Fruit Puree for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலகட்டமே திட உணவினை அறிமுகப்படுத்துவதற்கு சரியான நேரம்.இந்த காலகட்டத்தில் பழங்கள் மாறும் காய்கறிகள் செய்யப்பட்ட கூழ் வகைகளை அறிமுகப்படுத்துவது அவசியம்.அதிலும் பெரும்பாலான அம்மாக்களின் தேர்வு பழக்கூழாகத்தான் இருக்கும்.ஆரோக்யமானதாக மட்டும் அல்லாமல் தயாரிப்பதற்கும் எளிது.இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் திட உணவினை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.முதலில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தனி தனியாக மசித்து கொடுக்க வேண்டும்.இதனுடன் தாய்ப்பால் மற்றும் பார்முலா மில்க்கினை சேர்க்கலாம்.அதன் பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காய்கள் மற்றும் பழங்களை மசித்து கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் கொடுப்பதற்கு ஏதுவான ஆறு வகையான பழக்கூழ் ரெசிபிகளை காணலாம்.
Fruit Puree for Babies in Tamil:
ஆப்பிள் கூழ்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை என்பது பழமொழி.அதன்படி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த பழம் ஆப்பிள்.இதோ உங்களுக்கான ஆப்பிள் பழக்கூழ் ரெசிபி.
தேவையானவை
- ஆப்பிள்
செய்முறை
1.ஆப்பிளின் தோலை நீக்கவும்.
2.விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. நன்றாக ஆவியில் வேகவைக்கவும்.
4.நன்கு மசிக்கவும்.
5.ஆப்பிள் கூழ் ரெடி.
அன்னாசிப்பழ கூழ்
அன்னாசி பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் – சி மற்றும் ஆன்டி – ஆக்சிடண்டுகள் அதிகமாக இருப்பதால் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலுவளிக்க கூடியது .ஆனால் சில குழந்தைகளுக்கு அலர்ஜியினை அளிக்க கூடும்.அதனால் மூன்று நாள் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
தேவையானவை
- அன்னாசிப்பழம்
செய்முறை
1.தோலை நீக்கவும்.
2.சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3.நன்றாக ஆவியில் வேகவைக்கவும்.
4.நன்கு மசிக்கவும்.
5.அன்னாசிப்பழ கூழ் ரெடி.
கிவி கூழ்
குழந்தைகளுக்கு இந்த காலகட்டத்தில் வண்ண மயமான உணவின் மேல் நாட்டம் அதிகமாக இருக்கும்.கிவி பழம் இதற்கு சரியான தேர்வாக இருக்கும்.
தேவையானவை
- கிவி பழம்
செய்முறை
1.தோலை நீக்கவும்.
2.சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3.நன்கு மசிக்கவும்.
4.கிவி கூழ் ரெடி.
வாழைப்பழ கூழ்
நமக்கு பரிச்சயமான பழங்களில் ஒன்று வாழைப்பழம்.குலந்திகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்வதில் வாழைப்பழத்தின் பங்கு முக்கியமானது.
தேவையானவை
- வாழைப்பழம்
செய்முறை
1.தோலை நீக்கவும்.
2.நன்கு மசிக்கவும்.
3.வாழைப்பழகூழ் ரெடி.
தர்ப்பூசணி பழ கூழ்
உடலுக்கு அதிகப்படியான நீர்சத்தினை கொடுப்பதால் கோடைகாலங்களில் இப்பழத்தினை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.
தேவையானவை
- தர்ப்பூசணிபழம்
செய்முறை
1.தோலை நீக்கவும்.
2.சிறு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கவும்.
3.நன்கு மசிக்கவும்.
4.தர்ப்பூசணி பழ கூழ் ரெடி.
பப்பாளிபழ கூழ்
இதில் வைட்டமின் ஏ,நார்ச்சத்துக்கள் மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்துள்ளது.மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கலை தடுக்கக்கூடியது.
தேவையானவை
- பப்பாளிபழம்
செய்முறை
1.தோலை நீக்கவும்.
2.பாதியாக வெட்டி விதைகளை நீக்கவும்.
3.சிறு துண்டுகளாக நறுக்கவும்.
4.நன்கு மசிக்கவும்.
5.பப்பாளிபழ கூழ் ரெடி.
குழந்தைகளுக்கு புதிதாக திட உணவினை அளிப்பதற்கு முன்னால மூன்று நாள் விதியினை பின்பற்றுவது அவசியம்.முதலில் இரண்டு முதல் முயன்று ஸ்பூன் அளவிற்கு கொடுத்து பின்பு படிப்படியாக அதிகப்படுத்தலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply