Healthy Homemade Cake for Kids: கேக் என்றாலே நம் குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.குழந்தைகளை கவர்வதற்கு எண்ணிலடங்கா பிளேவர்கள் இன்று உண்டு.கண்களை கவரும் வகையில் அனைத்து நிறங்களிலும் இன்று கேக் வகைகள் உண்டு.ஆனால் அவை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகளும்,இனிப்பூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் அனைத்து கேக்குகளும் மைதாவினால் செய்யப்படுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு என்ன வழி என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இதோ உங்களுக்கான ஹெல்தியான கேக் ரெசிபி.
மைதா,செயற்கை நிறமூட்டிகள்,பேக்கிங் பவுடர் போன்றவை பயன்படுத்தாமல் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். இதற்கு ஓவென் கூட தேவையில்லை.குக்கர் மட்டும் இருந்தாலே போதும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான ட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்
ஹெல்தி அண்ட் டேஸ்டி ஸ்பான்ஜ் கேக்
- முட்டை -3
- ரீபைன்ட் கோதுமை மாவு – 1/2 கப்
- வெண்ணெய் – 200 கி
- பால் – 4 டே ஸ்பூன்
- வெல்லம்- 200 கி
- வெண்ணிலா எசென்ஸ் – சில துளிகள்.
Healthy Homemade Cake for Kids:
செய்முறை
1.முட்டையினை ஒரு பவுலில் உடைத்து வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2.மற்றொரு பவுலில் வெண்ணெய் மற்றும் வெல்லம் சேர்த்து கிரீம் பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
3.மாவை சல்லடையில் சலித்து கிரீம் கலவையுடன் சேர்க்கவும்.
4.முட்டை கலவையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5.பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.அகலமான அலுமினிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் மாவினை தூவவும்.
7.கலக்கி வைத்த கலவையினை அதில் ஊற்றவும்.
8.குக்கரில் தண்ணீரினை ஊற்றி சிறிது நேரம் சூடாக்கவும். 9.கேக் பாத்திரத்தை குக்கரினுள் வைத்து விசில் இல்லாமல் குக்கரை மூடவும்.
10.மிதமான தீயில் 20-25 நிமிடத்திற்கு சூடாக்கவும்.
11.டூத்பிக் குச்சியால் கேக் வெந்துள்ளதா என பார்க்கவும்.
12. 10-15 நிமிடங்களுக்கு ஆறவிடவும்.
13.சுவையான கேக் ரெடி.
14.விருப்பப்பட்ட பழங்களால் பரிமாறலாம்.
கேக்கை அலங்கரிக்க நம் குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட பழங்களை கொண்டு அழகுபடுத்தலாம்.இனி நம் குழந்தைகளுக்கு விருப்பமான கேக்கினை கடைகளில் வாங்காமல் ஹெல்தியாக வீட்டிலேயே செய்யலாம்.
இதையும் படிங்க: ஆரோக்கியமான அவல் லட்டு ரெசிபி
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply