godhumai kali recipe in Tamil: அரிசி தயாரிப்பதற்கு தேவையான நெல் பயிரிடப்படுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில நஞ்சை நிலங்களே விளைச்சலை கொடுத்த நிலையில் சிறுதானியங்கள் தான் பெரும்பாலான கரிசல் காடுகளில் பயிரிடப்பட்டன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்படிப்பட்ட சிறு தானியங்களை வைத்து பெரும்பாலும் நம் முன்னோர்கள் களி என்ற உணவு வகை தான் செய்து சாப்பிடுவர். இன்றும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒரு நாளில் உளுந்தங்களி,வெந்தயக்களி, கம்புகளி,கேப்பைகளி போன்றவற்றை மறக்காமல் சாப்பிடும் பழக்கம் உண்டு.
அப்படி செய்யும் களியில் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருந்ததால் நம் முன்னோர்கள் நல்ல ஆயுளுடன் வாழ்ந்தனர்.ஆனால் களி என்ற வார்த்தையே இன்றைய தலைமுறையில் உள்ள பல பேருக்கு தெரியாது.
இன்னும் சொல்லப்போனால் அது பலருக்கும் வேண்டா உணவுப் பொருளாக தான் உள்ளது. அப்படி இன்று நாம் பார்க்கப் போகும் களிவகை வடநாடுகளான குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் உண்ணப்படும் பிரதானமான கோதுமை களிதான்.
பொதுவாக நம் ஊர்களில் கோதுமைகளில் களி செய்வது அரிது தான். அந்தகாலங்களில் சளி தொந்தரவுகள் அண்டாமல் இருக்க இவ்வகையான களி செய்து சாப்பிடுவது வழக்கம் வழக்கம்.
இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுக்கு கோதுமையில் அத்தனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது சத்தான உணவு வகையாகும்.அது மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் சுவையாக இருப்பதால் நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இது உண்மையில் களி சாப்பிடுவது போல் இல்லாமல் அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு உணர்வை தான் தரும்.
நம் பகுதிகளில் களி என்று அழைக்கப்படும் உணவு அங்கு ராப் என்று சொல்லப்படுகின்றது. இதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் இதை செய்வதற்கு தேவையான பிரதான பொருளான
godhumai kali recipe in Tamil:
கோதுமையில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- கோதுமையில் குழந்தைகளுக்கு தேவையான தயாமின், கால்சியம், வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியை தரும் உணவு பொருளாகும்.
- குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு இந்த களி மிகவும் உதவுகின்றது.மேலும் கோதுமையை தவிர மத்த சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு மற்றும் சோள மாவு போன்றவற்றை சேர்த்தும் இந்த களியினை பண்ணலாம்.
- இதன் மூலம் கால்சியம் இரும்புச்சத்து உட்பட உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
- சிறுதானியங்கள் சேர்க்கும் பொழுது உடலில் தேவையான கொழுப்புப் பொருட்கள் அண்டாமல் தசை நார்களின் வளர்ச்சிக்கு துணை புரியும்.
- வாரம் ஒரு முறை கோதுமை மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு சிறுதானியத்தை வைத்து களியை செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
godhumai kali recipe in Tamil:
godhumai kali recipe in Tamil:
- கோதுமை மாவு -அரை டேபிள்.ஸ்பூன்
- சுக்கு பவுடர்- கால் டீஸ்பூன்
- நெய் -1-2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
- ட்ரை டேட்ஸ் பவுடர்- 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு
- தண்ணீர் அல்லது பால்- 8 மாதத்திற்குமேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்.
godhumai kali recipe in Tamil:
செய்முறை
- ஒரு கடாயை சூடாக்கி அதில் நெய்யை ஊற்றவும்.
- கோதுமை மாவை அதில் போட்டு லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
- தண்ணீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
- இரண்டு முதல் நான்கு நிமிடங்களுக்கு பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கடைசியாக பால் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்கு கிளறவும்.
- அல்வா போன்ற பதத்திற்கு வந்ததும் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் உடல் வலுவாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சிறுதானியம் என்ற கணக்கில் வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை விடுமுறை நாள் இருக்கும்பொழுது டீ,காபி போன்றவற்றை தவிர்த்து வெறும் வயிற்றினில் இந்த உணவினை சாப்பிடும் பொழுது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
குளிர்காலங்களில் சுக்குகளி,கோதுமை களி போன்றவற்றில் சுக்கு சேர்த்து சாப்பிடும் போது சளி தொந்தரவு அண்டாது. அதே போன்று வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெந்தயக் களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
நம் முன்னோர்கள் காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை உண்டு வாழ்ந்ததால் ஆரோக்கியமுடன் வாழ்ந்தனர்.
அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றினாலே நாமும் ஆரோக்கியமாக வாழலாம். நம்மால் நாள் முழுவதும் பின்பற்ற முடியாது என்பதால் வாரம் ஒரு முறையாவது இந்த மாதிரியான உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது நம் உணவுப் பொருட்களை பற்றிய அறிவும் அவர்களுக்கு கிடைப்பதோடு ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் அல்லவா!
godhumai kali recipe in Tamil:
ஆரோக்கியமான கோதுமை களி
Ingredients
- கோதுமைமாவு -அரை டேபிள்ஸ்பூன்
- சுக்குபவுடர்- கால் டீஸ்பூன்
- நெய்-1-2 டேபிள் ஸ்பூன்
- நாட்டுசக்கரை (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
- ட்ரைடேட்ஸ் பவுடர்- எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு
- தண்ணீர்அல்லது பால்- எட்டு மாதத்திற்குமேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்
Notes
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு களி உணவினை எப்பொழுது கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் நாம் திடஉணவு கொடுக்க ஆரம்பித்த உடனே சிறுதானியங்களை களி போன்று செய்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா?
இதில் சுக்கு போன்ற பொருள்கள் சேர்க்கப்படுவதால் குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது.
குழந்தைகளுக்கு சிறு தானியங்கள் கொடுக்கலாமா?
ஆறு மாத காலம் முடிந்தவுடன் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது சிறுதானியங்களை களிபோன்று செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply