குழந்தைகளுக்கான ரவா கேக்
Eggless Rava Cake for Kids
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கேக், கூக்கீஸ் போன்ற உணவுகள் சந்தையில் நிறைந்திருக்கின்றன. பார்க்கவே சுவைக்கத் தூண்டும் தோற்றம் அவை. ஆனால் ஆரோக்கியமானதா எனத் தெரியாது. இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் அது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். முட்டை சேர்க்காத ரவா கேக்கை வீட்டிலே எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த கேக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இந்த கேக்கை நீங்கள் செய்துவிட முடியும்.
குழந்தைகளுக்கான ரவா கேக்
- ரவா – 1 கப்
- தயிர் – 1 கப்
- பால் – 1 கப்
- பொடித்த சர்க்கரை – 1 கப்
- நெய் – 4 டேபிள்ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
- வென்னிலா எசன்ஸ் – சில துளிகள்
- பொடித்த முந்திரி, பாதாம், வால்நட், உலர் திராட்சை – ஒரு கைப்பிடி
- பாதாம் – 1 டேபிள்ஸ்பூன் (அலங்கரிக்க)
செய்முறை
- ஒரு பவுலில் ரவா மற்றும் பொடித்த சர்க்கரை கலந்து கொள்ளவும்.
- மேலும். அதில் தயிர், பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலந்த பின் நெய் ஊற்றிக் கலக்கவும்.
4.இப்போது அதில் பேக்கிங் பவுடர், வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.
5.அனைத்துப் பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
6.இப்போது கலவையில் நட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நட்ஸை கலவையோடு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
7.ஒவனில் வைத்திருக்கும் பாத்திரத்தில் நெய்த் தடவி, அதில் கலந்து வைத்த மாவை ஊற்றவும்.
8.மாவை செட் செய்த பின் பாதாமை மேலே தூவவும்.
9.ப்ரீ ஹீட்டில் 180 டிகிரி அளவு வைக்கவும்.
10.ஒவனில் 180 டிகிரி ஹீட்டில் பேக் செய்யவும்.
11.கேக்கின் ஓரத்தில் லைட் பிரவுனாகும் வரை பேக் செய்யவும்.
12.நட்ஸை சேர்க்காமல் செய்தால் இதே கேக்கை ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் தரலாம்.
குறிப்பு
- உங்களின் விருப்பத்துக்கு ஏற்றதுபோல இனிப்பின் அளவை மாற்றிக் கொள்ளுங்கள்.
- மாவை ஊற்றி ஒவனில் வைத்ததும் அடிக்கடி கேக்கை பார்த்துக்கொண்டே இருங்கள். டார்க் பிரவுன் நிறத்துக்கு கேக் வந்தால் கசப்பு சுவையைத் தரும் என்பதால் கேக்கை கருகாமல் கவனித்துக் கொள்ளவும்.
- லைட்டாக பிரவுன் நிறத்துக்கு கேக் வந்ததுமே, ஒவனிலிருந்து கேக்கை எடுத்துவிடலாம்.
- ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க விருப்பப்பட்டால், பேக்கிங் பவுடருக்கு பதிலாக ஈனோ சேர்க்கலாம். வெனிலா எசன்ஸை தவிர்க்கலாம்.
- ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க விருப்பப்பட்டால், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply