Eggless Wheat Apple Pancake
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக பான் கேக் குழந்தைகளுக்கான ஃபேவரெட். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் உணவு இது. ஏனெனில் இது ஒரு இனிப்பு உணவு. இந்த உணவைச் சமைப்பதுகூட சுலபம்தான். பொதுவாக பான்கேக் என்றாலே முட்டை, பால், மைதா சேர்ப்பதுண்டு. ஆனால், இந்த ரெசிபியில் இவை எதுவுமே சேர்க்கவில்லை. எல்லாமே ஹெல்தி பொருட்களை வைத்து செய்யப்பட்டிருக்கும். பால் அலர்ஜி, முட்டை அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பான் கேக்கை நீங்கள் தாராளமாக செய்து தரலாம்.
இந்த பான் கேக்கை, நீங்கள் மிகவும் சிறிய வட்ட வடிவில் செய்து தந்தால் குழந்தைகள் இதை ஃபிங்கர் ஃபுட்டாகவும் ரசித்துச் சாப்பிட முடியும்.
வீட் ஆப்பிள் பான்கேக் ரெசிபி
- கோதுமை மாவு – 100 கிராம்
- மீடியம் சைஸ் ஆப்பிள் – 1
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- பட்டைத் தூள் – ¼ டீஸ்பூன்
- நெய் – ½ டீஸ்பூன்
- வெல்லம் – 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
- உப்பு – ஒரு சிட்டிகை
- பேக்கிங் பவுடர் அல்லது ஈனோ – ½ டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
- தண்ணீர் – 50 மில்லி (தேவைப்பட்டால் பால் சேர்க்கலாம்)
செய்முறை
- கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பட்டைத்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பவுலில் போடவும்.
- இந்த மாவில் எண்ணெய், தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். கட்டிகள் இல்லாதபடி கலக்க வேண்டும்.
- ஆப்பிள் தோலைச் சீவி கொள்ளவும். பின்னர் ஆப்பிளைத் துருவிக்கொள்ளவும்.
- மாவில் துருவிய ஆப்பிளைச் சேர்த்து, 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் மாவை நன்றாகக் கலக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.
- தவாவை மிதமான தீயில் வைத்து, நெய் அல்லது வெண்ணெயைத் தடவவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக ஊற்றவும்.
- குழந்தைகள் கையில் வைத்துச் சாப்பிடும் அளவுக்கு சிறிய வட்டங்களாக ஊற்றவும்.
- மூடிப் போட்டு வேக விடவும். பான் கேக்கில் சிறு சிறு துளைகள் வரும் வரைக் காத்திருக்கவும்.
- சிறு சிறு துளைகள் வந்தவுடன் பான் கேக்கை திருப்பிப் போடவும்.
- ஒரு நிமிடத்துக்கு வேகவிட்டு பான் கேக்கை எடுத்துவிடலாம்.
வெதுவெதுபானச் சூட்டில் தேன் அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றிப் பரிமாறலாம்.
ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு தேன் ஊற்றிக் கொடுக்க வேண்டாம்.
குறிப்பு
- இந்த பான்கேக்கை பேக்கிங் பவுடர் இல்லாமலும் செய்யலாம். பேக்கிங் பவுடர் சேர்த்தால் மாவு திக்காகும். பான் கேக் மென்மையாக வரும்.
- ஆப்பிள் பழம் இனிப்பாக இருந்தால், சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.
- ஆப்பிளுக்கு பதிலாக மசித்த வாழைப்பழம், ஒரு சிட்டிகை ஏலப்பொடிகூட சேர்க்கலாம்.
- சர்க்கரை சேர்க்காமல்கூட இந்த பான் கேக்கை நீங்கள் செய்யலாம். தேவைப்பட்டால் அப்புறமாககூட சேர்த்துக் கொள்ளலாம்.
- குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் உங்களது விருப்பப்படி பால்கூட சேர்க்கலாம்.
இந்த பான் கேக் நிச்சயம் உங்களது குழந்தைகளுக்கு பிடிக்கும். கிட்ஸ் பார்ட்டி, சண்டே ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என எப்போது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். இந்த பான் கேக்கில் குழந்தைகளுக்கு பிடித்ததுபோல ஜாம், பீநட் பட்டர், சாக்லெட் ஸ்ப்ரெட் என எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply