் மற்றும் ட்ரை புரூட்ஸ்-ஐ மாவு பாத்திரத்தில்சேர்க்கவும்.
- அரைத்து வைத்த பேரிச்சம் பழக்கலவையை இதனுடன் சேர்த்து மர கரண்டியால் நன்கு கிண்டவும். இப்பொழுது கேக் தயாரிக்க தேவையான மாவு ரெடி. கலவை கெட்டியாக உள்ளது என்று நினைத்தால் சிறிது பால் சேர்க்கலாம்.
- 8 இன்ச் பேக்கிங் ட்ரேயை எடுத்து கொள்ளவும். கேக் ஒட்டாமல் இருக்க அதில் வெண்ணையை தடவவும். தயாரித்து வைத்த மாவை அதில் ஊற்றி நன்கு செட் செய்யவும். மீதமுள்ள நட்ஸ் மற்றும் ட்ரை புரூட்ஸ்- ஐ மேலே தூவவும்.
- ஏற்கனவே சூடு பண்ணி வைத்த குக்கரில் கேக் ட்ரேயை கவனமாக வைக்கவும். மிதமான சூட்டில் குக்கரை மூடி 40-45 நிமிடத்திற்கு சூடு செய்யவும். கேக் வெந்து விட்டதா என பார்க்க டூத் பிக் டெஸ்ட் செய்யவும்.
- கேக்கை சிறிது நேரம் ஆற வைத்து பின்பு துண்டுகளாக்கவும்.
- இப்பொழுது சுவையான டேட்ஸ் அண்ட் நட்ஸ் கேக் ரெடி! உங்கள் செல்ல குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.இது போன்ற எளிமையான குழந்தைகளுக்கு தேவையான ரெசிபிகளை இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்… https://bit.ly/2T38aaI மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply