குழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி
Fruit Finger Recipes for Babies:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம்.
- குழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார்.
- தன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம்
- தன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் குழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார்.
- நீங்கள் கை அசைத்தால் கையை நோக்கி தன் கண்களைச் செலுத்தி அதைப் பிடிக்க முயற்சி செய்வார்கள்.
- குழந்தைக்கு பற்கள் இல்லை என்றாலும் தன் ஈறுகளால் பழத்தை கூழாக்கும் தன்மை குழந்தைகளுக்கு தெரியும்.
இந்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் குழந்தைகள் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார் என அர்த்தம்.
ஃபிங்கர் ஃபுட்ஸ் அளவுமுறை…
- குழந்தையின் கை முஷ்டி அளவுக்கு ஃப்ரூட் ஃபிங்கர் ஃபுட்ஸை சாப்பிட கொடுக்கலாம்.
- வாழைப்பழம் போன்ற வழுக்கி கொண்டே செல்லும் பழங்களை அரிசி மாவு அல்லது கோதுமை மாவில் பிரட்டி சுட்டு எடுத்து சாப்பிட கொடுக்கலாம்.
- குழந்தைகளின் வாயில் உள்ள ஈறில் மசியும் அளவுக்கு ஃபிங்கர் ஃபுட்டை மிதமாக வேக வைக்க வேண்டும்.
எதெல்லாம் ஃபிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்?
காய்கறி, பழங்கள், சிக்கன், சீஸ், ப்ரெட் ஆகியவற்றைத் தரலாம்.
25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி
பழ ஃபிங்கர் ஃபுட் குழந்தைக்கு பெஸ்டாக இருக்கும். பழங்கள் இனிப்பாகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதால் அதை சுவைக்க குழந்தைகள் விரும்புவார்கள்.
ஆப்பிள்
-
ஸ்டீம்டு ஆப்பிள் கியூப்
கழுவி, தோல் எடுத்து, ஆப்பிளை கட்டமாக நறுக்கி, அதை லேசாக வேகவிட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.
-
பேக்டு ஆப்பிள்
- கழுவி, சுத்தப்படுத்தி, தோலுடன் ஆப்பிளை நறுக்கி கொள்ளவும்.
- அதில் பட்டைத் தூளை மேலே தூவிக் கொள்ளவும்.
- பேக்கிங் பானில் 2 இன்ச் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் ஆப்பிள் துண்டுகளை வைத்து 400 டிகிரி அளவுக்கு 30 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- வெந்தவுடன் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஆறியதும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
-
ரோஸ்டட் ஆப்பிள்
- கழுவி, தோல் நீக்கி , ஆப்பிளை கட்டங்களாக நறுக்கவும்.
- ஆப்பிள் கியூப்களை வேக வைக்கவும்.
- பானில், வெண்ணெய் விட்டு அதில் ஆப்பிள் கியூப்பை போட்டு பட்டைத்தூள் தூவி சுட்டெடுக்கவும்.
-
பைட் சைஸ் ஆப்பிள்
வேக வைக்காமல் அப்படியே ஆப்பிளைச் சாப்பிட குழந்தை விரும்பினால், ஆப்பிளை கழுவி, தோல் நீக்கி சின்னதாக கட் செய்து கொடுக்கலாம்.
-
ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்
- ஆப்பிள் – 1
- மாவு – 1/3 கப்
- முட்டை – 1
- பிரெட் தூள்
- பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
- கழுவி, தோல் நீக்கி, ஆப்பிளைத் துருவிக்கொள்ளவும்.
- தேவையானப் பொருட்கள் அனைத்தையும் கலக்கவும்.
- தவாவில் சின்ன சின்னதாக வட்டமாக சுடவும்.
- ஆலிவ் எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
- ஆறியதும் சாப்பிட கொடுக்கலாம்.
6.பேக்டு ஆப்பிள் சிப்ஸ்
- ஆப்பிளை கழுவி, வட்டமாக ஸ்லைஸ் போட்டு விதைகளை நீக்கவும்.
- ஒவனை 200 டிகிரி அளவுக்கு சூடேற்றவும்.பானில் ஸ்லைஸ்டு ஆப்பிளை போட்டு பட்டைத் தூள் மேலே தூவிக் கொள்ளவும்.
- 90 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
- ஆறியதும் சாப்பிடலாம்.கிரிஸ்பி சிப்ஸ் ரெடி.
7.ஃப்ரைட் ஆப்பிள் ரிங்க்ஸ்
வெங்காய ரிங் போலதான் இதுவும் சுவையாக இருக்கும். ஓரு வயது முடிந்த குழந்தைக்கு கொடுக்கலாம்.
- ஆப்பிள் – 1
- மாவு – ¼ கப்
- சர்க்கரை – ½ டீஸ்பூன்
- பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை
- அடித்த முட்டை – ½
- மோர் – ¼ கப்
- உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
- ஒரு பெரிய பவுலில் மாவு, சர்க்கரை, உப்பு, பட்டைத் தூள் எல்லாம் கலந்து கொள்ளவும். இன்னொரு பவுலில் முட்டையும் மோரையும் கலந்து கொள்ளவும்.
- கால் இன்ச் அளவுக்கு ஆப்பிளை ஸ்லைஸ் போடுங்கள். தோல் நீக்கவும்.
- கரைத்து வைத்த இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து அதில் ஆப்பிளை முக்கி பொரித்து எடுக்கவும்.
- பெரிய குழந்தைக்கு கொடுத்தால் பொரித்த ஆப்பிளை பவுடர் சுகர் மேலே தூவி சாப்பிட கொடுக்கலாம்.
8. ஆப்பிள் பான்கேக்
9.ஆப்பிள் மஃபின்ஸ்
பியர்ஸ்
-
பைட் சைஸ் பியர்
கழுவி, தோல் நீக்கி , சிறிய பீஸ்களாக போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.
-
பேக்டு பியர்ஸ்
- 350 டிகிரி அளவுக்கு ஓவனை சூடேற்றவும். பேக்கிங் பானை வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.
- கழுவி, தோல் நீக்கி, பியர்ஸை நறுக்கி கொள்ளவும்.
- அதில் பட்டைத் தூள் தூவவும்.
- ஒவ்வொரு பக்கமும் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
-
ரோஸ்டட் பியர்ஸ்
- கழுவி, தோல் நீக்கி , பியர்ஸ் கட்டங்களாக நறுக்கவும்.
- பியர்ஸ் கியூப்களை வேக வைக்கவும்.
- பானில், வெண்ணெய் விட்டு அதில் பியர்ஸ் கியூப்பை போட்டு பட்டைத்தூள் தூவி சுட்டெடுக்கவும்.
-
பியர் சிப்ஸ்
கழுவி, தோல் நீக்கி, ஸ்லைஸ் போட்டு பேக் செய்வதோ எண்ணெயில் பொரிக்கவோ செய்யலாம். அதில் பட்டைத்தூள் தூவி சாப்பிடலாம்.
- பியர் மஃப்பின்ஸ்
- பியர் பான்கேக்
தர்பூசணி
-
தர்பூசணி ஃபிங்கர்ஸ்
தர்பூசணி லைட்டாக இருக்கும் என்பதால் அழகான ஃபிங்கர் ஃபுட்டாக செய்யலாம்.
எப்படி தர்பூசணியை ஃபிங்கர் ஃபுட்டாக செய்வது?
- தர்பூசணியை பாதியாக நறுக்கவும்.
- ஒரு பக்கத்தை திருப்பி நறுக்கி கொள்ளவும்.
- அதையே மறு பக்கம் திருப்பி நறுக்கினால் அழகான தர்பூசணி ஃபிங்கர் ஃபுட்டாக கிடைக்கும்.
-
தர்பூசணி பாப்சிசல்ஸ்
கட்டம் கட்டமாக தர்பூசணியை நறுக்கி அதில் ஸ்டிக்கை குத்தி சாப்பிட கொடுக்கலாம்.
வாழைப்பழம்
-
கட் பனானா
வாழைப்பழத்தை நறுக்கி அதில் பிரெட் தூளில் பிரட்டி சாப்பிட கொடுக்கலாம்.
19.வாழைப்பழ பான்கேக்
20. வாழைப்பழ மஃபின்ஸ்
-
வாழைப்பழ பாப்சிசல்ஸ்
வாழைப்பழத்தை நறுக்கி அதில் ஸ்டிக்கை குத்தி ஃப்ரீஸ் செய்யுங்கள். சில் ஆறியதும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
பப்பாளி
22. பப்பாளி ஃபிங்கர்
பப்பாளி சிறிய துண்டுகளாக நறுக்கி குழந்தைக்கு கொடுக்கவும்.
மாம்பழம்
-
ப்ரோசன் மாம்பழ பாப்ஸ்
மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி, அதில் ஸ்டிக்கை குத்தி ஃப்ரீஸ் செய்யவும்.
-
மாம்பழ மஃபின்ஸ்
-
மாம்பழ பான்கேக்ஸ்
அவகேடோ
-
அவகேடோ கட்
அவகேடோ (வெண்ணெய் பழத்தை) நறுக்கி கொண்டு அதை பிரெட் தூளில் பிரட்டிச் சாப்பிட கொடுக்கலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply